நியூயார்க்: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனா, இத்தாலியை தாண்டி அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இத்தொற்று நோய், உலக நாடுகளில் வேலை இழப்பை ஏற்படுத்தியுள்ளதால், இந்தியா உள்ளிட்ட ஜி20 நாடுகளின் உலக தலைவர்கள் பங்கேற்ற காணொலி காட்சி சந்திப்பில் 5 டிரில்லியன் டாலர்கள் நிதி திரட்ட உறுதி ஏற்றுள்ளனர்.
அமெரிக்காவில் 85,612 பேர் கொரோனாவால், பாதிப்பு அடைந்துள்ளனர். இது கொரோனா தொற்று நோய் உருவான சீனாவின் வூகான் நகரை விட அதிகம். இதுவரை 1301 பேர் உயிரிழந்துள்ளனர். 2122 பேர் கவலைகிடமாக உள்ளனர்.

அதிபர் ட்ரம்ப் குடிமக்களுக்கு தெரிவித்துள்தாவது: "இந்த தொற்று வைரஸுக்கு எதிராக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அமெரிக்க குடிமக்களை பாதுகாப்பதற்காக நிதி, அறிவியல், மருத்துர்கள், மருந்தகம், மற்றும் ராணுவத்தை தீவிரமாக களமிறக்கியுள்ளோம். 40 சதவீத அமெரிக்கர்கள், ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தள்ளார்.
உலகின் பெரும் பொருளாதார நாடுகளான ஜி20 நாடுகளின் பொருளாதாரத்தில் கொரோனா தொற்று மந்த நிலையை ஏற்படுத்தி உள்ளதால், இக்கூட்டமைப்பு நாடுகள் 5 டிரில்லியன் நிதியை ஒதுக்க உறுதியேற்றுள்ளன. இந்நோய் எல்லையில்லாமல் அனைத்து நாடுகளிலும் பரவிவிட்டது.

இத்தாலி, ஸ்பெயின் நாடுகள் அதிகமான உயிழப்புகளை சந்தித்துள்ளன. அமெரிக்காவில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர், வேலையின்மை நலன்களுக்காக விண்ணப்பம் செய்துள்ளனர். நாட்டில் உணவு சேவை, கடைகள், போக்குவரத்து துறை உள்ளிட்ட 50 சதவீத அத்தியாவசிமற்ற வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் வேலை இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் மேயர் பில் தி பிளாசியோ கூறும்போது, "இது ஒரு தொடக்க நிலைதான், துரதிர்ஷ்டவசமாக நிலைமை இன்னும் மோசமான நிலையை எட்டலாம்." என கூறியுள்ளார். சென்ட் சபை, 2 டிரில்லியன் டாலர் நிதியை நேற்று(மார்ச்-26) ஒதுக்க முன்வந்துள்ளது. இது நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு 3,400 டாலர் ரொக்கமாக வழங்கப்படும்.
இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் கடந்த வாரத்தில் நோய் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இத்தொற்று நோய்க்கு விரைவாக மருந்து கண்டுபிடித்தாலும் கூட, உலகளவில் குறைந்தது 18 லட்சம் மக்கள், உயிரிழப்பு ஏற்படும் என பிரிட்டனின் இம்பீரியல் கல்லூரியின் ஆய்வு தெரிவித்துள்ளது.