பொது செய்தி

தமிழ்நாடு

சட்டம் பேசிய 'தம்பி'க்கு கட்டம் கட்டிய போலீஸ்

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (138)
Share
Advertisement
 இளைஞர், புதுக்கோட்டை, ஊரடங்கு,  சட்டம், போலீசார், போலீஸ்

புதுக்கோட்டை: அறந்தாங்கி மருத்துவமனை அருகே பைக்கில் வந்த நபரை போலீசார் மடக்கி, தேவையில்லாமல் வெளியே சுற்றக்கூடாது என்று அறிவுரை வழங்கினர். அப்போது, போலீசாரிடம் திமிராக பேசிய நபரை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று கவனிக்க ஐயோ சாமி, ஆளை விடுங்க என கெஞ்சிய இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அரசர்குளம் கிராமத்தை சேர்ந்த தினேஷ்(26) என்பவர் மாஸ்க், ஹெல்மெட் போடாமல் இன்று (மார்ச் 27) பைக்கில் செல்லும் போது, அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே போலீசார் மடக்கினர். தேவையில்லாமல் வெளியே சுற்றக்கூடாது என்று அறிவுரை வழங்கினர். அப்போது, இது என் ஊர். என் கோட்டை அப்படித்தான் ஊர் சுற்றுவேன். ஊர் சுற்றக்கூடாதுன்னு ஆர்டர் போட்ட முதலமைச்சரை இங்க வரச்சொல் ஓட்டுக் கேட்கும்போது மட்டும் அம்மா, தாயேன்னு வந்தாருல்ல அவரை இங்க வரச் சொல்லுங்க, சி.எம்., இங்க கூப்பிடுங்க, கொரோனாவ கண்ணுல காட்ட சொல் என்று தினேஷ் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும், அடுக்கு மொழியில் பேசியுள்ளார். இதனால் கடுப்பான அறந்தாங்கி போலீசார் அவரை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று வெளுத்தனர்.


latest tamil news



அப்போது, ஆள் நடமாற்றம் இல்லாத சாலையில் செல்பி எடுக்க வந்ததாக கூறிய தினேஷ் போலீசாரிடம் சாமி, ஆளை விடுங்க என கெஞ்சி மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து, அங்கிருந்து சென்றார். தினேஷ் போலீசாரிடம் வாக்கு வாதம் செய்யும் வீடியோ மற்றும் போலீஸ் ஸ்டேசனில் அடி வாங்கும் வீடியோ என இரண்டு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (138)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முகமூடி - ராஜகீழ்பாக்கம், செங்கை மாவட்டம்,இந்தியா
31-மார்-202012:05:28 IST Report Abuse
முகமூடி மிக அழகான தீர்ப்பு .அடியாத மாடு படியாது . அடிக்கு உதவாதவன் அண்ணன் தம்பிக்கு உதவ மாட்டான் .அருமை மிக சிறப்பு .
Rate this:
Cancel
Natarajan - Homs,சிரியா
30-மார்-202013:00:38 IST Report Abuse
Natarajan தம்பி சீமானின் சீடனாக இருப்பான். இனி வாயே திறக்க மாட்டான்.
Rate this:
Cancel
v sampath - CHENNAI,இந்தியா
29-மார்-202015:06:28 IST Report Abuse
v sampath மக்களின் உயிரை காக்க அரசாங்க அதிகாரிகள் தன் உயிரை பணயம் ஆக வைத்து இந்த வைரஸில் இருந்து நாட்டை காக்க அரும் பாடு படுகிறார்கள் . மக்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். வெல்வோம் மீள்வோம் கோரோனோ லிருந்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X