உயிரை மட்டும் சுமந்து கொண்டு....

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement



latest tamil news


எல்லா பெரிய நகரங்களில் காணப்படும் மக்கள்தான் அவர்கள்
தங்களது கிராமங்களில் இருந்த வாழ்வாதாரங்களை இழந்து பெரு நகரங்களுககு இடம் பெயர்ந்தவர்கள்


latest tamil news


கிடைத்த வேலையை பார்த்துக் கொண்டு அதி்ல் கிடைக்கும் சொற்ப கூலியை பெற்றுக் கொண்டு பாலங்களின் அடியில் நடைபாதைகளில் வெட்ட வெளியில் என்று குடும்பம் குடும்பமாய் வாழ்ந்து கொண்டு இருந்தனர்.


latest tamil news


ஆனால் அவர்களின் வாழ்வாதாரம் இப்போது மிகப்பெரிய கேள்விக்குரியாகி இருக்கிறது.
உழைத்துப் பிழைத்த இந்த கூட்டத்தினரால் யாராவது ஒருவர் கொண்டுவந்து இரக்கத்தின் பெயரால் சாப்பாடும் ரொட்டியும் போடுவது பிடிக்கவில்லை.
பசி வரும் போது சாப்பாடு கிடைப்பது இல்லை சாப்பாடு வரும் போது பசி இருப்பது இல்லை
சமூக இடைவெளி அடிக்கடி கைகழுவுதல் சத்தான உணவு சுகாதாரமான இருப்பிடம் என்பதில் எல்லாம் இவர்களுக்கும் விருப்பம்பம்தான் ஆனால் அதற்கான வாய்ப்புதான் இல்லை.
இப்படியே போனால் கொரானாவால் சாகிறோமோ இல்லையோ மனஉளைச்சலால் இறந்துவிடுவோம் என்று முடிவு செய்த இவர்களில் பலர் எது நடந்தாலும் அது தங்கள் கிராமத்திலேயே நடக்கட்டும் என்று முடிவு செய்து கிளம்பிவிட்டனர்.
ரயில் பஸ் என்று எந்த வாகனமும் கிடையாது டில்லியில் இருந்து அவர்கள் சொந்த கிராமத்திற்கு நுாறில் இருந்து நுாற்றைம்பது கிலோமீட்டர் துாரம் போகவேண்டியிருக்கும் இரண்டு மூன்று நாள் நடக்கவேண்டியிருக்கும் ஆனால் அது பற்றி அவர்கள் கவலைப்படவில்லை
போவது என்று முடிவு செய்த பிறகு அவர்களை நிறுத்து டில்லியில் யாரும் இல்லை
சிலருக்கு தள்ளுவண்டி கிடைத்தது அதில் வயதான தங்கள் பெற்றோரையும் நடக்கமுடியாத குழந்தையையும் மிச்சம் மீதியுள்ள குடும்ப சொத்துக்களையும் அள்ளிப் போட்டுக் கொண்டு நடக்கி்ன்றனர்.
பலருக்கு அது போன்ற தள்ளுவண்டிகளும் கிடைப்பது இல்லை தங்கள் உயிரை மட்டும் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டனர்...
எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
27-மார்-202022:48:04 IST Report Abuse
J.Isaac நேற்று இதுமாதிரி உணவுக்காக ஏங்கும் மக்கள் பற்றி செய்தி வந்தது. சிறிது நேரத்தில் நீக்கப்பட்டுவிட்டது ஏன்?
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
27-மார்-202022:45:15 IST Report Abuse
J.Isaac வாழ்வாதாரம் அற்ற இவர்களுக்கு ஆதார் இருக்காது.வாக்காளர் அட்டை இருக்காது. ரேஷன் அட்டை இருக்காது. அரசின் உதவி கிடைப்பது கேள்விக்குறியே. இந்தியாவின் மறுபக்கம் வெளியே தெரிகிறது. பரிதாபமான நிலைமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X