எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

வீடுகளுக்கான மின் கட்டணம் 500 யூனிட் வரை ரத்து செய்யப்படுமா

Updated : மார் 28, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
'கொரோனா' வைரஸ் பாதிப்பால், தமிழகத்தில், 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில், மின் கட்டணம் ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் எழுந்துள்ளது.தமிழக மின் வாரியம், வீடுகளுக்கு, 100 யூனிட் வரை இலவசமாகவும்; 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. அதற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகள், மானியம் இல்லாமல், முழு கட்டணத்தையும் செலுத்த
வீடுகளுக்கு,மின் கட்டணம்,500 யூனிட் வரை,ரத்து, எதிர்பார்ப்பு, செய்யப்படுமா

'கொரோனா' வைரஸ் பாதிப்பால், தமிழகத்தில், 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில், மின் கட்டணம் ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் எழுந்துள்ளது.

தமிழக மின் வாரியம், வீடுகளுக்கு, 100 யூனிட் வரை இலவசமாகவும்; 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. அதற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகள், மானியம் இல்லாமல், முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
இதற்காக, மின் வாரியத்திற்கு, ஆண்டுதோறும் ஏற்படும், 3,279 கோடி ரூபாய் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது.தற்போது, மொத்தம் உள்ள, 2.14 கோடி வீட்டு மின் இணைப்பில், 72 லட்சம் வீடுகள், 100 யூனிட் இலவச திட்டத்தின் கீழ் வருகின்றன. தொடர்ந்து, 58.79 லட்சம் வீடுகள், 200 யூனிட் வரையும்; 68 லட்சம் வீடுகள், 500 யூனிட் வரையும் மின்சாரம் பயன்படுத்துகின்றன.

மேலும், 500 யூனிட் மேல் மின்சாரம் பயன்படுத்தும் பிரிவில், 15 லட்சம் வீடுகள் உள்ளன. தமிழகம் உட்பட நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, ஏப்ரல், 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், தினக்கூலிகள் உள்ளிட்ட ஏழை மக்களின் வாழ்வாதாரம், முற்றிலும் முடங்கியுள்ளது.எனவே, ஏப்., 14 வரை, 500 யூனிட் அளவுக்கு மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில், மின் கட்டணத்தை, மின் வாரியம் தள்ளுபடி செய்யுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் எழுந்துள்ளது.

மேலும், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் போன்ற பிரிவுகளை சேர்ந்தவர்கள், மின் கட்டணத்தை தவணை முறையில் செலுத்த அவகாசம் அளிக்கும்படியும், வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: வீடுகளுக்கு, இரு மாதங்களுக்கு, ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இம்மாதம், 22ம் தேதி முதல், ஏப்., 14 வரை, மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள், முந்தைய மாத கட்டணத்தையே செலுத்த, சலுகை வழங்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால், 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு, மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உட்பட, பல தரப்பினரிடம் இருந்தும், பல்வேறு கோரிக்கைகள் வருகின்றன. இதுதொடர்பாக, அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் --

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
28-மார்-202020:31:57 IST Report Abuse
அம்பி ஐயர் இலவசம் என்பது ஏற்புடையதல்ல.... மத்திய மற்றும் மானில அரசு ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும் அனைத்து சலுகைகளையும் முதலில் நிறுத்த வேண்டும்... கேஸ் மானியம்... ரேஷன் மானியம்....மின்சார மானியம்.... இப்படி எல்லாம் நிறுத்தினாலேயே அரசுக்கு நிறைய மிச்சமாகும்.... மூன்று மாதங்கள் சலுகை கொடுக்கலாம்.....
Rate this:
Cancel
Sugavanam Krishnamurti - Coimbatore,இந்தியா
28-மார்-202015:10:47 IST Report Abuse
Sugavanam Krishnamurti எல்லோரும் வீட்டில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் 500 யூனிட்டிற்குள் உபயோகப் படுத்தி கொண்டி ருந்தவர்கள்கூட 500 யூனிட்டை தாண்டி செல்ல வாய்ப்புகள் அதிகம் . ஆகவே 500 யூனிட் வரையிலும் மானிய விலையிலும் 501 யூனிட்டிலிருந்து மாத்திரம் மானியம் இல்லாத கட்டணத்தில் என்று வரும் இரண்டு பில்லிங் சைக்கிளிலும் செய்தால் எல்லோருக்கும் உதவியாக இருக்கும்
Rate this:
Cancel
K RAGHAVAN - chennai,இந்தியா
28-மார்-202014:08:36 IST Report Abuse
K RAGHAVAN it is not good they have to give more time
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X