பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' தடுக்க நிதி கொடுங்க! :பொது மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

Updated : மார் 28, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
 கொரோனா, தடுக்க, நிதி கொடுங்க!,பொது மக்களுக்கு,தமிழக அரசு,வேண்டுகோள்

சென்னை -'கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மேற்கொள்ள, மனமுவந்து நிதி வழங்குங்கள்' என, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெரும் எண்ணிக்கையிலான, நோய் தொற்று இனங்களை திறம்பட கையாள, தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்த வேண்டி உள்ளது. மருத்துவமனைக்கான படுக்கைகள், 'வென்டிலேட்டர்'கள், மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள், கிருமி நாசினி சாதனங்கள், வேதிப்பொருட்கள் போன்றவற்றை வழங்க, கணிசமான நிதி ஆதாரம் தேவைப்படுகிறது.

மேலும், நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க ஏதுவாக, தனியார் மருத்துவமனைகளையும், ஆயத்தப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. வேளாண்மை, கட்டுமானம் மற்றும் பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர்கள் தினக்கூலி இழப்பை சந்திக்கின்றனர். ஏழை மற்றும் ஆதரவற்றோருக்கு, உணவு அளிக்க, உதவி தேவைப்படுகிறது.

மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் குடிமக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள், அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவ, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, மனமுவந்து, தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். நன்கொடைகளுக்கு, 100 சதவீதம் வருமான வரி விலக்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டு மக்களிடம் பெறப்படும் நிவாரணத்திற்கு, அயல்நாட்டு பங்களிப்பு சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்படும்.நன்கொடைகளை, வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை, பற்று அட்டை வழியே, ereceipt.tn.gov.in/cmprf/cmprf.htm என்ற, இணையதளத்தில் செலுத்தி ரசீது பெறலாம்.

சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், 117201000000070 என்ற, சேமிப்பு கணக்கு எண்ணுக்கு, இ.சி.எஸ்., வழியாக நேரடியாக அனுப்பலாம். ஐ.எப்.எஸ்., கோடு எண், ஐ.ஓ.பி.ஏ., 0001172; சி.எம்.பி.ஆர்.எப்., பான் ஏஏஏஜிசி0038எப்.இ.சி.எஸ்., வழியே நிதி அனுப்புவோர், அலுவலக பற்றுச்சீட்டு பெற, தங்கள் பெயர், செலுத்தும் தொகை, வங்கி மற்றும் கிளை, செலுத்தப்பட்ட தேதி, நிதி அனுப்பியதற்கான எண், தங்கள் முகவரி, இ- - மெயில் விபரத்தை குறிப்பிட வேண்டும்.

மின்னணு பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள், குறுக்கு கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை வழியாக அனுப்பலாம். 'அரசு துணை செயலர் மற்றும் பொருளாளர், முதல்வர் பொது நிவாரண நிதி, நிதித்துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை- 600009, தமிழ்நாடு, இந்தியா' என்ற, முகவரிக்கு அனுப்பவும்.

தற்போதைய நிலையில், நேரடியாக முதல்வரிடமோ, அரசு அலுவலர்களிடமோ, நன்கொடை வழங்குவதை ஊக்குவிக்க இயலாது. எனினும், பத்து லட்சம் ரூபாய்க்கு மேல், நிதியுதவி செய்யும் நபர்கள், நிறுவனங்களின் பெயர்கள், பத்திரிகை செய்தியாக வெளியிடப்படும். அனைத்து நன்கொடைகளுக்கும், உரிய ரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு, அரசு தெரிவித்துள்ளது.***

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-மார்-202015:39:32 IST Report Abuse
தமிழ் இப்போது இருக்கும் சூழ்நிலையில் பொதுமக்கள் கொடுப்பது என்பது கிட்டத்தட்ட முடியாத காரியம் என்பது என்னுடைய கருத்து. இருப்பினும் வசதியானவர்கள் தங்களால் முடிந்த அளவில் கொடுக்கலாம். இல்லாதவர்களுக்கு உதவும்.
Rate this:
Cancel
28-மார்-202008:57:21 IST Report Abuse
இராஜாராமன்.கே மதிப்பிற்குறிய முதல்வர் அவர்களே,கடந்த ஒரு வருட காலம் சிறப்பான மாற்றங்களையும் ஒரு முதிர்வு தன்மையும் காணமுடிகிறது உங்களிடமும் கட்சிடமும் அதிலும் தற்போதைய அசாதாரண சுழலில் தாங்கள் மற்றும் சுகாதாரதுறை அமைச்சரின் பங்களிப்பு அசாத்யமானது, பொது மக்களிடம் நன்கொடைகளை கேட்பது ஒருபுறம் இருக்கட்டும் எந்த ஒரு கட்சியும் செய்யாத ஒரு விஷயத்தை தாங்கள் தொடங்கி வையுங்கள் அஇஅதிமுக சார்பாக கட்சி நிதியில் இருந்து ஒரு தொகையை முதலில் அறிவித்து அனைத்து மக்களின் மனங்களிலும் நீங்காத இடம் பிடியுங்கள் பிறகு அனைத்து கட்சிகளும் கட்டாயம் கொடுக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகும் மாற்றத்தை உங்களிடம் இருந்து ஆரம்பியுங்கள் எம்.ஜி.யாரை போல் நீங்காத இடம் பிடியுங்கள் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
28-மார்-202008:46:15 IST Report Abuse
RajanRajan முன்னோட்டமாக அத்தனை தமிழக அரசியல்வாதிகள் MLA MP கவுன்சிலர் வரை முதல்வர் கோரிக்கையை ஏற்று நிதி அளிக்க முன் வாருங்கள். இவர்களிடம் இருப்பதெல்லாம் மக்களின் பணம் தானே இப்போ மக்களின் நலன் கருதி வாரி வழங்குங்கள். முதல் பொட்டி அறிவாலயத்தில் அம்மாவழி அறக்கட்டளையிலும் துவங்கட்டும். இப்போ தெரியும் இவிங்களுக்கு மக்களின் மேல் நாட்டின் மேல் என்ன அக்கறை உள்ளது என்பது.
Rate this:
Srinivas - Chennai,இந்தியா
28-மார்-202013:34:50 IST Report Abuse
Srinivasரைடு விட்ட பல ஆயிரம் கோடிகள் என்னவானது? மக்கள் கொடுக்கவேண்டுமாம்? எதற்கு? ஸ்டிக்கர் ஒட்டி பெயர் வாங்கவா? கொடநாடு பங்களா, டீ எஸ்டேட், சிறுதாவூர் பங்களா, கங்கை அமரன்,போயஸ் கார்டன் பங்களாக்களில் வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான கோடிகளை வெளியில் கொண்டுவந்து உதவி செய்ய வேண்டியது தானே? மக்கள் படும் அவதியில் நன்கொடைவேணுமாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X