சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'எப்பவுமே தாமதம்'

Added : மார் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'எப்பவுமே தாமதம்'

'எப்பவுமே தாமதம்'

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர்கள், செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் முன்னிலையில், 'கொரோனா' தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம், சமீபத்தில் நடந்தது. கலெக்டர், கதிரவன், எஸ்.பி., சக்திகணேசன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட, 70 பேர் பங்கேற்றனர்.அனைவரும், குறிப்பிட்ட துார இடைவெளியில், முக கவசத்துடன் பங்கேற்றனர். கூட்டம் முடிந்ததும், பத்திரிகையாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.சற்று நேரத்தில், வெளியே வந்த, பி.ஆர்.ஓ., சதீஷ்குமார், 'நோய் தொற்று பரவுவதை தவிர்க்க, பத்திரிகையாளர்கள் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. செய்தி, 'பிரஸ் ரிலீஸாக' உங்களுக்கு வந்துவிடும்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'நல்ல விஷயம் தான்... ஆனால் இதை, பத்திரிகையாளர்கள் வர வேண்டாம் என, முன்பே சொல்லியிருக்கலாம்...' என்றார். அருகிலிருந்த மற்றொரு நிருபர், 'அரசு அதிகாரிகளுக்கு, எதையும் தாமதமாக செஞ்சே பழகிருச்சு' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
28-மார்-202006:08:12 IST Report Abuse
D.Ambujavalli அனாவசியமாக பத்திரிகையாளர்களை இழுத்தடித்து, பிறகு திருப்பி அனுப்பி, அவர்கள்கேள்விகளை எதிர்கொள்ள தயக்கமும் காரணமாக இருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X