சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மார் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

த.மா.கா., தலைவர், வாசன்: கொரோனா வைரஸ் பாதிப்பால், சிறு, குறு மற்றும் குடிசை தொழில், கட்டுமானத் தொழில், வேளாண் தொழில் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், பெரும்பாலானோர் வங்கிகளில் கடன் வாங்கி, தொழிலில் ஈடுபட்டவர்கள். எனவே, வாங்கிய கடனுக்கு, மாத தவணை செலுத்துவதை, ஆறு மாத காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: சொல்லி வைத்தாற் போல, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சியினரும், சிறு தொழில் புரிவோர் மீது அக்கறை காட்டுகிறீர்கள். அதை அறிந்து தான், மத்திய, மாநில அரசுகள், ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்துள்ளதோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. எப்படியோ, ஏழைகள், சாதாரண மக்கள் அவதிப்படக் கூடாது என்ற எண்ணம் பாராட்டுதலுக்குரியதே!

ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ: நான்கு லட்சம் மக்களை பாதித்து, 20 ஆயிரம் உயிர்களை பலி வாங்கிய, கொரோனா வைரஸ், நாட்டின், 130 கோடி மக்களில், 13 கோடி முதல், 25 கோடி பேரை தாக்கும் என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் குறைந்தது, ஒரு லட்சம் பேர், தீவிர நோயாளிகளாகும் ஆபத்து இருக்கிறது. பிரதமர் அறிவித்த, 21 நாள் ஊரடங்குக்கு, அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

'டவுட்' தனபாலு: கொரோனா விஷயத்திலும், பிரதமருக்கு எதிராக ஏதாவது சொல்வீர்களோ என்ற, 'டவுட்' இருந்தது; அப்பாடா... அப்படி இல்லை. எனினும், நீங்கள் சொல்லும் புள்ளிவிபரம், அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்திலும், நல்ல விஷயங்களை அறிவுறுத்தும் விதத்திலும், அரசியல் தலைவர்கள் விழிப்புணர்வு செயல்களில் ஈடுபடலாமே!



பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி: 21 நாள் ஊரடங்கில், அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், மன நிறைவு அளிக்கின்றன. ஆனால், மக்களில் ஒரு தரப்பினர், இதை விளையாட்டாகவும், விடுமுறையாகவும் நினைத்து, சாலைகளில், வாகனங்களில், சுதந்திரமாக வலம் வருவது கவலை அளிக்கிறது. ஊரடங்கை மீறுவோர், சுற்றியுள்ள அப்பாவிகளுக்கும், ஆபத்தை ஏற்படுத்துகின்றனர்.

'டவுட்' தனபாலு: காலம் காலமாக சுதந்திரமாக சுற்றி வந்தவர்களை, 'வீடுகளுக்குள் முடங்குங்கள்' என, அரசு சொல்லும் போது, கேட்கத் தான் மாட்டார்கள். இத்தகையவர்களால், கொரோனா பூதம், அப்பாவிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடுமே என, இத்தகையோர் கவலைப்படுவது இல்லையோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. எனவே, உங்களைப் போன்றோர் தான், புரியாதவர்களுக்கு நல்ல புத்தி சொல்ல வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
28-மார்-202006:05:05 IST Report Abuse
D.Ambujavalli எப்போதுமே ஏட்டிக்குப் போட்டியாகப் பேசும் எதிர்க்கட்சிகளைக்கூட 'ஊரடங்கு சட்டம் நியாயமானது எல்லாரும் ஒத்துழையுங்கள்' என்று ஒரே குரலில் பேச வைத்ததே கொரோனாவின் நல்ல செயல் ஆனால் புள்ளிவிவரங்களை சதாகாலம் அடுக்கி, பாமர மக்களை, ஏதோ அடுத்தது எனக்கோ, என் குடும்பத்துக்கோ என பீதியடைய வைக்காமல், பாசிட்டிவாக அறிக்கை விட்டால் நல்லது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X