சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

பெண் போலீஸ் அதிகாரியின் மாத வசூல் ரூ.20 லட்சம்!

Added : மார் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெண் போலீஸ் அதிகாரியின் மாத வசூல் ரூ.20 லட்சம்!குப்பண்ணா வீட்டில் கூடிய பெரியவர்கள், அவரது வீட்டு பில்டர் காபியை ரசித்து, ருசித்து பருகினர்.''காபின்னா, குப்பண்ணா வீட்டு காபி தான்... பேஷ்... பேஷ்... ரொம்ப நன்னாயிருக்கு...'' என, உசிலைமணி பாணியில் கூறிச் சிரித்த அண்ணாச்சி, ''கொரோனாவால, ஊதிய ஒப்பந்தம் தள்ளி போயிட்டு வே...'' என, விஷயத்திற்கு வந்தார்.''எந்தத் துறையிலங்க...''
 பெண் போலீஸ் அதிகாரியின் மாத வசூல் ரூ.20 லட்சம்!

பெண் போலீஸ் அதிகாரியின் மாத வசூல் ரூ.20 லட்சம்!

குப்பண்ணா வீட்டில் கூடிய பெரியவர்கள், அவரது வீட்டு பில்டர் காபியை ரசித்து, ருசித்து பருகினர்.''காபின்னா, குப்பண்ணா வீட்டு காபி தான்... பேஷ்... பேஷ்... ரொம்ப நன்னாயிருக்கு...'' என, உசிலைமணி பாணியில் கூறிச் சிரித்த அண்ணாச்சி, ''கொரோனாவால, ஊதிய ஒப்பந்தம் தள்ளி போயிட்டு வே...'' என, விஷயத்திற்கு வந்தார்.''எந்தத் துறையிலங்க...'' என, விசாரித்தார் அந்தோணிசாமி.''திருப்பூர்ல தொழிற்சங்கங்களும், தொழில் அமைப்புகளும் கூடி பேச்சு நடத்தி, பனியன் தொழிலாளர்களுக்கு, ஊதிய ஒப்பந்தம் போடுவாவ... கடைசியா, 2016ல போட்ட ஒப்பந்தம், மார்ச், 31ம் தேதியோட முடியுது வே...''வழக்கமா, ஊதிய ஒப்பந்த பேச்சுல சுறுசுறுப்பு காட்டுற சங்கங்கள், இந்த முறை மெத்தனமாகவே இருந்துட்டு... ''ஒருவழியா, போன, 15ம் தேதி, ஏழு தொழிற்சங்கங்கள் சேர்ந்து, சம்பள பேச்சுக்கான கோரிக்கை பட்டியல் தயாரிச்சு, தொழில் அமைப்புகளுக்கு அனுப்புச்சு வே...''தொழில் அமைப்புகள் சார்புல, 'கொரோனா பாதிப்பு முடிஞ்சதும் பேச்சு வச்சுக்கலாம்'னு சொல்லிட்டாவ... ''தங்களது தாமதத்தால, ஊதிய உடன்படிக்கை தள்ளி போயிட்டதால, தொழிற்சங்கங்கள் தரப்பும், மவுனமாயிட்டு வே...'' என்றார், அண்ணாச்சி.''பாதாள சாக்கடை பணி, படு மந்தமா நடக்குது பா...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார், அன்வர்பாய்.''எந்த ஊருல ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''கோவை மாவட்டம், பொள்ளாச்சியில, 170 கோடி ரூபாய் செலவுல, பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடக்குது... 2016ம் வருஷம் துவங்கிய பணி, ஆமை வேகத்துல நடக்குது பா...''அங்கங்க குழிகளை தோண்டி போட்டிருக்கிறதால, வாகனங்கள்ல போகிற மக்கள் ரொம்பவே பாதிக்கப்படுறாங்க... ''இதனால, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தா, ஆளுங்கட்சிக்கு பலத்த அடி விழும்னு நினைக்கிற, அ.தி.மு.க.,வினர், தேர்தல் வர்றதுக்குள்ள திட்டப் பணிகளை முடிக்கணும்னு, மேலிடத்துக்கு தகவல் அனுப்பியிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''சந்துக் கடை எண்ணிக்கையை அதிகரிச்சுட்டாங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்த அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''திருச்சி, துறையூர் பகுதி பெண் போலீஸ் அதிகாரி ஒருத்தர், சந்துக் கடைகள்ல, மது விற்பனை செய்றவங்களை கூப்பிட்டு, 'நீங்க இன்னும் எத்தனை கடைகளை வேணும்னாலும் திறந்துக்கலாம்... ஆனா, 'கட்டிங்' கரெக்டா வந்துடணும்'னு கறாரா சொல்லிட்டாங்க...''இதனால, இவங்க வந்த ஒன்றரை வருஷத்துல, சந்துக் கடைகளின் எண்ணிக்கை, 200 ஆக உசந்துடுச்சுங்க... இந்தக் கடைகள்ல மட்டும், மாசம், 20 லட்சம் ரூபாய், 'கல்லா' கட்டுறாங்க...''மாமூல் வசூலிக்கவும், சக போலீசாரை நம்பாம, தனக்கு தெரிந்த, 'ஜிம் பாய்ஸ்'களை அழைச்சிட்டு போறாங்க... ''போன, 21ம் தேதி, முசிறி பகுதி சந்துக் கடைகள்ல, பெண் அதிகாரியும், 'ஜிம் பாய்ஸ்களும் சேர்ந்து, சந்துக் கடையினரை மிரட்டி, 2 லட்சம் ரூபாயை வாரிட்டு போயிட்டாங்க...''பெண் அதிகாரியை தட்டிக் கேட்டா, 'மேலதிகாரி வரை கவனிக்கிறேன்'னு அவங்க பெயர் பட்டியலையே வாசிக்கிறாங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.''சுமதி, இந்த காபி டம்ளர்களை எடுத்துண்டு போய் அலம்பி வச்சுடு...'' என, தன் பேத்திக்கு உத்தரவிட்டபடியே குப்பண்ணா எழ, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A R J U N - sennai ,இந்தியா
28-மார்-202011:16:47 IST Report Abuse
A R J U N .................மேலதிகாரி வரை கவனிக்கிறேன்'னு அவங்க பெயர் பட்டியலையே வாசிக்கிறாங்க...'சுமத்தின்னா சொம்மாவா,..மந்திரியா கூட பிடிச்சி வெச்சிருப்பாரு,..படா பெண்மணி..DGP காதுக்கு போனா மாட்டிப்பாங்களே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X