பொது செய்தி

தமிழ்நாடு

பிரிட்டனில் 6 மாத ஊரடங்கு; இந்தியாவில் சாத்தியமா?

Updated : மார் 28, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement

பிரிட்டனில் ஆறு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா தாக்கத்தை விரைவில் கட்டுப்படுத்தலாமென பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தெரிவித்துள்ளார்.latest tamil newsநாட்டின் பொருளாதாரத்தை பற்றி தற்போது விவாதிப்பது தேவையற்றது என போரிஸ் அரசு கருதுகிறது. பிரதமர் மோடி முதல் டிரம்ப் வரை பெரும்பாலான அரசியல் தலைவர்களின் கருத்து இதுவாகவே உள்ளது. ஆனால் இவ்வளவு நீண்ட காலம் ஊரடங்கு கடைபிடித்து அனைவருக்கும் உணவு, அத்தியாவசிய பொருட்கள் அளிப்பது சாத்தியமா என்கிற கேள்வி எழுகிறது. ஆனால் தன் வளங்களை வாரி கொடுக்க பிரிட்டன் தயாராகவே உள்ளது.

பிரதமரின் 21 நாள் ஜனதா கர்ஃபியூவையே பல இந்தியர்கள் புறக்கணிக்கும் வேளையில் தற்போது நீண்ட கால ஊரடங்கு இந்தியாவில் சாத்தியமில்லை என்கின்றனர் நடுநிலையாளர்கள்.


latest tamil news
இதேபோல ஆஸி.,யில், வெளிநாடு வாழ் ஆஸ்திரேலியர்கள் தவிர வெளிநாட்டவர்களுக்கு விமானம் மூலம் ஆஸி வர கட்டாயத் தடை விதிக்கப்பட்டுள்ளது.வெளிநாடு வாழ் ஆஸ்திரேலியர்கள் நாட்டுக்குள் நுழைந்து 14 நாட்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவர். பின்னர் அவர்களுக்கு கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கக்கப்படுவர்.இதனை 6 மாதங்களுக்கு கட்டாயமாகக் கடைபிடிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் சுற்றுலாத் துறை பாதிக்கப்படுமென்றாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இது பின்பற்றப்படுகிறது. ஆஸி.,யின் இந்த தைரியமான உத்தரவு பிற நாடுகளுக்கு முன் மாதிரியாகத் திகழ்கிறது.ஒரு நாளைக்கு 8,700 வெளிநாட்டவர்கள் தமிழகத்திற்கு வந்து இறங்குகின்றனர்.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கைப்படி இவர்கள் அனைவருக்கும் உடல் தட்பவெப்ப சோதனை நடத்தப்படுகிறது. கொரோனா அறிகுறி இருப்பவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்படுகிறார்கள். இல்லாதவர்கள் 14 நாட்கள் கால அவகாசத்தில் காய்ச்சல், தொண்டை வறட்சி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனையில் வந்து சேர அறிவுறுத்தப்படுகின்றனர். இதனை மீறி வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் கொரோனா அறிகுறியுடன் வெளியே சுற்றினால் அவர்களது பாஸ்போர்ட் முடக்கப்படும் என எச்சரிக்கப்படுகின்றனர்.இது தேவை இல்லாத வேலை.

இதற்கு பதிலாக வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தவிர பிற நாட்டு குடிமக்களுக்கு தமிழகத்தில் நுழைய அனுமதி மறுக்கவேண்டும். ஆஸி.,யின் முறையை இந்தியாவிலும் பின்பற்றினால் கொரோனா பரவுவதை விரைவில் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் சில அரசியல் விமர்சகர்கள். ஆனால் இது நடைமுறையில் சாத்தியமா என்பது கேள்விக்குறிதான்..!

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
28-மார்-202010:41:32 IST Report Abuse
K.Sugavanam ஆச்சு மற்றும் காணொளி ஊடகங்கள் ஒரு ஆறு மாதம் அமைதியாக இருந்தால் நல்லது..வீண் வதந்திகள்,வெறுப்பு உணர்வு பேச்சுகள் பரவாது..மக்கள் கொரோனா ஒழிப்பில் முழுமையாக ஈடுபட முடியும்..
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
28-மார்-202009:49:42 IST Report Abuse
Chandramoulli In Tamil Nadu one person arguing with police without any concrete evidence criticized govt actions and both the women police sincerely adviced , and lot of arguments with the police. Finally he was punished in police station. That is different. Opposition political leaders and Seeman they spolied younger generation by feeding wrong opinion, not to obey government rules. Ask for clarification. This is not good. TN younger generation is going in a wrong direction
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
28-மார்-202008:42:22 IST Report Abuse
natarajan s நம் நாட்டில் குதர்க்க வாதிகள் அதிகம், அதனால் இது சாத்தியமில்லை. 21 நாட்களே நாக்கு தள்ளுகிறது இதில் ஆறு மாதம் எல்லாம் ரொம்ப அதிகம். மேலும் யார் செத்தால் என்ன எனக்கு சோறு வேண்டும் (கிடக்கிறது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை ) என்ற மனோ நிலை அதிகம். எல்லாவற்றையும் குறை சொல்ல நமது நாட்டு கம்மிகள் போதும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X