மனங்களை வென்ற மனிதர்கள்

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement

கொரோனா பாதிப்பு உலகமெங்கும் தீவிரமடைந்துள்ளதால். மக்கள் வீட்டிலே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணி, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோர், ஊடகம், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் மட்டுமே வெளியே வந்து தங்களின் பணியை செய்யும் அவசியம் உள்ளது.latest tamil news
கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க இவர்கள் கடுமையாக பாடுபடுகின்றனர். சரியான உணவு இல்லாமல், வீட்டிற்கும் செல்லாமல் என பலவற்றைத் தியாகம் செய்கின்றனர். ஜெருசலேம் நகரில் அவசர சிகிச்சைக்காக பணியில் ஈடுபட்டிருக்கும் யூதரான ஆபிரகாம் மிண்ட்ஸ் 42, இஸ்லாமியரான ஜோஹர் அபு ஜமா 39, இவர்கள் இருவரும் பணியின் இடைவேளையில் சாலையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது பிரபலமடைந்துள்ளது.


அவசர சிகிச்சைக்காக அன்று நாள் முழுவதும் சுற்றிக்கொண்டிருந்த இவர்களுக்கு ஜெபிக்கவும், நமாஸ் செய்யவும் நேரமில்லை. மாலை 6 மணி ஆனதும் இதற்கு மேல் நேரம் கிடைக்காது என எண்ணிய இருவரும் ஆம்புலன்ஸ் வாகனத்தை சாலையின் ஒரு புரத்தில் நிறுத்திவிட்டு. சாலையிலேயே பிரார்த்தனை செய்துள்ளனர். ஆபிரகாம் தனது தோளில் வெள்ளை கருப்பு நிறத்திலான துணியை அணிந்தபடி ஜெருசலேமை நோக்கி பிரார்த்தனை செய்கிறார்.
அபு ஜமா மெக்கா இருக்கும் திசையை நோக்கி சாலையில் மண்டியிட்டபடி பிரார்த்தனை செய்கிறார். மதத்தால் இருவரும் பிரிந்தாலும் நட்புறவோடு இருக்கின்றனர். இருவரும் இணைந்து வேலை செய்வதால் மாதத்தில் இரண்டு, மூன்று முறை இவர்கள் சந்தித்துக்கொள்வதுண்டு. மேலும் இருவரும் மற்றவரின் மதத்தின்மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.


latest tamil newsஇவர்கள் இருவரும் ஹீரோவாக இருந்தாலும் அதை அவர்கள் வெளிப்படுத்திக் கொள்வது இல்லை. கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டுள்ளது இப்படியான சூழ்நிலையில் கடவுள் நிச்சயமாக இந்த துயரத்திலிருந்து மீண்டு வர உதவுவார் அனைவரும் நம்பிக்கையோடு இருப்பதோடு, பிரார்த்தனையும் செய்ய வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைவாக இருந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் உள்ளனர் என ஜெருசலேம் மருத்துவ அதிகாரி கூறினார்.

ஆபிரகாம் மிண்ட்ஸ், ஜோஹர் அபு இருவரும் 15 நிமிடம் பிரார்த்தனை செய்துவிட்டு தங்கள் பணியைச் செய்ய துவங்கினர். மதத்தால் பிரிந்தாலும் மனிதத்தால் இணைந்து இவர்களின் வேலையை மக்கள் பாராட்டுவதோடு சமூகவலைதளத்திலும் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - madurai,இந்தியா
28-மார்-202019:35:08 IST Report Abuse
Bala அது சரிண்ணே , அந்த போட்டோ புடிச்ச 3வது ஆள் யாரு
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
28-மார்-202011:20:50 IST Report Abuse
karutthu இவர்களுக்கு எந்த விதத்திலும் இந்துக்கள் குறையவில்லை ....அவர்கள் இருக்கும் இடத்திலேயே லோக ஷேமத்திற்காகவே கடவுளை பிரார்த்திக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்
Rate this:
Cancel
ஆல்வின், பெங்களூர் மதமாற்ற வியாபாரிகள், அவர்களின் விளம்பர நிறுவனங்கள், அவர்களை வைத்து பிழைப்பு நடத்தும் ஊடகங்கள், அரசியல்வாதிகள் இவர்களுக்கு இந்த ஒரு படம் ஆயிரம் பாடம் சொல்லிக் கொடுக்கிறது. நமது ஊர் அரசியல் வியாபாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
28-மார்-202010:49:27 IST Report Abuse
pradeesh parthasarathyநீ எப்போ பெயரை மாத்தின ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X