அரசியல் செய்தி

தமிழ்நாடு

மளிகை, காய்கறி கடைகளுக்கு நாளை முதல் நேரக்கட்டுப்பாடு :முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Updated : மார் 28, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
மளிகை, காய்கறி ,கடைகளுக்கு,நாளை முதல்,நேரக்கட்டுப்பாடு

சென்னை :'அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் நாளை முதல் குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்திருக்க வேண்டும்' என முதல்வர் இ.பி.எஸ். உத்தரவிட்டு உள்ளார்.அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

கொரோனா வைரஸ் பரவல் முதலாம் கட்டத்தில் இருந்து இரண்டாம் கட்டத்திற்கு செல்லும் நிலையில் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்க முதல்வர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளுக்கு நேர கட்டுப்பாடுவிதிக்கப்பட்டுள்ளது.

அவற்றின் விபரம்:

* கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மாலை 6:00 மணியில் இருந்து அதிகாலை 6:00 மணிக்குள்பொருட்களை இறக்கி விடவேண்டும்

* கோயம்பேடு மார்க்கெட் பிற காய்கறி விற்பனை கடைகள், மளிகை கடைகள் காலை 6:00 மணியிலிருந்து மதியம் 2:30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்

* பெட்ரோல் பங்க்குகள் காலை 6:00லிருந்து பகல் 2:30 மணி வரை மட்டுமே செயல்படும். அரசுவாகனங்களுக்கான பெட்ரோல் பங்க்குகள் நாள் முழுவதும் தொடர்ந்து செயல்படும்

* மருந்தகங்கள், பார்சல்வழங்கும் உணவகங்கள் நாள் முழுவதும் இயங்கும்

* முதியோர் வீட்டில் சமைக்க முடியாதோர் போன்றோருக்கு உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் காலை 7:00 முதல் 9:30 மணி வரை; பகல் 12:00 முதல் பிற்பகல் 2:30 மணி வரை; மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை உணவு வழங்க அனுமதிக்கப்படுகிறது

* ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் சமைத்த உணவை வினியோகிக்க வேண்டாம். சமைக்க தேவைப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டர்களிடம் வழங்கலாம். இதற்கென தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது

* அரசு மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த விரும்புவோர் மருத்துவ உபகரணங்கள் வழங்க விரும்புவோர் அந்தந்த மருத்துவ நிர்வாகத்தை அணுகவும்

* இறப்பு போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை 20க்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு முதல்வர் உத்தர விட்டுள்ளார்.இந்த உத்தரவுகள் நாளை முதல் நடைமுறைக்கு வருகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
28-மார்-202017:22:32 IST Report Abuse
Sampath Kumar இத தான் அந்த டயலாரும் சொன்னாரு ?? நடக்கலை என்ன செய்ய நாம மக்கள் அப்படி ?? தன் புத்தியும் இல்லை சொல் புத்தியும் இல்லை
Rate this:
Cancel
28-மார்-202016:41:46 IST Report Abuse
ஆப்பு கொரோனாவை காரணம் காட்டி பணி நீக்கம் செய்யக்கூடாதுன்னு உத்தரவு போடுங்க ஐயா...
Rate this:
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
28-மார்-202012:14:37 IST Report Abuse
Ashanmugam தமிழக முதல்வர் நாளை முதல் நேர கட்டுப்பாட்டை விதித்தால், மக்கள் எப்போ மூன்றடி இடைவெளி விட்டு பொருட்கள் வாங்கி வீட்டுக்கு போவது. ஒரு ஆள் பொருள் வாங்கி பில் போட்டு வெளி அரைமணி நேரம் ஆகுது. இதுல வேற நேரத்தை திணித்தால் மக்கள் கியூவிலே மணிக்கணக்கில் நின்று மயக்கடித்து இறக்கும் அபாயம் உள்ளது. ஆகவே நடைமுறை சாத்தியமாக உத்தரவு பிறப்பிக்கவேண்டும். மக்கள் படும் அவஸ்தையை நேரடியாக முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் மக்கள் படும் சிரம் என்னவென்று தெரியும்.
Rate this:
kumar - chennai,இந்தியா
28-மார்-202013:22:23 IST Report Abuse
kumarஓகே. முட்டிகிட்டு கூட்டமா போ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X