பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடையில் கூட்டத்தை தவிர்க்க வீடு வீடாக 'டோக்கன்' வழங்க முடிவு

Updated : மார் 28, 2020 | Added : மார் 28, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
ரேஷன் கடை, கூட்டம்,  வீடு, டோக்கன்

திருப்பூர்: நிவாரணம் பெறுவதற்காக, ரேஷன் கடையில் மக்கள் கூட்டம் சேர்வதை தடுக்கும் வகையில், வீடு வீடாக, 'டோக்கன்' வழங்க, வருவாய்த்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழக அரசு, கொரோனா வைரஸ் தடுப்புக்கான ஊரடங்கு உத்தரவை அறிவிக்கும் முன்பாக, நிவாரணம் வழங்குவது குறித்து அறிவித்தது.அனைத்து வகை அரிசி பெறும் ரேஷன் கார்டுகளுக்கு, 1,000 ரூபாய் நிவாரண உதவியும், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை இலவசமாகவும் வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்திருந்தார்.ஏப்., 2 ம் தேதி துவங்கி, 15ம் தேதி வரை, தொடர்ச்சியாக நிவாரணம் வழங்கி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரேஷன் கடையில் மக்கள் கூட்டமாக சேர்வதை தடுக்கவும், நிவாரணம் வினியோகத்தை, நேரம் வாரியாக பிரித்து வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.பொதுமக்கள் கூட்டத்தில் அலைமோதுவதை தவிர்க்கும் வகையில், வீடு வீடாக சென்று, 'டோக்கன்' வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


latest tamil news


இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:தேவையான அளவு, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை, முதலில் கடைகளின் இருப்பு வைக்கப்படும். அடுத்ததாக, கூட்டுறவு சங்கங்கள் மூலமாக, நிவாரண தொகை பெறப்படும்.ஒவ்வொரு நாளில், தலா, 100 நபர்களுக்கு மட்டும், கூட்டமில்லாமல், நிவாரணம் வழங்கி முடிக்கப்படும். முன்னதாக, ரேஷன் கடை ஊழியர், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து, வீடு வீடாக 'டோக்கன்' வழங்குவர்.அதில், பொருள் வாங்க வரவேண்டிய நாள், நேரம் இருக்கும். அதில் குறிப்பிட்ட நேரத்தில், டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டுடன் கடைக்கு வந்தால், விரைவாக பெற்றுக்கொண்டு திரும்பிவிடலாம். தலா, ஆயிரம் ரூபாயுடன் பருப்பு, எண்ணெயுடன் சர்க்கரையும் பார்சலாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
28-மார்-202012:14:45 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு வீடு வீடாகக் கொடுத்தால் முறைகேடுகளும் தடுக்க வாய்ப்பு
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
28-மார்-202012:03:15 IST Report Abuse
Krishna Simply Do Door Deliver Most Essential Items irrespective of Cards-Mental Aadhars (many Issued to Foreign Infiltrators By AntiNational Rulers-Officials etc, though Courts Identified-Thrown out)
Rate this:
Cancel
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
28-மார்-202011:56:11 IST Report Abuse
B. இராமச்சந்திரன் எதற்காக டோக்கன், அனைத்து ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளும் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது... sms அனுப்பினால் போதுமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X