பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா மருத்துவமனைக்கு வணிக கட்டடம் தயார் மதுரைக்காரருக்கு சபாஷ்

Added : மார் 28, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
 கொரோனா,மருத்துவமனைக்கு,வணிக கட்டடம்,தயார், மதுரைக்காரருக்கு,சபாஷ்

மதுரை:கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசுக்கு பொதுமக்கள் உதவியாக இருக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், மதுரை புது நத்தம் ரோடு டைல்ஸ் விற்பனையாளர் வெங்கடசுப்பிரமணி தனது வணிக கட்டடத்தை கொரோனோ மருத்துவமனைக்காக வழங்க முன்வந்துள்ளார்.

அவர் கூறியதாவது: சமூக சேவையில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. இயற்கை பேரிடர் வந்து போது பல்வேறு வகையில் மக்களுக்கு உதவி செய்துள்ளேன். அந்த வகையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க புது நத்தம் ரோடு வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரே உள்ள 12,000 சதுரடி கொண்ட எனது வணிக கட்டடத்தை இலவசமாக வழங்குகிறேன்.

தரைத்தளத்துடன் சேர்த்து நான்கு தளங்கள் கொண்ட இக்கட்டடத்தில் தற்போது கடைகள்
எதுவும் இல்லை. இங்கு கழிவறை, தண்ணீர் வசதி, விசாலமான அறைகள் இருப்பதால் மருத்துவமனைக்கு ஏற்றதாக இருக்கும். கூடுதலாக வசதிகள் ஏற்படுத்தி தருவதற்கும் தயாராக இருக்கிறேன். இதுகுறித்து இரண்டு நாட்களுக்கு முன் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல்
கொடுத்துள்ளேன், என்றார்.

மாவட்ட நிர்வாகம் இவரை தொடர்பு கொள்ள 98421 56629.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
29-மார்-202017:56:27 IST Report Abuse
Bhaskaran Nalla manam vaalga
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
28-மார்-202020:46:15 IST Report Abuse
Swaminathan Chandramouli வேங்கட சுப்பிரமணியன் அவர்களே தருமம் தலைகாக்கும் . முல்லை கொடிக்கு தனது தேரை அளித்த பாரி வள்ளலை போல நீங்கள் உதவி இருக்கிறீர்கள் ஆனால் பணத்தை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்க்கும் ஆட்களுக்கு அவசர நிலையை உணர்ந்து உதவி செய்ய மனம் இல்லையே
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
28-மார்-202016:53:53 IST Report Abuse
LAX மிக்க நன்றி வெங்கடசுப்ரமணி ஐயா.. இந்த மனது எல்லாருக்கும் வந்துடாது.. You are So.......... GREAT..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X