பொது செய்தி

இந்தியா

ஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு

Updated : மார் 28, 2020 | Added : மார் 28, 2020 | கருத்துகள் (94)
Share
Advertisement
coronavirus,Modi,NarendraModi,நரேந்திரமோடி,மோடி

புதுடில்லி: 'கொரோனா' தொற்றால், உலகமே கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்த நோயை கட்டுப்படுத்துவதில், இந்தியா திறமையாக செயல்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் ஹீரோவாகியிருக்கும் பிரதமர் மோடியை, உலக நாடுகள் பாராட்டுகின்றன.

இந்நிலையில், 'சார்க்' எனப்படும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை சேர்ந்த நாடுகளை ஒருங்கிணைத்து, கொரோனாவுக்கு எதிராக போராடும் முயற்சியில், இந்தியா ஈடுபட்டுள்ளது.


ஊரடங்கு:சீனாவில் பிறந்த கொரோனா வைரஸ், இப்போது, உலகின் அனைத்து நாடுகளிலும், தன் கொடூர முகத்தை காட்டி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, தினமும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும், இந்த நோய் பரவியுள்ளது. இதுவரை, 730க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 15க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இந்தியாவில், 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில், கொரோனாவால், ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானதில் இருந்தே, அதன் பரவலை தடுக்க, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கொரோனாவின், பிறப்பிடமான சீனாவின் வூஹான் நகரிலிருந்து, இந்தியர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தியர்களை மீட்பதற்காக சென்ற இந்திய விமானங்கள், பின், அண்டைநாட்டினரையும் மீட்டு வந்தன.

சீனாவுக்கு, 15 டன் மருத்துவ பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. முக கவசங்கள், கையுறைகள் போன்ற உபகரணங்கள் பற்றாகுறையால், சீனா பாதிக்கப்பட்ட போது, அவற்றை இந்தியா உடனடியாக அனுப்பி வைத்தது. அண்டை நாடான சீனா, கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில். அதற்கு நேசக்கரம் நீட்டிய, இந்தியாவின் செயல், சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றது.


latest tamil news

ஒருங்கிணைப்பு:இப்போது, கொரோனாவின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், இதைக் கட்டுப்படுத்த, சார்க் நாடுகளின் ஒத்துழைப்பை, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். சார்க் நாடுகளின் தலைவர்களை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக தொடர்பு கொண்டு, பிரதமர் மோடி, சமீபத்தில் பேசினார். அப்போது, கொரோனா பரவலை தடுக்க, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். பிரதமர் மோடியின் இந்த முயற்சி, சார்க் நாடுகளிடையே ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த உதவியுள்ளது.

கொரோனாவால், தெற்காசியாவின் மொத்த உள்ளநாட்டு உற்பத்தியில், 3.71 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது, இந்த இழப்பை ஏற்றுக் கொள்ளும் நிலையில், தெற்காசிய நாடுகள் எதுவும் இல்லை. எனவே, தெற்காசிய நாடுகளின் பிரதிதியாக செயல்பட, சார்க் அமைப்பால் மட்டும் தான் முடியும். உலக மக்கள் தொகையில், ஐந்தில் ஒரு பங்கு, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் உள்ளது.

கொரோனாவை எதிர்கொள்ள, சார்க் நாடுகளிடம் சிறந்த மருத்துவ வசதிகள் தேவை. இதை உணர்ந்து தான், சார்க் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை, பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய யூனியனிலிருந்து, பிரிட்டன் விலகிவிட்டது. 'டிரான்ஸ் பசிபிக்' ஒத்துழைப்பை ரத்து செய்ய, அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இவை, சர்வதேச அளவில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், சார்க் அமைப்பை இந்தியா வலுப்படுத்தினால், சர்வதேச அளவில், கொரோனாவை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு, புதிய வழியைக் காட்ட முடியும். அண்டை நாடுகளை ஒருங்கிணைக்கும் இந்தியாவின் முயற்சி, இப்போது, உலகுக்கே எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naz Malick - London,யுனைடெட் கிங்டம்
31-மார்-202005:01:48 IST Report Abuse
Naz Malick என்னது மோடி ஹீரோவா? இவர் கொண்டு வந்த அவசர இந்தியா லோக்கடவுன் அறிவிப்பால் கோடிக்கணக்கான இந்திய மக்கள் ஒரு வேளை சாப்பாட்டுக்கே அலைவதை... உலகமெங்கும் மக்கள் பார்த்து வேதனை படுகிறார்கள்....
Rate this:
Makkalukkaga - India,இந்தியா
31-மார்-202012:42:29 IST Report Abuse
Makkalukkagaமோடி புகழ் பாடுவது தான் வேலை...
Rate this:
Subramaniam Poopal - Bonn,ஜெர்மனி
31-மார்-202014:17:01 IST Report Abuse
Subramaniam Poopalசாப்பிடுவதற்கு முதல் உயிரோடு இருக்கும் வழியை பாருங்கப்பா...
Rate this:
Subramaniam Poopal - Bonn,ஜெர்மனி
31-மார்-202014:19:04 IST Report Abuse
Subramaniam Poopalமோடியில பிழை கண்டுபிடிப்பதே நோக்கமாயிருக்காமல் பிழைக்கிற வழி என்ன என்று யோசிப்போம்...
Rate this:
crap - chennai,இந்தியா
31-மார்-202022:00:20 IST Report Abuse
crapபோன நாட்டுல ஒழுங்கா பிழைக்கிற வழிய பாரு எங்க பிரதமரை நாங்க பாத்துக்குறோம்....
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
30-மார்-202002:16:39 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பத்து லட்சம் இந்தியர்கள் அகதிகளாக ரோடுகளில் அகதிகளாக குழந்தைகளுடன் பயணம் செய்வதை பற்றி நாடுகள் என்ன சொல்கின்றன ?
Rate this:
கூகிள் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
31-மார்-202019:01:14 IST Report Abuse
கூகிள்பெயரை மூளை இல்லா முக்கால்புரம் என்று மாற்றிக்கொள்ளலாம்...
Rate this:
Cancel
Mahesh JK - ABUDHABI,ஐக்கிய அரபு நாடுகள்
29-மார்-202009:12:32 IST Report Abuse
Mahesh JK படித்ததில் பிடித்தது : (கடைசி வரி தவிர. .எல்லாம் ஒரு சேலம் டாக்டரின் தகவல்) தேவையில்லாத வேலைகளில் கவனம் செலுத்தும் மோடி அரசு வறுமையை ஒழிக்க கவனம் செலுத்த வேண்டும் ஒரு சிலைக்கு 3ஆயிரம் கோடி புதிய.பாராளுமன்ற கட்டிடம்.கட்ட 20.ஆயிரம் கோடி கடன் வாங்கி மக்கள் பணத்தை 25ஆயிரம் கோடி ஏமாற்றிய அணில் அம்பானி போன பணம் கார்பெட் நிறுவனக் வர கடன் பல லட்சம் கோடி.இப்படி இப்படி இருக்கிறது நாடு ஆனால் மோடி அரசு அரசியல் மத விளையாட்டு நடத்தி கொண்டு இருக்கிறது ஆனாலும் தமிழகம் மட்டுமே உயர்ந்து நிற்கிறது காங்கிரஸ் பாஜக மாறி மாறி ஆட்சிசெய்த வட இந்திய பட்டினி வேலையில்லா. திண்டாட்டம் என்று தடுமாறி.கொண்டு இருக்கிறது.கிட்டதட்ட ஒரு. கோடி மேற்பட்ட வட இந்தியர்கள் பிழைப்புக்காக தமிழகம் வந்து இருக்கிறார் காரணம் இங்கே அனைவரும் பிழைக்க முடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது இதுதான் திமுக அதிமுக சாதனை மேலுள்ள வரிகளில் எனக்கு கடைசி வரிகளில் உடன்பாடில்லை.... என்னோட கருத்து : எப்பவும் காக்கா வுட்கார பணம் பழம் விழுது... முன்னால கரொனா காக்கா உட்கார பொருளாதார பனம் பழம் கீழ விழுந்துசு
Rate this:
sankar - Nellai,இந்தியா
29-மார்-202021:45:13 IST Report Abuse
sankarமூர்க்க நாட்டு மூர்க்க புத்தி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X