பொது செய்தி

இந்தியா

முகாமிலிருந்து தப்பி ஓடிய கேரள ஐ.ஏ.எஸ்., அதிகாரி

Updated : மார் 28, 2020 | Added : மார் 28, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
coronavirus,AnupamMishra,ias,covid19,கொரோனா,ஐஏஎஸ்

கொல்லம்: கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில், உதவி கலெக்டராக பணியாற்றி வருபவர், அனுபம் மிஷ்ரா. இவரது சொந்த மாநிலம் உத்தர பிரதேசம். சில மாதங்களுக்கு முன், இவருக்கு திருமணம் நடந்தது. இதற்காக விடுமுறையில் சென்ற அவர், பின், மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு, ஒரு வாரத்துக்கு முன், கேரளாவுக்கு வந்தார்.

மீண்டும் பணியில் சேர்ந்த அவரை, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, வீட்டிலேயே, 14 நாட்களுக்கு தனிமையில் இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் அவர், அதிகாரிகளிடம் கூறாமல், வீட்டிலிருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள, தன் சகோதரர் வீட்டுக்குச் சென்றார்.


latest tamil news



இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், அனுபம் மிஷ்ரா இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, கொல்லம் மாவட்ட கலெக்டருக்கு, கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
30-மார்-202009:02:12 IST Report Abuse
Sampath Kumar படித்த அரசு அதிகாரியே இப்படின்னா பாமர மக்களை கேட்கவே வேண்டாம்
Rate this:
Cancel
Ahmed A R - லால்பேட்டை,இந்தியா
29-மார்-202013:59:43 IST Report Abuse
Ahmed A R ஒரு முஸ்லீம் குறிப்பிட்ட ஒரு தனிப்பட்ட நபருக்கு அல்லது இயக்கத்திற்கும் அல்லது அரசியல் கட்சிக்கு அல்லது அதன் கொள்கைக்கு அல்லது அதன் குறிப்பிட்ட செயலுக்கு, எதிராகத்தான் கருத்து பதிவிடுவாரே தவிர, இந்து மதத்துக்கு எதிராக கருத்து பதிவிட மாட்டார். ஏனெனில் அப்படி மாற்று மத துவேஷங்களில் முஸ்லிம்கள் ஈடுபடுவது இல்லை.
Rate this:
Cancel
Ramesh Sundram - Guduvancheri,Chennai,இந்தியா
28-மார்-202011:58:43 IST Report Abuse
Ramesh Sundram இவரை கொரன தொற்று உள்ளவரிடம் ஒப்படைக்கவும் அவர்கள் பார்த்து கொள்ளுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X