பொது செய்தி

இந்தியா

முதலிடம் பிடித்த மோடியின் பேச்சு

Updated : மார் 28, 2020 | Added : மார் 28, 2020 | கருத்துகள் (47)
Share
Advertisement
coronavirus,Modi,curfew,PM,covid19,பிரதமர்,மோடி

புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, பிரதமர், மோடி, சமீபத்தில், இரண்டு முறை, 'டிவி' வழியாக நாட்டு மக்களிடம் பேசினார்.

கடந்த, 20ம் தேதி பேசிய பிரதமர், 22ம் தேதியில், 'மக்கள் ஊரடங்கை' கடைபிடிக்க வலியுறுத்தினார். பின், 24ம் தேதி பேசிய பிரதமர், 'நாடு முழுதும், 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது' என அறிவித்தார். இதில், 20ம் தேதியன்று பிரதமர் மோடி பேசியதை, 'டிவி' சேனல்களில் பார்த்தவர்களை விட, 24ம் தேதி, அதிகம் பேர் பார்த்துள்ளனர்.


latest tamil newsகடந்த, 2016ல், பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி, மோடியின் பேச்சை விட, 24ம் தேதி மோடிபேசியதைத் தான், அதிகம் பேர் பார்த்து உள்ளனர். பிரதமரின் இந்தப் பேச்சை, 19.7 கோடிக்கும் அதிகமான மக்கள், 191 சேனல்களில் பார்த்ததாக, பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி, சசி சேகர் தெரிவித்தார். ஐ.பி.எல்., கிரிக்கெட் இறுதிப் போட்டியை, 13.3 கோடி பேர் பார்த்துள்ளனர். அதை விட, பிரதமர் மோடி பேசியதை, அதிக மக்கள் பார்த்துள்ளனர்.

கடந்த ஆண்டு, ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பற்றி, டிவியில் பிரதமர் பேசியதை, 6.5 லட்சம் பேர், 163 சேனல்களில் பார்த்துள்ளனர். கடந்த, 2016ல், பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி பிரதமர் அறிவித்ததை, 5.7 கோடி பேர், 114 சேனல்களில் பார்த்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
28-மார்-202017:29:02 IST Report Abuse
Somiah M அடுத்தவர் துன்பத்திலும் துயரத்திலும் இன்பம் காண நினைக்கும் விஷ கிருமிகளை பற்றி சொல்வதற்கு ஏதும் இல்லை .
Rate this:
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
28-மார்-202016:55:05 IST Report Abuse
ராம.ராசு நாடே பதற்றத்தில் இருக்கும்போது முதலிடம் பிடித்த மோடியின் பேச்சு என்று புள்ளி விபரம். ஒருவர் விடாமல் உயிர் பயத்தைக் கட்டப்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்குமோ என்று நாட்டு மக்கள் அனைவரும் இருக்கும்போது பிரதாமிரடமிருந்து ஏதாவது ஆறுதலான வாக்குறுதி கிடைக்குமா என்று பார்த்ததை, ஒரு சேனல் விடாமல் அத்தனை சேனலும் பிரதமரின் பேச்சை ஒளி பரப்பும்போது எண்ணிக்கை மிக அதிகமாகத்தான் இருக்கும். பிரதமரின் ஒவ்வொரு தொலைகாட்சி உரையின்போதும் மக்கள் பதற்றத்திற்குள் தள்ளப்பட்டுவிடுகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அது பணம் மதிப்பிழப்பு செய்த போதாகட்டும் அல்லது இப்போதைய கரோனா பற்றிய பேச்சுக்களாகட்டும் மக்கள் மனம் பதைபதைத்துக் கேட்டார்கள் தவிர மகிழ்சசியான நிகழவாகப் பார்க்கவில்லை. 130 மக்கள் தொகை கொண்ட நாட்டில், நாடு இருக்கும் தற்போதைய நிலையில் மக்கள் அனைவருக்கும் நாட்டிற்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்காத என்ற ஏக்கத்தில் பிரதமரின் பேச்சைக் கேட்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை. மக்கள் மன அழுத்த நிலையில் இருக்கும்போது , ஒரு நல்ல தீர்வு பிரதமர் மூலமாகக் கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பில் பிரதமரின் உரையைக் கேட்பதைத் தவறி வேறு வழியே இல்லை. .
Rate this:
Perumal - London,யுனைடெட் கிங்டம்
29-மார்-202006:03:59 IST Report Abuse
PerumalIndian prime Minister doing his job very well, to save the country he said exchange your 1000 and 500 rupees notes, Good Idea to cover and catch duplicate notes and black money people, In UK also now 20 Pound notes we are exchanging through Bank. All Govts should do, If anything harm to people PM will straight away come to people through TV and giving advice, otherwise just giving greetings through newspapers....
Rate this:
Cancel
Kd -  ( Posted via: Dinamalar Android App )
28-மார்-202015:41:27 IST Report Abuse
Kd மற்ற பேச்சு எல்லாம் பணம் அது irukavangaluku thhan கவலை. Jk problem அங்க iruka மட்டும் தான் கவலை. But corona எல்லோரும் உயிர் பயம் அதான் 19.8 crores டிவி paathathu.. இங்க ஜாதி மதம் இல்லை ellorukum உயிர் ஒன்னு மனசாட்சி um ஒன்னு உண்மை யும் ஒன்னு தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X