பொது செய்தி

தமிழ்நாடு

அலட்சிய போக்குடன் சுற்றும் மக்கள்; தமிழகத்தில் கொரோனா பரவும் அபாயம்

Updated : மார் 28, 2020 | Added : மார் 28, 2020 | கருத்துகள் (68)
Share
Advertisement
coronavirus,covid19,TamilNadu

சென்னை: மத்திய, மாநில அரசுகள், பலமுறை அறிவுறுத்தியும், பலரும் வீட்டில் இல்லாமல் அலட்சியப் போக்குடன் வெளியில் சுற்றித் திரிகின்றனர். இவர்களால், தமிழகத்தில், 'கொரோனா' வைரஸ், சமூக தொற்றாக பரவும் அபாயம் உருவாகி உள்ளது.

கொரோனா பரவாமல் தடுக்க அவசர அவசரமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உலகளவில் பிப்., 26 ல் 81 ஆயிரத்து, 820 ஆக இருந்த கொரோனா தொற்று, மார்ச் 26 ல், 5.34 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்நோயால் ஏற்பட்ட இறப்பு, இத்தாலியில், 8,000த்தையும், ஸ்பெயினில், 4,000த்தையும் தாண்டிவிட்டது. பொருளாதாரத்தில், மருத்துவத்தில் முன்னேறிய நாடுகள் கூட, திடீரென அதிகரித்த நோய் தொற்றால் தவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், இந்நோய் குறித்த அலட்சியப் போக்கே. பாதிப்பு அதிகரித்த பின், அவசர அவசரமாக ஊரடங்கு பிறப்பித்து வருகின்றன.


latest tamil newsஅதேபோல், இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் அலட்சியப் போக்கு நீடித்தால், அதன் விளைவுகள், பல மடங்கு அதிகமாக இருக்கும். இதை உணர்ந்தே, பிரதமர் மோடி, நாடு முழுவதும், 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கட்டாயமாக பின்பற்றவும் வலியுறுத்தினார். தமிழகத்தில் தடை உத்தரவு அமலானாலும், மக்கள் ஒத்துழைப்பு முழுமையாக இல்லை. இந்நோய் தொற்று குறித்த அபாயத்தை உணராமல், போலீசாருக்கு, 'டிமிக்கி' கொடுத்து, ஊர் சுற்றுவதில், சிலர் இன்பம் காண்கின்றனர்.

மக்களின் அத்தியாவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, அதன் விற்பனை தடை செய்யப்படவில்லை. ஆனால், இதை சாதகமாக பயன்படுத்தி, சாலையில் சுற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக, உழவர் சந்தைகளில், காய்கறி வாங்க, போட்டி போட்டு கும்பலாக நிற்கின்றனர். அதிலும் பலர், அன்றைய தேவைக்கு மட்டும் காய்கறி வாங்கிச் செல்கின்றனர். மீண்டும் அடுத்தடுத்த நாட்களில், உழவர் சந்தை உள்ளிட்ட பொது இடங்களில் வலம் வருகின்றனர்.

இப்படி தினமும் ஒரு மணி நேரம் வரை, ஊர் சுற்ற, பொருட்கள் வாங்குவதாக காரணம் சொல்கின்றனர். ஆபத்து காலத்தில், ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்கலாம் என்றோ, அவசியமின்றி வெளியே வரக்கூடாது என்ற எண்ணமோ பலரிடம் இல்லை. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார், பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகளை வைத்துள்ளனர். ஆனால், பலரும் மருந்து சீட்டு, மருத்துவமனை கார்டுகளை வைத்து, இருசக்கர வாகனங்கள், கார்களில் தாராளமாக செல்கின்றனர்.


latest tamil newsபோலீசார் தடுத்து நிறுத்தி கேட்டால், மருந்துக் கடை, மருத்துவமனை, வங்கிகள் மற்றும் மளிகை கடைகளுக்கு செல்வதாக பதில் அளிக்கின்றனர். இதனால், தெருவில் உலா வரும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் திணறுகின்றனர். இதனால், சமூக தொற்று ஏற்பட்டு பலருக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.இத்தாலியில் ஒரே ஒரு பெண் மூலம் 30 சதவீதம் பேர் தொற்றுக்கு ஆளாகினர் என்கிறது புள்ளி விபரம்.

ஒவ்வொருவரின் அலட்சியப் போக்கும், பல நோயாளிகளை, வயதானவர்களை, கர்ப்பிணிகளை, குழந்தைகளை பாதிக்கும் என்பதை உணர்வதில்லை. நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் வீழ்ச்சி ஏற்படும் என்ற நிலையிலும், மத்திய அரசு எடுத்துள்ள ஊரடங்கு உத்தரவு முடிவு, எந்த அளவுக்கு முக்கியமானது என்பது, பலருக்கும் புரியவில்லை. 'எனவே, ஊர் சுற்றுவோரை கடுமையாக தண்டித்து, நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும்' என, மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


ஜப்பானை பின்பற்றுவோம்:


கொரோனா பரவ தொடங்கிய போது, நோய் தொற்று எண்ணிக்கையில், இரண்டாம் இடத்திலிருந்த ஜப்பான், பின் சுதாரித்து, அரசு எடுத்த நடவடிக்கை, மக்களின் சுய ஒழுக்கம், அங்கு கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியுள்ளது. சில நாட்களாக, அங்கு புது தொற்று வரவில்லை. தற்போது வரை, 1,387 பேர் மட்டும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்ற நிலை இந்தியாவில் வரவேண்டும் என்றால், பொதுமக்கள் ஒத்துழைப்பு, சுயக் கட்டுப்பாடு அவசியம்.

Advertisement
வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
28-மார்-202020:27:09 IST Report Abuse
ocean kadappa india அன்பார்ந்த கருத்து பலகை ஒருங்கிணைப்பாளர் அவர்களே. நான் இப்போது அனுப்பிய கருத்துக்களில் என்ன ஆபாசத்தை அசிங்கத்தை அநாகரிகத்தை கண்டீர்கள். தெளிவு படுத்துங்கள். அடிப்படை இன்றி எதற்கெடுத்தாலும் பழி போடுவது தவறு. தினமலருக்கு நான் பழைய ஆள். கடந்த பதினைந்து பதினாறு வருடங்களாக கருத்துக்களை பதிவிட்டு வருபவன். தங்கள் தினமலர் தினசரி நாளேடுகள் வீட்டில் மலை போல் குவித்தவன். நான் எதையும் தெளிவாக எழுத விரும்புபவன். அதனால் அதிகம் எழுதுவேன். அதை படித்து முடிவு செய்வதற்கு தங்களுக்கு நேரமில்லை. தங்களால் என் இமெயிலில் பலமாதங்களாக வெளியிடாமல் வைத்துள்ள ஏராளமான கருத்து பதிவுகளை பார்க்கிறேன். மனம் வருந்துகிறது. பிறர் போல் தினமலர் கருத்து பலகையில் பஞ்ச் டயலாக் மாடலில் கருத்து எழுதுவதை தாங்கள் விரும்புகிறீர்கள். அப்படித்தானே. அதில் பெயர் பெற்றவர்கள் தண்டக்கோன் வல்வில் ஓரி ஆப்பு போன்றவர்கள். அவர்களது ஓரிரு வரிகளை பார்த்து உடனே அனுமதி தருவது உங்களுக்கு சுலபமாக உள்ளதா. என் கருத்துக்களில் அநாகரிகம் ஆபாசம் அசிங்கம் அவதூறு என குறிப்பிட்டு கணக்கற்ற தடவை கண்டித்து வருகிறீர்கள். தங்கள் கருத்து பலகையை உபயோகப்படுத்தி எனது கருத்துக்களை எழுதுவதில் ஆர்வமுள்ளவனை இப்படி கண்டிப்பது சரியா. அதற்காக ஆயிர கணக்கில் பணத்தை இறைத்து இன்டர் நெட் தொடர்பை பெற்று தங்கள் தினமலருக்கு பயன்படுத்துகிறேன். தங்கள் கருத்து பலகையில் என் நேரத்தையும் வீணாக்கி மூளையை கசக்கி பிழிந்து கருத்து எழுவதில் எனக்கு எந்த பயனும் இல்லை என்பது தங்களுக்கு தெரியும். இனி என் கருத்துக்கள் பிறர் போல் பஞ்ச் டயலாக் மாடலில் இருக்கும். கவலை படாதீர்கள். முடிந்தால் வெளியிடுங்கள். இல்லைஎனில் தேவையின்றி கண்டிக்காதீர்கள். மற்றவர்கள் தரும் கருத்துக்களுடன் என கருத்துங்களை ஒப்பிட்டு பாருங்கள் உங்களுக்கு என் கருத்து திறன் அருமை புரியும். இளப்பம் செய்வது தொடர்ந்தால் என் அரிய கருத்துக்கள் தினமலருக்கு கிடைக்காது. நன்றி.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
29-மார்-202019:08:07 IST Report Abuse
Endrum Indianஅவை தவிருங்கள்...
Rate this:
Cancel
சுடலைகாண் - சென்னை,இந்தியா
28-மார்-202019:14:55 IST Report Abuse
சுடலைகாண் மக்களிடம் நேர்மையை குறைந்து பல வருடங்கள் ஆகின்றது. ஏமாற்றுவதை புத்திசாலித்தனமா நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
28-மார்-202021:37:11 IST Report Abuse
 nicolethomsonஉண்மைதான் சார் அந்த ஏமாற்றுவதற்கு பெயர் ஸ்மார்ட்னெஸ் என்று வேறு கூறிக்கொள்வார்கள் கயவாளிகள்...
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
28-மார்-202018:24:37 IST Report Abuse
Rajas சென்னை போன்ற நகரங்களில் 1200 Sq .Ft ல் இடம் இருந்தால் வீட்டுக்காரர்கள் நெருக்கடியாக 100 சதுர அடியில் 11 குடியிருப்பை ஏற்படுத்துகிறார்கள். மிச்சம் 100 சதுர அடியில் பாத்ரூம், கழிவறை, தண்ணீர் பம்பு என்பதற்க்காக. மூன்று மாடி கட்டுகிறார்கள். அதாவது 33 ரூம்கள். ஒரு ரூம் ஒரு குடும்பத்திற்கு என அதில் 4 லிருந்து 7 பேர் வரை. மொத்தம் 150 லிருந்து 200 பேர் வரை இருப்பார்கள். வண்டிகள் எல்லாம் வெளியே நிறுத்தி கொள்ளவேண்டும். மாதவருமானம் 2 லட்சத்திலிருந்து 3 லட்சம் வரை. இது தவிர அதிக மின்சார கடினம். Property Tax மற்றும் Water Tax ஆறு மாதத்திற்கு ஒருமுறை 1500 க்குள் காட்டுவார்கள். நகராட்சியும் கண்டு கொள்ளாது. அவ்வளவு பேர் எப்படி உள்ளே இருப்பது. பாதி நேரம் வெளியே தான் இருப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X