பொது செய்தி

இந்தியா

பசிக் கொடுமையால் அவசர எண்ணுக்கு அழைத்த இளைஞர்கள்; இரக்கம் காட்டிய போலீசார்

Updated : மார் 28, 2020 | Added : மார் 28, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
coronavirus,covid19,DelhiPolice,Food,DailyWageWorkers,கொரோனா,வைரஸ்,பசி,உணவு,டில்லி,போலீசார்

புதுடில்லி: பசிக்கொடுமையில் சிக்கிய இரு இளைஞர்கள், அவசர உதவி எண்ணுக்கு அழைத்து தங்கள் நிலைமையை விளக்க, அவர்களுக்கு உணவு வாங்கி தந்த போலீசார், பணம் மற்றும் அரிசி, பருப்பு வாங்கி தந்த நெஞ்சை கலங்க வைக்கும் சம்பவம் டில்லியில் நடந்துள்ளது.

சீனாவின் வூஹானிலிருந்து பரவிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ், இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் 199 நாடுகளுக்கு பரவி உள்ளது. உலகளவில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிரை இந்த வைரஸ் பறித்துள்ளது. 6 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா பரவாமல் தடுக்க அவசர அவசரமாக, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வேலையில்லாமல் கூலித்தொழிலாளிகள் பலரும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டில்லியில் கூலித்தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்த பிரசாந்த், தில்சாத் என்ற இரு இளைஞர்கள், ஊரடங்கு உத்தரவால் வேலையில்லாமல் போக, வீட்டில் உணவுக்கு தவித்துள்ளனர். 4 நாட்களாக பசியால் வாடிய அவர்கள், டில்லி போலீசாரின் அவசர உதவி எண்ணுக்கு அழைத்து தங்கள் நிலைமையை விளக்கி உள்ளனர். அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்து, உண்மை நிலையை அறிந்து கொண்ட போலீசார், அவர்களுக்கு மனமுவந்து உதவி செய்துள்ளனர்.


latest tamil newsபசியிலும் மனம் தளராத அந்த இரு இளைஞர்களை பாராட்டிய போலீசார், அவர்களுக்கு உணவு வாங்கி முதலில் அவர்களது பசியை போக்கினர். மேலும், ரூ.1000 பணம் கொடுத்து உதவியதுடன், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை அளித்துள்ளனர். போலீசாரின் இந்த நெஞ்சை நெகிழ்ச்சி செயல், சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பலரும் தங்களது பாராட்டுக்களை போலீசாருக்கு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
praj - Melbourn,ஆஸ்திரேலியா
29-மார்-202007:03:01 IST Report Abuse
praj கொரானா எப்படி பரவுகிறது? வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளால்தான். விமானம் மற்றும் கப்பல்களில் வருபவரை தனிமைப்படுத்தினாலே போதும். கொரானா நம்மை அணுகாதவாறு தவிர்க்கலாம்.... இந்த 21 நாட்கள் முற்றிலும் மூடுவது நாட்டையே செயலிழக்க செய்யும். இன்னும் புத்திசாலித்தனமாக கையாண்டிருக்கலாம்....பணக்காரரர்களுக்கு கவலையில்லை .... பாவம் ஏழைகள்.. சிலருக்கு வீடே இல்லை எங்கே தங்குவார்கள்? இந்தியா இன்னுமொரு சோமாலியாக உருவாகிறதா? கவலையழிக்கிறது..
Rate this:
Cancel
shenba -  ( Posted via: Dinamalar Android App )
29-மார்-202006:19:57 IST Report Abuse
shenba நல்ல முன்னேற்றம்
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-மார்-202000:43:30 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இத பத்தி தான் நாலு நாளா காட்டுக்கத்தா கத்துக்கிட்டு இருக்கேன். இவனுங்க கிட்டே போன் இருக்கு, இளவட்டங்கள்.. யோசிங்க, தனியாக இருக்கும் ஆயிரக்கணக்கான உடல் ஊனமுள்ள மாற்று திறனாளிகள், முதியோர். வாகனம் இல்லாத இவர்களால் எப்படி உயிர் வாழமுடியும் ? காட்டுமிராண்டி போலீஸ் எல்லாரையும் போட்டு சாவடிக்கிறானுங்க. வைரஸால் சாகாமல், இவனுங்களோட டார்ச்சராலே சாகப்போறவங்க தான் ஜாஸ்தியா இருக்கப்போகுது.
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
29-மார்-202005:00:50 IST Report Abuse
 nicolethomson, இந்த நேரத்தில் நான் ஏற்கனவே கூறிய பெங்களூரு நண்பர் சஞ்சீவ் பத்தி எழுதியே ஆகா வேண்டும் அவரது கேரட் , பீட்ரூட் , மல்லிகை பூக்கள்,முருங்கை, அத்தி , எலுமிச்சை பற்றி எழுதியே ஆகவேண்டும் , கணினி துறையை விட்டு விவசாய துறை சார்ந்து வாழலாம் என்று முடிவெடுத்த பின்னர் நான் சிக்கநாயக்கனஹள்ளியிலும் , அவர் எடியூர் அருகிலும் நிலம் வாங்கி செட்டில் ஆனோம் , ஆனால் அவர் மக்களின் படிப்பிற்க்காக தினமும் அலுவலகம் போல 100 கிமி தொலைவுள்ள நிலத்துக்கு போயி வந்துகொண்டிருந்தார் இன்று இருக்கும் நிலையில் 22 தேதியே வெளியேறும் வாய்ப்பு இருந்தும் பெங்களூரில் தாங்கினார் , இன்று அவர் போன் பேசுகையில் வாட்சாப் அனுப்பியுளேன் பாரு என்றார் , போலீஸ் அனுமதியோடு பசியில் இருக்கும் குடும்பங்களுக்கு உணவு , அது சார்ந்த பொருட்களை வழங்குவதன் மூலம் பசிக்கொடுமையை தணிக்கும் குழுவோடு இனைந்து அல்லும் பகலும் உழைக்கும் அந்த 45 வயது மனிதரை நினைத்தால் பெருமை கொள்ளுகிறேன், அனால் அவரது வயலை பற்றி கேட்டபோது , அதனால் இந்த மூன்று மாத EMI கட்க முடியாது தான் ஆனால் மீண்டும் துளிர்க்கவைக்கமுடியும் , கேரட்டும் பீட்ரூட்டும் கைவிட்டு போயிடுச்சு என்ன பண்றது , கடந்து செல்வோம் என்றார் , எனக்கு நல்ல நண்பர்களை தான் அடைந்துள்ளேன் என்று , ஜைஹிண்டுபுரம் உன்னால் முடிந்தால்ம் உதவுவதற்கு முயற்சி செய் , காலை இழுத்து மீண்டும் கிணற்றில் தள்ளாதே தவளையே...
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
29-மார்-202005:01:19 IST Report Abuse
 nicolethomsonகிணத்து தவளையை காண்கிறேன்...
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
29-மார்-202013:45:42 IST Report Abuse
 Muruga Velஎதையுமே பாராட்ட தெரியாத ஜென்மம் … சிலர் இப்படி தான் மனோவியாதியால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் ….இவர்களுக்கு பதில் சொல்வது ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X