கொரோனா வைரஸால் ஐரோப்பாவில் ஏற்பட்ட ஒரே நன்மை

Updated : மார் 28, 2020 | Added : மார் 28, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

உலகளவில் கொரோனா வைரஸிற்கு அதிக உயிர்களை பலிகொடுத்துள்ளது ஐரோப்பா கண்டம். இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது. இந்த எதிர்மறை செய்திகளுக்கு நடுவே, ஒரே ஒரு நல்ல செய்தியாக, ஐரோப்பா முழுவதும் காற்று மாசு கணிசமாக குறைந்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்றால் உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஊரடங்கை பிறப்பித்துள்ளன. போக்குவரத்து, தொழிற்சாலைகள் இயங்காதது போன்ற காரணங்களால், காற்று மாசுபாடு கணிசமான சரிவை சந்தித்துள்ளது.latest tamil newsபாரிஸ், மாட்ரிட் உள்ளிட்ட மூன்று ஐரோப்பிய நகரங்களில் நைட்ரஜன் டை ஆக்சைடால் ஏற்படும் காற்று மாசு 40 சதவீதம் குறைந்துள்ளதை, சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன. கோப்பர்நிக்கஸ் சென்டினல் -5 பி செயற்கைக்கோள், மார்ச் 14 முதல் 25 வரையிலான காலகட்டத்தில் பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் நைட்ரஜன் டை ஆக்சைடு செறிவுகளைக் காட்டும், மூன்று கலப்பு படங்களை எடுத்துள்ளது. இதனை ஐரோப்பிய விண்வெளித் துறை 2019-ம் ஆண்டுடன் ஒப்பிட்டு வெளியிட்டுள்ளது. இதில் தான் இத்தகவல் தெரியவந்துள்ளது.


latest tamil newsஐரோப்பிய கண்டத்தில் காற்று மாசுபாடு காரணமாக ஏராளமான மக்கள் மோசமான சுகாதார சீர்கேடுகளை நீண்டகாலமாக எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வாகனங்கள், தொழிற்சாலைகளிலில் இருந்து வெளியேறும் நச்சு புகையான, நைட்ரஜன் டை ஆக்சைடால், சுவாசக் கோளாறு மற்றும் இதய கோளாறுகள் ஏற்படும்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
28-மார்-202018:49:30 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு மாசு குறைந்திருக்கலாம் ஆனால் மாசின் அளவு அதிகமுள்ள பகுதிகள் ரத்தத் திட்டுக்கள் போலவே காட்சி அளிக்கின்றன. இந்தப்படம் சுற்றுச் சூழல் ஆபத்தை உணர்த்துகிறது.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
28-மார்-202017:29:20 IST Report Abuse
வெகுளி வேறொரு நன்மையும் உண்டு....ஊரடங்கால் கட்சா எண்ணெயின் தேவை குறையும்.... அந்த பணத்தால் வாழும் பயங்கரவாத அமைப்புகள் அழியும்....
Rate this:
Cancel
shan - jammu and kashmir,இந்தியா
28-மார்-202017:27:00 IST Report Abuse
shan தினமலர் என்று தீங்கிழைக்கும் காற்று மாசு குறைந்ததற்கு கவலை பட ஆரம்பித்தது என்று தெரிய வில்லை . மாசு குறைந்தது நன்மை என்று போட்டு விட்டு மாசு சரிந்துள்ளது என்று எழுதியது நல்ல வார்த்தை இல்லை. அதற்க்கு பதில் வெகுவாக குறைத்துள்ளது என்று இருக்க வேண்டும். சரிந்தாள் நஷ்டம் என்று பொருள் வருவதால் வார்த்தைகளை கவனியுங்கள் .
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
28-மார்-202020:13:57 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுகாற்றில் மாசு குறைந்துள்ளது என்று எழுத வேண்டும் அல்லது காற்றின் மாசுபாடு சரிந்துள்ளது, அல்லது இறக்கத்தைச் சந்தித்தது என்று எழுதவேண்டும் மாசுபாடு என்பது அளவைக் குறிக்கும் அது எப்பொழுதும் சதவிகிதத்தில் குறிப்பிடப்படுகிறது ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ் என்று அதைச் சொல்வார்கள் சதவிகிதம் என்பதால் அதில் சரிவு என்று குறிப்பிட்டதில் தவறில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X