பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் 2ம் நிலையில் உள்ளது; சுகாதாரத்துறை செயலர்

Updated : மார் 28, 2020 | Added : மார் 28, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், வெளிநாடுகளில் இருந்து வந்தோர் வீடுகளை கண்டறிந்து, அந்த பகுதி பாதுகாப்பு மண்டலமாக மாற்றப்படும் என சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.latest tamil news
சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது:
தற்போது நம் மாநிலத்தில் வெளிநாடு சென்று வந்த 43,537 வெளிநாட்டு நபர்களை கண்டறிந்துள்ளோம். வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த பயணிகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் தனிமைப்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். பாதிக்கப்பட்டுள்ள 10 மாவட்டங்களில் ஆட்சியர்கள், சுகாதார துறையினர் காணொலி மூலமாக சந்திப்பு நடைபெறவுள்ளது.
இச்சந்திப்பில் வெளிநாடு சென்று வந்தவர்களின் வீடுகளை கண்டறிந்து, அந்த வீடுகளில் உள்ளோருக்கு சளி, காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் சோதனை செய்யப்படும். கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுவர். மேலும் அருகில் உள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கும் கொரோனா அறிகுறி உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு மண்டலமாக மாற்றப்படும். தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு மனநலம் ஆலோசனை வழங்குவதற்கு மனநல மருத்துவர்கள் நியமிக்கப்படுவர். தற்போது தனிமைப்படுத்தல் மையங்கள், தினமும் அதிகப்படுத்தி வருகிறோம். ஓய்வு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்து ஊழியர்களுக்கு நோயாளிகளை கையாள்வதற்கு தேவையான பயிற்சிகளை அளித்து வருகிறோம். தற்போது இரண்டாம் நிலையில் உள்ள கொரோனா பாதிப்பு, மூன்றாம் நிலைக்கு சென்றுவிடக் கூடாது என்பதில், அரசு மிகுந்த கவனமாக உள்ளது. கொரோனா சமூகப்பரவல் ஆக மாறிவிடக்கூடாது என்பதில் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
29-மார்-202010:00:07 IST Report Abuse
 Muruga Vel அன்பின் பரம தகப்பனே, எப்பொழுதும் எங்களோடு கூட இருக்கிறவராகவே இருக்கிறவரே, ஒப்பற்ற தெய்வமே எங்கள் வாழ்க்கையை உம்மிடத்தில் ஒப்புவிக்கின்றோம். நீர் வழி நடத்துவீராக. இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன். _
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
31-மார்-202008:13:19 IST Report Abuse
பெரிய ராசு ஏன்டா...
Rate this:
Cancel
29-மார்-202009:06:59 IST Report Abuse
பார்ப்பனன் பீலா
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
29-மார்-202008:34:25 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Mr. Vijayabaskar has done very good job as health minister . Please don't complaint , if you can help govt or public else better away from issues. This is not the time to blame each other. We hv to unite and fight against this disease. No politics.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X