எல்லோருக்கும் நம்பிக்கையும்,உணவும்,அன்பும்..

Updated : மார் 28, 2020 | Added : மார் 28, 2020
Share
Advertisement



latest tamil news


வட்டத்திற்குள் நிற்கும் ஒரு குழந்தைக்கு காவல்துறை அதிகாரி ஒருவர் மாஸ்க் மாட்டிவிடுகிறார் அந்தக் குழந்தை அதை சிரித்தபடி அன்புடன் ஏற்றுக்கொள்கிறது.


latest tamil news


அந்தக் குழந்தைக்கு கொரோனா பற்றி முழுமையாக தெரியாது ஆனால் நாடும் மக்களும் ஒரு இக்கட்டில் இருக்கின்றனர் என்பது மட்டும் புரியும்.


latest tamil news


இதில் இருந்து மீள வழி சொல்லும் அளவிற்கு தான் ஆளாகவில்லை என்பதும் அந்தக்குழந்தைக்கு புரியும் அந்த குழந்தைக்கு புரிந்த முக்கியமான ஒரு விஷயம் பெரியவர்கள் குடும்பத்தினர்கள் அதிகாரிகள் சொல்வதைக் கேட்கவேண்டும் என்பதுதான்.


latest tamil news


இந்தப் புரிதால்தான் இப்போது எல்லா மக்களுக்கும் தேவை


latest tamil news


இப்போது நாம் சந்திக்கும் பிரச்னை நமக்கு மட்டும் புதிதில்லை மருத்துவத்துறைக்கும் அரசாங்கத்திற்கும் கூட புதிதுதான்
அதனால் என்ன செய்தால் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று தினம் தினம் விதவிதமாக யோசித்து முடிவு எடுக்கின்றனர்.
இந்த முடிவுகள் பலனளிக்க கொஞ்ச நேரமாகலாம் அதுவரை மக்கள் பொறுமை காக்கவேண்டும்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் வடமாநிலங்களில் தொழிலாளர்களாக இருந்தவர்கள் குடும்பம் குடும்பமாக தங்கள் குழந்தைகள், செல்லமாய் வளர்த்த பிராணிகள் சகிதம் நுாறு இருநுாறு கிலோமீட்டர் துாரத்தில் உள்ள தங்கள் கிராமத்திற்கு நடந்தே செல்கின்றனர்.
இதில் எவ்வளவோ பிரச்னை இருக்கிறது ஆனால் அது பற்றி அவர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை அவர்களை கேட்டால் ஒரே வார்த்தையில் எனது இடத்தில் இருந்து பார்த்தால்தான் தெரியும் நாங்கள் அனுபவிக்கும் கொடுமை என்பர்.
இவர்களுக்கு மாற்று இடம், மாற்று உடை ,நேரநேரத்திற்கு உணவு என்று யோசிப்பதற்குள் நடந்தே பல கிலோமீ்ட்டர் துாரத்தை கடந்து விடுகின்றனர்.
இப்போதைக்கு மாற்று பஸ் மட்டும் ஏற்பாடு செய்வோம் என்று செய்துஉள்ளனர்.டில்லி பிகார் போன்ற வடமாநிலங்களின் தலைநகரில் இருந்து இப்படி இடம் பெயர்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இவர்களுககு அன்பும் நம்பிக்கையும் உணவும்தான் அவசியமாகவும் அவசரமாகவும் தேவை
எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X