பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதிப்பு; இந்தியாவில் வெண்டிலேட்டர் தட்டுப்பாடு உள்ளதா?

Updated : மார் 28, 2020 | Added : மார் 28, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

கொரோனா தாக்கம் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ரத்தன் டாடா முதல் அக்ஷய் குமார் வரை பலர் தங்களால் இயன்ற அளவு அரசுக்கு நிதி அளித்து வருகின்றனர். இதன்மூலமாக கொரோனா கட்டுக்குள் வரும் என நம்பப்படுகிறது.latest tamil newsஇதுவரை இந்தியா முழுவதும் 944 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 67 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் ஏற்பட்ட 20 மரணங்கள் பலருக்கு பீதியைக் கிளப்பினாலும் உலக அளவில் ஓப்பிடும்போது இந்தியாவில் மருத்துவ சிகிச்சை, முதலுதவி சேவைகள் துரிதமாக செயல்படுவதாகவே கூறப்படுகிறது. மோடி அரசின் துரித நடவடிக்கைகளாலும் 21 நாட்கள் கட்டாய ஊரடங்கு உத்தரவினாலும் கொரோனா தாக்கம் கணிசமாகக் குறைந்து வருகிறது.


latest tamil newsநோயாளிகளுக்கான வெண்டிலேட்டர்கள் இந்தியாவில் போதிய அளவு இல்லை என சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வருகின்றன. இதன் உண்மை தன்மை குறித்துப் பார்ப்போம்.
பாரத் எலிக்ட்ரானிக்ஸ் லிமிடட் (பெல்) 30,000 வெண்டிலேட்டர்களுக்கு புதிதாக ஆர்டர் கொடுத்து உள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் லா அகர்வல் தெரிவித்துள்ளார். இன்னும் ஒன்று முதல் இரண்டு மாதங்களில் இந்தியாவுக்கு புதிதாக 30,000 வெண்டிலேட்டர் வந்தடையும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.மருத்துவர்கள் கூற்றுப்படி இந்தியாவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்தால் வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறை காரணமாகவே இறப்பு சதவீதம் அதிகரிக்கும் எனப்படுகிறது. 130 கோடி ஜனத்தொகை கண்ட இந்தியாவில் அனைத்து நோயாளிகளுக்கும் வெண்டிலேட்டர் தயாரிப்பது இயலாத காரியம். இதற்கு சிறந்த வழி சமூக விலகல் மட்டுமே. இதனை நாம் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்யது அவசியம். ஏப்., 15க்குப் பின்னர் கொரோனா பாதிப்பை பொருத்து ஊரடங்கு மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்படலாமென நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
UKTamil - London,யுனைடெட் கிங்டம்
29-மார்-202011:29:51 IST Report Abuse
UKTamil நல்ல கதையா இருக்கே "மோடி அரசின் துரித நடவடிக்கைகளாலும் 21 நாட்கள் கட்டாய ஊரடங்கு உத்தரவினாலும் கொரோனா தாக்கம் கணிசமாகக் குறைந்து வருகிறது.". Wait and see next week how your Modi gov controlled it
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
29-மார்-202010:28:19 IST Report Abuse
pradeesh parthasarathy மூவாயிரம் கோடி ரூபாய்க்கு சிலை வைப்பதற்கு காசு இருக்கிறதாம் , எம் எல் ஏக்களை தலா ஐம்பது கோடி கொடுத்து வாங்க காசு இருக்கிறதாம் ..ஆனால் ஆஸ்பத்திரிகளில் வெண்டிலேட்டர் வாங்குவதற்கு பொதுமக்களிடமும் , தொழிலதிபர்களிடமும் நன்கொடை கேட்கிறது அரசு ... கிடைக்கும் வரிப்பணத்தை தாறுமாறாக செலவு செய்து விட்டு , ரிசெர்வே வாங்கி நிதியை கூட விட்டு வைக்காமல் எல்லாத்தையும் வாரி செலவு செய்து விட்டு இப்போ அம்போவென முழிக்கிறது ...
Rate this:
சத்தியம் - Bangalore,இந்தியா
30-மார்-202023:38:07 IST Report Abuse
சத்தியம்அட முட்டாளே பட்டேல் சிலை வைத்தது குஜராத் அரசு .............அது சுற்றுலா தலம் அதன் மூலம் வருமானம் வருகிறது.................அது உனக்கு தெரியுமா.............அது சரி திருவள்ளுவருக்கு எதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்து சிலை வைத்தார்கள்.....................அது போல தான் .................................
Rate this:
Cancel
Boyman - Dindigul,இந்தியா
29-மார்-202006:15:59 IST Report Abuse
Boyman போர்க்கால அடிப்படையில் வென்டிலேட்டர்ஸ்களை தயாரிக்கவும், அவை இப்போது மிகவும் தேவை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X