பொது செய்தி

இந்தியா

கொரோனா அச்சம்: மரத்தில் தனிமைபடுத்தி கொண்ட இளைஞர்கள்

Updated : மார் 28, 2020 | Added : மார் 28, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
WB, labourer,  village, quarantine, tree, கொரோனா, கொரோனாவைரஸ், மரம்,இளைஞர்கள், மேற்குவங்கம், சென்னை

புருலியா: சென்னையில் வேலைபார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய மேற்கு வங்க மாநில இளைஞர்களை தனியாக வசிக்கும்படி டாக்டர்கள் அறிவுரை வழங்கினார். அவர்களது, வீட்டில் தனி அறை இல்லாததால், அவர்கள் மரத்தில் தனியாக வசித்து வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் வங்கிடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 7 இளைஞர்கள், சென்னையில் வேலைபார்த்துள்ளனர். பின்னர் சொந்த ஊர் திரும்பிய அவர்கள், டாக்டர்களை சந்தித்துள்ளனர். அப்போது டாக்டர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இளைஞர்களை, தனிமைபடுத்தி கொள்ளும்படி அறிவுரை வழங்கினார். ஆனால், அவர்கள் ஏழ்மையில் உள்ளதால், வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தங்குவதற்கு ஏற்ற வகையில் துணியை கட்டி அதில் தங்கியுள்ளனர்.


latest tamil news



இது தொடர்பாக இளைஞர் ஒருவர் கூறுகையில், நாங்கள் சென்னையில் வேலைபார்த்துவிட்டு சொந்த ஊருக்கு வாகனம் மூலம் வந்தோம். தற்போது நலமாக உள்ளோம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, எங்களை 14 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ளும்படி டாக்டர் அறிவுரை வழங்கினார். ஆனால், எங்களது வீட்டில் தனியாக வசிப்பதற்கு தனி அறை இல்லை. இதனால், நாங்கள் எங்கு வசிக்கலாம் என்பது குறித்து இளைஞர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.. அப்போது எடுத்த முடிவின்படி நாங்கள் மரத்தில் தனியாக வசித்து வருகிறோம். எங்களுக்கு தேவையான வசதி உள்ளது. காலை உணவு எங்களை தேடி வருகிறது. மதியமும், இரவும் அரிசியில் செய்யப்பட்ட உணவை உண்கிறோம். குடி தண்ணீரும் கிடைக்கிறது. தேவைப்பட்டால், உணவு சமைக்கவும், தண்ணீர் காய்ச்சவும் அடுப்பு எங்களிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
29-மார்-202010:56:25 IST Report Abuse
அம்பி ஐயர் நல்ல விஷயம்... மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள்... ஆனால் நம்ம ஊருலயோ... பாஸ்போர்ட்ல ஒரு அட்ரஸ்... இப்போ இருக்குறது ஒரு அட்ரஸ்.... இதுல ஆளைக் கண்டுபிடிக்கிறதே பெரியபாடு.... நடிகை கவுதமியே அட்ரஸ் மாத்தாததால கமல் வீட்ல ஸ்டிக்கர் ஒட்டுணாங்க.... விஷயம் வெளில தெரிஞ்சுது.... வெளியில தெரியாம எத்தனை ஆயிரம் பேர்களோ.... முகவரி மாறி இருப்போரின் பாஸ்போர்ட்டை அரசு உடனே ரத்து செய்ய வேண்டும்....
Rate this:
Cancel
29-மார்-202008:11:42 IST Report Abuse
ஆப்பு உச்சா போறதுக்கு இறங்கி வருவீங்களா? இல்லே...
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
29-மார்-202006:52:36 IST Report Abuse
Nathan அரசின் வேண்டுகோளை இயலா நிலையிலும் நிறைவேற்றும் இவர்களா ஆதிவாசிகள். வேண்டுமென்றே வெளியே உலவி, அந்நிய ஆட்களையும் தருவித்து , பரப்ப துடிக்கும் அவர்கள் அல்லவோ மிருக ஜாதி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X