'ஆயுஷ்' மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

Updated : மார் 30, 2020 | Added : மார் 28, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
'ஆயுஷ்' மருத்துவர்கள், பிரதமர், மோடி, வேண்டுகோள்

புதுடில்லி: ''கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஆயுஷ் மருத்துவர்கள், தங்களிடம் உள்ள வசதிகளை பயன்படுத்தி, கிருமிநாசினி உள்ளிட்டவற்றை அதிக அளவில் தயாரிக்க முன்வர வேண்டும்,'' என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகள், 'ஆயுஷ்' என்ற ஒரு துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த துறையினருக்காக, 'ஆயுஷ்' என, பிரத்யேக அமைச்சகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆயுஷ் முறை மூலம் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுடன், பிரதமர் மோடி, , 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் கலந்துரையாடினார்.


latest tamil news
அப்போது அவர் பேசியதாவது:கொரோனா வைரஸ், வேகமாக பரவி வருகிறது. ஆயுஷ் துறையின் கீழ் செயல்படும் மருத்துவர்கள், கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களை தயாரித்து தர முன்வர வேண்டும்.
வீட்டிலேயே யோகா பயிற்சி செய்வதை, ஆயுஷ் துறையில் உள்ளவர்கள், மக்களிடம் பிரபலப் படுத்தி வருகின்றனர்; இது, மகிழ்ச்சி அளிக்கிறது. கொரோனாவுக்கு ஆயுஷ் துறையில் மருந்து கண்டுபிடித்ததாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், கொரோனாவை, ஆயுஷ் மருந்து கட்டுப்படுத்தும் என்பதை நிரூபிக்க வேண்டும். எனவே, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், ஆயுஷ் மருத்துவ நிபுணர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, இது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா
30-மார்-202016:55:26 IST Report Abuse
Balamurugan Balamurugan பாரம்பரிய சித்த மருத்துவர்களிடம் அனைத்து விதமான நோய்களுக்கும் மருந்து உள்ளது அவர்களால் சுயமாக மருந்து தயாரிக்கும் திறமையும் உள்ளது இது நாள் வரையிலும் பாரம்பரிய மருத்துவர்கள் சுயமாக சித்த மருந்து தயார் செய்து நோயை குணப்படுத்தி வருகின்றனர் அந்தப் பாரம்பரிய சித்த மருத்துவர்களை அரசு கண்டுகொள்வதே இல்லை நீ டாக்டருக்கு படித்து இருக்கிறாயா சர்டிபிகேட் வைத்திருக்கிறாயா என்றுதான் அரசு கேட்கிறது உலகின் அழிவு காலம் நெருங்கும்போது பாரம்பரிய சித்த மருத்துவர்களை மதிக்க வேண்டிய சூழ்நிலை விரைவில் உருவாகும்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
29-மார்-202017:49:00 IST Report Abuse
RajanRajan மத்திய அரசு நமது பண்டைய ஆயுர்வேதம் சித்தா தன்வந்திரி வைத்திய முறைகள் சார்ந்த மருத்துவ ஆராய்ச்சிக்கூடங்களை முன்னெடுக்க வேண்டும். இந்த மருந்துகள் அத்தனையுமே உயிர் சார்ந்த இயக்கம் உடலை பேணுகிறது எனும் சித்தாந்தம் கொண்டது. ஆனால் அலோபதி மருந்துகள் இந்த அடிப்படையில் இருந்து வேறு பட்டது பக்கவிளைவுகள் சார்ந்தது. எல்லாவரத்திற்கும் மேலாக எந்த வியாதி எந்த மருத்துவத்தால் குணமடைகிறது என்பது தான் இங்கு மிகவும் முக்கியம். நோயின் வீரியத்தை கட்டுப்படுத்துவதில் அலோபதி ஒரு முன்னோடி என்றால் சரீரத்தின் எதிர்பாற்றலை கட்டி காப்பதில் இந்த பண்டைய இந்திய மருத்துவ முறைகள் தலைசிறந்தது. சித்தா ஆயுர்வேத மருந்துகளினால் குணமடைந்த நோய்கள் மறுபடி அவர்களை தாக்காது என்பதும் உண்மையே. சித்தா ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பு என்பது ஒருவகையில் மிக கடினமானது என்பதும் உண்மையே.
Rate this:
Cancel
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
29-மார்-202012:36:16 IST Report Abuse
RADE மோடிக்கு பாராட்டுக்கள், ஆயுஷ் அமைப்பின் மருத்துவர்கள் நினைவில் கொண்டு இந்த அறிக்கை தங்களது யதார்த்தத்தையும் மக்கள் நலம் மற்றும் நாடு முன்னேற வேண்டும் என்ற சிந்தனையை தெள்ள தெளிவாக காட்டுகிறது. தமிழகத்தில் ஒரு சித்த டாக்டர் திரு கா தணிகாசலம் வாத சுரக் குடிநீர் தான் தேவை என்று சொல்கிறார். தமிழக அரசு சித்த மருத்துவர்கள் கூறியது போல் இப்போது நமக்கு தேவை கபசுரக் குடிநீர் இல்லை என்றும், தனது ஆலோசனைகளை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்றும் 23 தேதி யூடூப் வீடியோ பதிவில் வேண்டுகோள் விடுத்தது உள்ளார். அவர் கூறிய ஒரு சில விஷயங்கள் நுரையீரல் எப்படி பழுது ஆகிறது இந்த கொரோனா கிருமியால் என்று 26 தேதி CNN பத்திரிகையில் உறுதி படுத்த பட்டு உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X