அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., - பா.ம.க., இடையே போலி நட்பு!

Updated : மார் 29, 2020 | Added : மார் 28, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
அதிமுக, பாமக, போலி, நட்பு, அதிருப்தி, ஓட்டு

அ.தி.மு.க., - பா.ம.க., கூட்டணியால், யாருக்கு லாபம், நஷ்டம் என, இரு கட்சிகளும் கணக்கு போட்டதில், இரு கட்சிகளுக்கும் லாபம் இல்லை என, தெரிய வந்துள்ளது. அதனால், அக்கட்சிகள், அடுத்த சட்டசபை தேர்தல் வரை, போலி நட்பு கட்சிகளாக இருக்க முடிவு செய்துள்ளன.

கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., - பாம.க., - பா.ஜ., கூட்டணியில், தர்மபுரியில், பா.ம.க., வெற்றி பெற்றது. தி.மு.க., டிபாசிட் பெற முடியாத நிலைக்கு சென்றது. கடந்த, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இடம் பெற்றும், தர்மபுரி தொகுதியில் தோல்வி அடைந்தது. குறிப்பாக, தர்மபுரி, திண்டுக்கல், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதுார், அரக்கோணம் ஆகிய, லோக்சபா தொகுதிகளில், பா.ம.க.,வால், அ.தி.மு.க.,வின் ஓட்டுக்களை கூட பெற முடியவில்லை.


வெற்றிக்கு உறுதுணைஆனால், விழுப்புரம், கடலுார் ஆகிய தொகுதிகளில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு ஓட்டுக்களால், அத்தொகுதிகளில் மட்டும், பா.ம.க.,வுக்கு கணிசமான ஓட்டுக்கள் கிடைத்து உள்ளன.அதேபோல், பா.ம.க., வலுவாக உள்ள, சேலம் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க.,வால் வெற்றி பெற முடியவில்லை. முதல்வரின் சொந்த தொகுதியான எடப்பாடியில், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது.

ஆனால், 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், எடப்பாடி சட்டசபை தொகுதியில், பா.ம.க., கூட்டணி இல்லாமல், 90 ஆயிரம் ஓட்டுக்களை, அ.தி.மு.க., அள்ளியது. எனவே, அ.தி.மு.க., - பா.ம.க., கூட்டணியால், இரு கட்சிகளுக்கும் எந்த லாபமும் இல்லை. அ.தி.மு.க., - பா.ம.க., கூட்டணி அமைந்தும், வன்னியர் சமுதாய ஓட்டுக்கள், தி.மு.க.,வுக்கு கிடைத்தது தான், லோக்சபா தேர்தலில், அக்கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது.


அதிருப்தி

கொங்கு மண்டலத்தில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவான, கவுண்டர் சமுதாயத்தினரின் ஓட்டுக்கள், தங்களுக்கு கிடைக்கவில்லை என்ற அதிருப்தி, பா,ம,க.,வில் உள்ளது.இது குறித்து, பா.ம.க., வட்டாரங்கள் கூறியதாவது:பா.ம.க., மாநில நிர்வாகி ஒருவர், ரஜினியை ஆதரித்து, 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவு செய்துள்ளார்; அந்த பதிவையோ, அந்த நிர்வாகியையோ, பா.ம.க., தலைமை, இதுவரை கண்டிக்கவில்லை.

சமீபத்தில், அன்புமணி - ரஜினி சந்திப்பு நடந்த தகவலும் வெளியானது. அன்புமணியின் செயல்பாடுகளை, ரஜினி, தன் நெருங்கிய வட்டாரத்தில் பாராட்டி உள்ளார். அந்த தகவலும், பா.ம.க.,வுக்கு கிடைத்துள்ளது. அரசியலில், புதிய மாற்றத்தை தர வேண்டும் என்பது தான், பா.ம.க.,வின் இலக்கு. அதையே, ரஜினியும் வலியுறுத்துவதால், இரு தரப்புக்கும் இடையே, நல்ல இணக்கம் ஏற்பட்டு உள்ளது.அதன் காரணமாகவே, சமீபத்திய ரஜினியின் செயல்பாடுகள் எதையும், பா.ம.க., விமர்சிக்கவில்லை. மவுனமாக இருப்பதன் ரகசியம் இது தான்.இதை அறிந்துள்ள, அ.தி.மு.க., தரப்பு, வழக்கத்தை விட அதிகமாக, ரஜினியை விமர்சித்து வருகிறது.


அறிக்கைஇதற்கிடையில், அ.தி.மு.க.,வுடன் நட்பு கட்சியாக, பா.ம.க., இருந்தாலும், அரசின் செயல்பாடு களை, ராமதாஸ் விமர்சித்து வருகிறார். 'கொரோனா வைரஸ்' ஊரடங்கு, நாடு முழுவதும், 21 நாட்கள் நீடிக்க வேண்டும் என்ற கருத்தை, பிரதமர், மோடியிடம், ராமதாஸ் தான், தொலைபேசியில் வலியுறுத்தினார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையில், மாநில அரசின் நடவடிக்கைகளை, ஒரு பக்கம் பாராட்டி, அறிக்கை விட்டாலும், மற்றொரு பக்கம் குறைகளை சொல்லி, அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என, கூறி வருகிறார்.

இரு கட்சிகள் மத்தியில் நட்பு தொடர்கிறது என்றாலும், அந்த நட்பு போலியானது என, இரு கட்சியினரும் கருதுகின்றனர். அதாவது, இந்த கூட்டணியால், அ.தி.மு.க.,வுக்கும் லாபம் இல்லை; பா.ம.க.,வுக்கும் லாபம் இல்லை என, இரு கட்சிகளின் தலைமையும் கருதும் நிலை வந்துள்ளது. இரு கட்சிகளின் கூட்டணி, பொருந்தா கூட்டணியாகவே உள்ளது. எனவே, அடுத்த சட்டசபை தேர்தல் வரை, இந்த போலி நட்பு தொடரும்.இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
29-மார்-202020:32:16 IST Report Abuse
Dr.C.S.Rangarajan பாமாகாவை சேர்த்துக்கொண்டு தோற்பது ஒருவகை. சேர்த்துக்கொள்ளாமல் தோற்பது இன்னொருவகை. முதல்வகை நிரந்தர 'தலைவலியை' தரும். இரண்டாம்வகை 'தலைவலி போயேபோய்ச்சே' என எல்லா நேரமும் கூறத்தக்கது.
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
29-மார்-202015:19:56 IST Report Abuse
Elango பா.மா.க பா.ஜா.க ரஜினி மூன்றாவது அணியாக மாறினால் தீமூக வோட்டு குறைய வாய்ப்பு உள்ளது.... மூன்றாவது அணி வெற்றி பெற எல்லாம் வாய்ப்பு இல்லை.... அதே போல் சசி வெளியே வந்து தனியாக நின்றால் தீமுகா விற்கு நல்லது
Rate this:
Cancel
Santhosh Gopal - Vellore,இந்தியா
29-மார்-202012:32:25 IST Report Abuse
Santhosh Gopal இல்லை லோக்சபா தேர்தலை இன்னும் எத்தனை நாளைக்கு ஒப்பீடு செய்வீர்கள்? லோக்சபா தேர்தலில் பாஜக வர கூடாது என்பதால் அதிமுக வினரே சொந்த கட்சியை விட்டு திமுகவுக்கு ஓட்டு போட்டனர். பாமக வுக்கு ஏன் ஓட்டு போடவில்லை என்றால் என்ன அர்த்தம்? அதிமுக மட்டும் ஜெயித்து பாமக தோற்று போயிருந்தால், அதிமுக உள்ளடி வேலை செய்து பாமகவை தோற்கடித்து விட்டார்கள் என்று குறை சொல்வதில் நியாயம். அவங்களும் சேர்ந்து தானே வாஷ் அவுட் ஆனாங்க? லோக்சபா தேர்தல் சுடலைக்கு ஓட்டு போடல, பப்புவுக்கு போட்டாங்க, கூட இருந்த சுடலைக்கு யோகம் அடித்து விட்டது அவ்வளவு தான். மேலும் லோக் சபா தேர்தல் முடிந்து, வேலூர் தேர்தல், இரண்டு இடை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் முடிந்து விட்டது, இன்னும் எத்தனை நாளைக்கு லோக் சபா தேர்தலை பற்றியே யோசிப்பீங்க? அன்புமணிக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவி கொடுத்தாச்சு, சேலம் மாவட்ட சேர்மேன் பதவியும் கொடுத்தாச்சு, இன்னும் குறை சொன்னா என்ன அர்த்தம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X