பொது செய்தி

இந்தியா

என் 95 முகக்கவசம் பாதுகாப்பானதா?

Updated : மார் 28, 2020 | Added : மார் 28, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

கொரோனா வைரஸ் தொற்று நம் சுவாசிக்கும் காற்றின் மூலம் பரவும் எனக் கூறப்பட்டும் நிலையில் உலகம் முழுவதும் முகக்கவசத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பல வகையான முக கவசம் விற்பனையாகப்படுகிறது. குறிப்பாக என் 95 மாஸ்க் பெரும் அளவில் விற்பனையாகி, தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இப்படியான சூழலில் என் 95 முக கவசம் நம்மை கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து பாதுகாக்குமா?



latest tamil news




என் 95 முக கவசம் என்றால் என்ன?


என் 95 முக கவசம் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் தரத்திற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பான முக கவசம் ஆகும். பெரும்பாலான தொழிற்சாலைகளில் இரசாயனம் தயாரிப்பில் ஈடுபடுவதால் இந்த என் 95 முக கவசம் காற்றை தடுத்து தூய்மையான காற்றைச் சுவாசிக்க உதவுகிறது. மேலும் தூசி, சிறிய துகள்களில் சுவாசிப்பதைத் தடுக்க அவை பயன்படுத்தப் படுகின்றன. இப்படியான இந்த முக கவசத்தை பல நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றது. ஆனால் என் 95 என்பது அமெரிக்க தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான தேசிய நிறுவனத்தின் தயாரிப்பில் வருகிறது, இந்த முக கவசத்தை 8 மணி நேரம் பயன்படுத்தலாம். எனவே என் 95 முக கவசம் பயன்படுத்துவதால் நாம் கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.


latest tamil news




மருத்துவர்கள் சிகிச்சையின்போது பயன்படுத்தும் முக கவசத்தை இப்போது பயன்படுத்தலாமா?


மருத்துவ நிபுணர்கள் கூறும் பொதுவான அறிவுரை என்னவென்றால், இவ்வாறான முககவசம் துணியில் செய்யப்படுவதால் அதனைச் சரியாக அணியாவிட்டால் அவை முற்றிலும் பாதுகாப்பானதாக இருக்காது என்கின்றனர். 'என் 95' முத்திரை கொண்ட முக கவசம் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது, 95 சதவீதம் நாம் சுவாசிக்கும் சுத்தமில்லா காற்றை தடுக்கிறது. மேலும் மக்கள் முக கவசங்களை சரியாகப் பயன்படுத்துவதில்லை,
அறியாமையில் அதனை பயன்படுத்துகின்றனர் எனவும் கூறுகின்றனர்.


latest tamil news





முக கவசம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதா?

முக கவசங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் உலகெங்கிலும் பற்றாக்குறை உருவாக்கியுள்ளது, மேலும் பல ஆன்லைன் மூலமாக விற்பனையாளர்கள் விலையை அதிகரித்து விற்பனை செய்து வருகின்றனர். தொழிற்சாலைகள் உற்பத்தியை அதிகரித்துள்ளன, ஆனாலும் பல மருத்துவமனைகள் தங்கள் ஊழியர்களுக்கு போதுமான முக கவசம் இல்லை என தெரிவித்துள்ளன. பல முன்னணி நிறுவனங்களும் முக கவசத்தின் தேனையை உணர்ந்து அதை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் என் 95 முக கவசம் அதிகளவில் ஏற்றுமதி செய்கின்றன. மேலும் போதியளவு முக கவசம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - ,
29-மார்-202008:36:09 IST Report Abuse
Sundar மஞ்சள் நீரில் வெள்ளை துணியை தோய்த்து முக கவசமாக பயன்படுத்துதல் மிகவும் நல்லது .
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
28-மார்-202022:40:39 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி எங்கள் ஊர் மருந்துக் கடைகளில் முகக் கவசம் ஹேன்ட் வாஷ் டெட்டால் போன்றவை கிடைப்பதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X