அரசியல் செய்தி

தமிழ்நாடு

அனைத்து கட்சி கூட்டம் ஸ்டாலின் வலியுறுத்தல்

Updated : மார் 29, 2020 | Added : மார் 28, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
 அனைத்து கட்சி, கூட்டம், ஸ்டாலின், வலியுறுத்தல், Stalin ,All party Meeting, Demand

சென்னை :'கொரோனா தடுப்பில், மாநிலம் முழுதும் நிலவும் உண்மை நிலையை அறிந்து, நடவடிக்கைகள் எடுக்க, அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை, முதல்வர் கூட்ட வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் வலியுறுத்திஉள்ளார்.

அவரது அறிக்கை:அன்றாட தனிமை வாழ்க்கையில், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை அறிந்து, அவற்றிற்கு உடனுக்குடன் உரிய தீர்வு காண்பது அவசியம்.


உரிய சிகிச்சை

கொரோனா வைரஸ் தடுப்பில், மக்கள் இன்னும் உறுதியுடன், சமூக தொடர்பில் இருந்து, தங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்பதை, தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

மக்கள் மத்தியில் நிலவும் பதற்றத்தையும், பீதியையும் தணிப்பதற்குரிய தகவல்களையும் அளித்துக் கொண்டே இருக்க வேண்டும். மக்கள் மனதில் உள்ள பதற்றம் தணிந்தால் தான், தனிமைப்படுத்துதல் முயற்சிக்கும், தனிமைப்படுத்தப்பட்டவர் உரிய சிகிச்சை பெற்று, வீடு திரும்புவதற்கும் பேருதவியாக இருக்கும்.

மக்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படுவதற்கான இந்த பணியில், ஆளும்கட்சி மட்டுமின்றி, அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஈடுபட வேண்டும். எனவே, அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை, உடனே கூட்ட வேண்டும். ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், அதற்கு பிரச்னை இருக்கும் என்றால், அனைத்து கட்சி தலைவர்களுடனும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆலோசனை நடத்த வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

'தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கோரிக்கை ஏற்று, அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும்' என, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோவும் கூறியுள்ளார்.இதற்கிடையில், 'டுவிட்டர்' பக்கத்தில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது:மேற்கு வங்க மாநிலம், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,யான, டெரிக் ஓ பிரையன், 'சென்னையில் தவித்த, மேற்கு வங்கத்தை சேர்ந்த, 40 தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும்' என, என்னை தொடர்புகொண்டு கேட்டார்.


சிறு துளி

இதையடுத்து, அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டன. இதற்காக, எனக்கு நன்றி தெரிவித்து, டுவிட்டர் பக்கத்தில், 'பெருங்கடலில் ஒரு சிறு துளி' என, குறிப்பிட்டு நெகிழ்ந்து இருந்தார். இதற்கு, நன்றி தெரிவித்து, நான் வெளியிட்ட பதிவில், இதுபோன்ற காலங்களில், அனைத்து மாநிலங்களும், எல்லைகள், கட்சி சார்புகளை கடந்து, உதவ வேண்டும் என்றும், தி.மு.க.,வின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும், தொண்டர்களும், தேவை உள்ளோருக்கு உதவுமாறு வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்து உள்ளேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.CHELLAPPA - Vadodara,இந்தியா
30-மார்-202017:56:47 IST Report Abuse
R.CHELLAPPA During the meeting he will surrer Gopalapuram house for public use. He will also surrer all panchami lands. He will also submit jaip certificate.
Rate this:
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
30-மார்-202001:11:35 IST Report Abuse
Ramasami Venkatesan திமுக MP கள் 39 பேர் தன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு பகுதியை கொரானா தடுப்புக்கு அவரவர் தொகுதிக்கு செலவிட்டாலே போதுமானது. செய்யவே மாட்டார்கள். அதில் தனக்கு போக (ஆட்டைய) தான் மீதி தொகுதிக்கு - மேம்பாட்டுக்கு அல்ல தன் தேர்தல் சிலவுக்கு. கொடுத்த நிதிக்கு கணக்கு சொல்லாமல், மேலும் அதிகமாக நிதி கேட்பார்கள் அதையும் கபளீகரம் செய்ய. ப்ரஷாந்த் கிஷோருக்கு 350 கோடி கொடுத்த திமுகவிடம் பணத்துக்கா குறைச்சல், ஆனால் செய்யமாட்டார்கள். கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிற கேஸ், தப்பு, தப்பு, இவர்களுக்குதான் கடவுளே கிடையாதே, ஆகையாலே அத்த தேங்காயும் வீட்டுக்கே. மக்கள் வெறுமனே ஓட்டுபோடத்தான் பிறகு நீ யாரோ, நான் யாரோதான். தன் குடும்பத்தில் யாருக்காவது கொரானா என்றால் எப்படி அலறுவார்கள் தெரியுமா.
Rate this:
Cancel
SIVA G india - chennai,இந்தியா
29-மார்-202023:00:17 IST Report Abuse
SIVA G  india மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள எந்த அரசும் இது வரை எந்த எதிர்கட்சியினையும் அழைத்து பேசவில்லை. அழைத்து பேசினால் மக்கள் சேவை தடைபடும். மக்களுக்கு தேவைகளுக்கு அவசர எண்களும் வாடஸ்அப் போண்றவை மூலம் அரசு சென்றுவிடும். இவர்கள் எல்லோரும் அரசியல் செய்யாமல் மௌனமாக இருந்தாலே போதும். நல்லதே நடக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X