சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'தண்ணீர் கூட கொடுக்க மாட்டாங்க!'

Added : மார் 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'தண்ணீர் கூட கொடுக்க மாட்டாங்க!'

'தண்ணீர் கூட கொடுக்க மாட்டாங்க!'

திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் ஒன்றியம், மாதப்பூர் ஊராட்சியில், துப்புரவு பணி செய்ய வந்த துாய்மை பணியாளர்களை, ஊராட்சி தலைவர், அசோக்குமார், மலர்கள் துாவி வரவேற்று, வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறுகையில், 'இந்த இக்கட்டான சூழலில், தங்கள் உயிரை துச்சமாக மதித்து, பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் சேவையை, அனைவரும் பாராட்ட வேண்டும். பொதுமக்கள் அனைவரும், துப்புரவு பணியாளர்களுக்கு, தங்கள் அன்பையும், ஆதரவையும் தெரிவிக்க வேண்டும்' என்றார்.அங்கிருந்த துப்புரவு பணியாளர் ஒருவர், 'இந்த மக்கள், இப்போ நம்மள பாராட்டுவாங்க... பிரச்னை சரியானதும், நம்மளுக்கு தண்ணீர் கூட கொடுக்க மாட்டாங்க' என்றதும், மற்றவர்கள் அதை ஆமோதித்தனர்.

'ஜெயில்ல போடுங்க சார்!'

'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன், புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி, சட்டசபை வளாகத்தில், சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.பின், முதல்வர், நிருபர்களிடம் கூறுகையில், 'மக்கள் வீட்டிலிருந்து வெளியே வரக் கூடாது என, கடுமையாக அறிவுறுத்தியும், கிராமப்புற மக்கள் அலட்சியமாக உள்ளனர். 'புதுச்சேரியில் பேரிடர் சட்டமும், தொற்று நோய் தடுப்பு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதை யார் மீறுகிறார்களோ, அவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்' என்றார்.முக கவசம் அணிந்திருந்த நிருபர் ஒருவர், 'எவ்வளவு சொன்னாலும், சில ஜென்மங்கள் திருந்தவே மாட்டேங்கிறாங்க... தேவையில்லாம, வெளியே சுத்துறவங்கள பிடிச்சி, ஜெயில்ல போடணும்...' என்றார். சுற்றியிருந்தோர், அதை ஆமோதித்தனர்.

'சுகாதாரமும் போயிடும்'

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர், அன்பழகன் தலைமை வகித்தார்.இதில் பங்கேற்ற, போக்குவரத்துத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறுகையில், 'அத்தியாவசியப் பணிகளுக்கு செல்லக்கூடிய பணியாளர்களுக்கு, அடையாள அட்டை கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு, அரசு போக்குவரத்துக் கழகம் மூலம், சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்படும்' என்றார்.முககவசத்தோடு பங்கேற்ற நிருபர் ஒருவர், 'அந்த சிறப்பு பஸ்சை, கிருமி நாசினி தெளித்து, சுகாதாரமாக வச்சிக்கணும்... மக்களுக்காக, சேவை செய்யுறவங்களுக்கு, உரிய பாதுகாப்பு கொடுக்கணும்' என்றார். அருகிலிருந்தவர், 'அட நீங்க வேற... கொரோனா போனதும், பழையபடி, சுகாதாரமும் போயிடும் பாருங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் அமைதியாக இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
29-மார்-202010:39:22 IST Report Abuse
D.Ambujavalli அவர்கள் சொல்வதில் தவறென்ன? அவர்கள் தெருவின் இந்தக்கோடியில் வந்தாலே, மூக்கைப் பொத்திக்கொண்டு அந்தக்கோடிக்கு ஓட்டம் பிடிப்பவர்தானே Ivar
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X