சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மார் 28, 2020
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

காங்., முன்னாள் தலைவர் ராகுல்: ஊரடங்கு உத்தரவால் ஊர் திரும்ப முடியாமல், பல மாணவர்கள், விடுதிகள் மற்றும் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவ உதவிகள், எவ்வித தடையுமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: உண்மை தான். நாட்டின் சில மாநிலங்களில், இந்நிலை தான் காணப்படுகிறது. அவசரமாக கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டதால், இந்நிலை ஏற்பட்டிருக்கும். எனினும், டில்லி, ஜவஹர்லால் நேரு மற்றும் ஜாமியா பல்கலைக்கழகங்களில், உங்கள் ஆதரவாளர்கள் அதிகம் இருப்பதால், ஒட்டுமொத்த கல்லுாரி மாணவர்கள் நலனில் அக்கறை வந்து விட்டதோ என்ற, 'டவுட்'டும் ஏற்படுகிறது.


பா.ஜ., தலைவர், முருகன்: ஊரடங்கு உத்தரவால், யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்பது, பிரதமர் மோடியின் நோக்கம். கட்சியினர் ஒவ்வொருவரும், தினமும், ஐந்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இதனால், தினமும் ஐந்து கோடி பேர், பசியிலிருந்து மீட்கப்படுவர். ஏப்., 14 வரை, இதை செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள், கொரோனா பாதுகாப்பிற்காக வலியுறுத்தியுள்ள, பாதுகாப்பு அம்சங்களுக்கு உட்பட்டு, இவ்வாறு உதவ வேண்டும்.

'டவுட்' தனபாலு: தாராள எண்ணம் கொண்ட உங்கள் கட்சியினர், பலருக்கும், பல விதங்களில் உதவி செய்து வருகின்றனர். அவர்களுக்கு நீங்கள் விடுத்துள்ள கோரிக்கை, மேலும் உத்வேகம் அளிக்கும் என்பது நிச்சயம். அதற்காக, ஐந்து கோடி பேரை பசியில் இருந்து மீட்க வேண்டும் என்பது தான், தமிழக, பா.ஜ.,வுக்கு, ஒரு கோடி பேர் உறுப்பினர்களாக இருப்பரோ என்ற, 'டவுட்'டை ஏற்படுத்துகிறது!


அ.ம.மு.க., பொதுச்செயலர், தினகரன்: ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பாகவே, தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு, சரக்குகளை ஏற்றிச் சென்ற லாரிகள், நாட்டின் பல்வேறு இடங்களில், நடு வழியில் நிறுத்தப்பட்டு உள்ளன. அதில் சென்ற, டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள், உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பது, கவலை அளிக்கிறது. அவர்களுக்கு உதவ, மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

'டவுட்' தனபாலு: 'தமிழக அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், 'டச்' பண்ணாத சப்ஜெக்ட் என்ன என பாருங்கள். அதன் அடிப்படையில் அறிக்கை தயாரிக்க வேண்டும்' என, 'அட்மின்'களுக்கு உத்தரவிட்டிருந்தீர்களோ என்ற, 'டவுட்'டை, இது ஏற்படுத்துகிறது. அனேகமாக யாருமே அறிக்கை விடாத, லாரி டிரைவர்கள் நலம் பற்றி இது இருப்பதால், இந்த, 'டவுட்' வலுவாகியுள்ளது.


மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார்: முதல்வர், இ.பி.எஸ்., கூறியது போல, விழித்திருங்கள், விலகி இருங்கள், வீட்டில் இருங்கள். அப்போது தான் தொற்று பரவுதலில் இருந்து நம்மை காக்க முடியும். சின்னம்மை, போலியோ போன்றவற்றை ஒழித்தது போல, கண்ணுக்கு தெரியாத கொரோனாவையும் ஒழிப்போம். கொரோனாவை விரட்டியடிக்க அரசின் அறிவுரைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்; ஒவ்வொருவரும், 3 மீட்டர் இடைவெளியை பின்பற்றுங்கள்.

'டவுட்' தனபாலு: கொரோனா விவகாரத்தில் நீங்கள் திடீரென பேட்டி அளித்தது, பலருக்கும், பல விதமான, 'டவுட்'டுகளை கிளப்பி விட்டு விட்டது. சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் சிறப்பாக செயல்படும் நிலையில், அவரை பின்னுக்குத் தள்ள முயற்சி நடக்கிறதோ என்பதே முதல் டவுட். எனினும், இரவு, பகலாக பாடுபடும் அவருக்கு பதில், நீங்கள் பத்திரிகையாளர்கள் சந்தித்திருப்பீர்கள் என்ற எண்ணமும், மக்களுக்கு வந்தது!

பத்திரிகை செய்தி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத் துறைக்கு, புதிதாக, 530 டாக்டர்கள், 1,000 நர்ஸ்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன. பணி ஆணை கிடைத்த, மூன்று நாட்களுக்குள், பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது.

'டவுட்' தனபாலு: கொரோனாவுக்கு எதிராக, போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என, அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதில், 'போர்க்கால நடவடிக்கை' என்பதன் அர்த்தம், இந்த அதிரடி நியமனங்கள் மூலம், 'டவுட்' இல்லாமல், தமிழக மக்களுக்கு புரிந்திருக்கும். இதுபோல, தனியார் மருத்துவமனை பணியாளர்களையும், தற்காலிகமாக அரசு பணியில் இணைத்துக் கொள்ளலாமே!

வருவாய் துறை அமைச்சர், உதயகுமார்: நாம் தனித்திருப்பது, நாட்டுக்கு செய்யும் சேவை. இதை உணர்ந்து, அனைவரும் அரசின் நடவடிக்கைகளுக்கு, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில், வருவாய் துறை ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்; அனைவரும் பாதுகாப்பாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

'டவுட்' தனபாலு: சுகாதாரத்துறை தலைமையில், வருவாய் துறை, காவல் துறை மற்றும் பிற துறையினர் செவ்வனே செயல்படுகின்றனர். வருவாய் துறைக்கு அமைச்சராக இருப்பதால் தான், உங்கள் துறையினர் மீது அதிக அக்கறையுடன், 'பாதுகாப்பாக செயலாற்றுங்கள்' என்கிறீர்கள் என்பது, 'டவுட்' இல்லாமல் தெரிகிறது. சுகாதார பணிகளில், வருவாய் துறையினருக்கு முன் அனுபவம் இல்லாமல் இருப்பதும், உங்கள் அக்கறைக்கு காரணமாக இருக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X