தமிழக அரசு மீது பிரதமர் கோபம்?

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (95)
Share
Advertisement
Corona, Prime_Minister, Modi,கொரோனா, 144, தடை, பிரதமர், கோபம், தமிழக_அரசு

கொரோனாவை தடுக்க, தமிழக அரசு பல தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. 144 தடை உத்தரவால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க, மக்களுக்கு சில கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது. இது பெரிதும் பாராட்டப்பட்டாலும், பொதுமக்கள் சாலைகளில் சுற்றித் திரிவதை தடுக்க முடியவில்லை என, தமிழக அரசு மீது குற்றம் சாட்டப்படுகிறது.


latest tamil news



மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளோடு, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக உரையாடி, மாநில அரசுகள் எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, தினமும் கண்காணித்து வருகிறார். மக்கள் பாதுகாப்பான துாரத்தில், வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என, மத்திய அரசும், மருத்துவர்களும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்க, 'தமிழகத்தில் இதை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை' என, ஹர்ஷ் வர்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்பாக, டாஸ்மாக் கடைகளில் அலை மோதிய கூட்டம் குறித்து கோபப்பட்டிருக்கிறார். அகில இந்திய மருத்துவ கவுன்சில் தினந்தோறும் அளித்து வரும் ஆலோசனைகளை அமல்படுத்துவதிலும், தமிழக அரசு சரியாக நடந்து கொள்ளவில்லை என, அமைச்சர் குறைபட்டிருக்கிறார்.இதையடுத்து, பிரதமர் மோடி, தமிழக முதல்வர்இ.பி.எஸ்., உடன் பேசியுள்ளார்.

அப்போது, தமிழகத்தில் மக்கள் சர்வ சாதாரணமாக தெருவில் நடமாடுவதை சுட்டிக் காட்டி கோபப்பட்டாராம். இந்த விஷயத்தில், தமிழகம் உட்பட சில மாநில அரசுகள், கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என, மோடி சொன்னதாக, அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement




வாசகர் கருத்து (95)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி அல்ல - Koodal,இந்தியா
31-மார்-202007:06:54 IST Report Abuse
 வல்வில் ஓரி அல்ல 1. தமிழக முதல்வர் மீது பிரதமர் கோபம்: செய்தி 2. முதலில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடியிருக்கும் இந்த நிலையில் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் கோயிலில் பூஜை நடத்துகிறார் அவர் மீது கோபம் வரவில்லையா பிரதமருக்கு ? 3.ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில் டெல்லிக்கு உத்தரபிரதேசத்தில் மக்களை அழைத்து வர பேருந்துகளை அனுப்பினார் அப்போது பிரதமருக்கு அந்த முதல்வர் மீது கோபம் வரவில்லையா ? 4.டெல்லியில் காவல் துறைக்கு பொறுப்பாக இருக்கும் அமீட் ஷா சரியாக பேருந்து நிலையத்திலுள்ள கூட்டத்தை கையாளவில்லை என அவர் மீது கோபம் வரவில்லையா? First think about yourself Mr.PM.Dont ask excuse to me.
Rate this:
Cancel
mohanamurugan - panruti,இந்தியா
30-மார்-202017:32:44 IST Report Abuse
mohanamurugan 1. தமிழக முதல்வர் மீது பிரதமர் கோபம் என்ற செய்தி முதலில் உண்மை தன்மை வாய்ந்ததா என்று பார்க்க வேண்டும் 2.அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடியிருக்கும் இந்த நிலையில் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் கோயிலில் பூஜை நடத்துகிறார் அவர் மீது கோபம் வரவில்லையா பிரதமருக்கு ? 3.ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில் டெல்லிக்கு உத்தரபிரதேசத்தில் மக்களை அழைத்து வர பேருந்துகளை அனுப்பினார் அப்போது பிரதமருக்கு அந்த முதல்வர் மீது கோபம் வரவில்லையா ? 4.டெல்லியில் காவல் துறைக்கு பொறுப்பாக இருக்கும் அமீட் ஷா சரியாக பேருந்து நிலையத்திலுள்ள கூட்டத்தை கையாளவில்லை என அவர் மீது கோபம் வரவில்லையா?
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
30-மார்-202016:31:41 IST Report Abuse
Pannadai Pandian முதலில் டாஸ்மாக் கடைகளில் அதிக கூட்டம் இரண்டாவது கறி கடைகளில் மனிதர்களின் கூட்டம். இந்த கிரிட்டிகள் சிச்சுவேஷனில் கறி திங்காம இருக்க முடியாதா ??? கறி கடைகளை சுத்தி நாய்களின் கூட்டம், நோய் பரவ வாய்ப்புகள் அதிகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X