பொது செய்தி

இந்தியா

தொழிலாளர்களை மீட்க 1000 பஸ்கள் ; உ.பி., அரசு நடவடிக்கை

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

லக்னோ : ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல், எல்லைகளில் தவிக்கும் தொழிலாளர்களை மீட்பதற்காக,உத்தர பிரதேச அரசு, 1,000 பஸ்களை ஏற்பாடு செய்துள்ளது.latest tamil news
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க, நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பிரச்னைஇந்நிலையில், வெளி மாநிலங்களில் பணியாற்றி வந்தவர்கள், தங்களுடைய சொந்த மாநிலத்துக்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். நாடு முழுதும் இந்தப் பிரச்னை பரவலாக உள்ளது.அண்டை மாநிலங்களில் வேலை பார்த்து வந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். பலர், உத்தர பிரதேச மாநில எல்லையில் தவித்து வருகின்றனர்.


latest tamil news
இவ்வாறு தவிக்கும் தொழிலாளர்களை அழைத்து வருவதற்காக, உத்தர பிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, 1,000 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.நொய்டா, காஜியாபாத், புலந்த்ஷஹர், அலிகர் ஆகிய இடங்களில் தவிக்கும் தொழிலாளர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராமஹாராஷ்டிர மாநிலத்தில், பல பகுதிகளில் வேலை பார்த்து வந்த, ராஜஸ்தான் மற்றும்குஜராத்தைச் சேர்ந்த, 3,000 தொழிலாளர்கள், மாநில எல்லையில் தவித்து வருகின்றனர்.

அவர்களை அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளை, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் எடுத்து வருகின்றன. மஹாராஷ்டிராவின், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் வேலை பார்த்து வந்த, ராஜஸ்தான் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், மஹாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தில், இரு மாநில எல்லையில் தவித்து வருகின்றனர்.

போக்குவரத்து வசதி கிடைக்காததால், இவர்களில் பலர், நடந்தே எல்லை வரை வந்துள்ளனர். அவர்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்ப, மஹாராஷ்டிர அதிகாரிகள் மறுத்து வந்தனர். அதையடுத்து, அவர்களை மீட்க, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.கர்நாடகாஆந்திராவைச் சேர்ந்த, 1,334 தொழிலாளர்கள், கர்நாடக மாநிலம் மங்களூரில் வேலை பார்த்து வந்தனர். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது, சொந்த ஊருக்கு திரும்ப இவர்கள் மங்களூர் மீன்வளத் துறையிடம் இருந்து, 'பாஸ்' பெற்றனர்.


latest tamil newsகோலார் மாவட்டம் நாகிலி அருகே அவர்களை, கர்நாடக போலீசார் மற்றும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.'ஊரடங்கு அமலில் உள்ளதால், மாநிலத்தை விட்டு வெளியேற அனுமதிக்க முடியாது' என, அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், ஆந்திர அரசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதையடுத்து, ஆந்திர அரசு அதிகாரிகள், கர்நாடக அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர். மருத்துவப் பரிசோதனை செய்து, அந்தத் தொழிலாளர்களை அழைத்துச் செல்வதாக ஆந்திர அரசு தெரிவித்தது. மேலும், அவர்களுக்கு தேவையான, உணவு, குடிநீர், போக்குவரத்து வசதிகளையும், ஆந்திர அரசு செய்துள்ளது.பரிசோதனைகள் முடிந்த உடன், அவர்களை அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-மார்-202010:29:43 IST Report Abuse
ஆப்பு உள்ளூர்ல பொளப்பு நாறுதேன்னு வெளியூர் போனா திரும்ப வெளியூரிலிருந்து உள்ளுருக்கு.
Rate this:
Cancel
M.Gunasekaran. - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29-மார்-202008:40:48 IST Report Abuse
M.Gunasekaran. இது தவறான அணுகுமுறை. அங்கேயே அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர முயற்சி செய்யவேண்டும்.இல்லையென்றால் வைரஸ் பரவுவதற்கு வழிவகுத்தது போலாகிவிடும்.
Rate this:
Cancel
Modify India - Calgary,கனடா
29-மார்-202007:39:03 IST Report Abuse
Modify India என்ன ஒரு மடத்தனம் ஒரு புறம் ஊரடங்கு உத்தரவு இன்னொரு புறம் இந்த மாதிரி முதல் மந்திரி இந்த மாதிரி சமயத்தில் ஆயிரம் பஸ் சில கூட்டம் கூட்டமாக பயணம் செய்தால் வியாதி பரவாது?
Rate this:
29-மார்-202008:51:16 IST Report Abuse
chandran, pudhucherry அவர்களை 14 நாட்கள் தனிமைபடுத்திய பின்னரே வீட்டிற்கு அனுப்புவதாக சொல்லியுள்ளார் யோகி. அதுவரை உணவு மருத்துவ மற்றும் அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறியுள்ளார். நல்லதே நடக்கும் என்று நம்புவோம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X