பொது செய்தி

இந்தியா

வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

கொரோனா தொற்றால் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.



latest tamil news




21 நாட்கள் வீட்டிலேயே இருப்பது அவ்வளவு சுலபமானது அல்ல. இந்த சமயத்தில் மதிய உணவு சாப்பிட்ட உடனே குட்டி தூக்கம் போட தோன்றும். பலருக்கு உடல் எடை கூடும் என்ற அச்சம் உண்டு அவ்வாறு மதிய தூக்கத்தை விரும்பாதவர்கள் திரைப்படம், வெப் சீரிஸ் என எதையேனும் பார்த்தால் நேரம் போவது தெரியாது. வீட்டிலிருந்தபடியே இணையச் சேவையை பயன்படுத்தி எளிதாக படம் பார்க்க முடியும்.

வாழ்க்கையின் மீது புதிய உத்வேகம் பெற, சாதனையாளர்களின் வாழ்க்கை படங்களைப் பார்ப்பது நல்லது. இந்த 21 நாட்களில் நீங்கள் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய படங்கள்.


latest tamil news





காந்தி



இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தியின் வாழ்க்கை படமான 'காந்தி', பார்ப்பது வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதனை எதிர்த்துப் போராடும் மனவுறுதியைத் தரும் படமாக அமையும்.


போஹேமியன் ராப்சோடி (Bohemian Rhapsody)



இங்கிலாந்தில் 1970ல் துவங்கப்பட்ட ஒரு இசைக்குழுவின் வாழ்க்கை பயணம் தான் போஹோமியன் ராப்சோடி. 2019 ஆஸ்கர் விழாவில் 4 முக்கிய விருதுகளை வென்ற இப்படம் பலரின் கவனத்தை ஈர்த்தது.


அமெரிக்கன் ஸ்னைப்பர்



அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய கிரிஸ் எனும் வீரர். அமெரிக்க படைகளை காக்க 150 பேரை ஸ்னைப்பர் துப்பாக்கி மூலம் சுட்டு வீழ்த்தினார். அமெரிக்க வரலாற்றில் 150 எதிரிகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் கிரிஸ்.


பீலே



கால்பந்து ஜாம்பவான் பீலே, தன் வாழ்வில் நிகழந்ததை கூறும் இப்படம் பிரேசில் நாட்டை தாண்டி உலகம் முழுதும் பெரும் புகழ் பெற்றது. மேலும் இந்திய ரசிகர்களை ஈர்க்கும் விதமாக ஏ.ஆர் ரகுமான் இசை கூடுதல் பலமாக அமைந்தது.


தி தியரி ஆப் எவ்ரிதிங்



உலக புகழ்பெற்ற இயற்பியலாளர் மற்றும் ஆராய்ச்சியாளரான ஸ்டீபன் ஹாக்கிங்ன் வாழ்க்கை படமான தி தியரி ஆப் எவிதிங் 2014ம் ஆண்டு வெளியாகி இன்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.

இன்னும் பல சாதனையாளர்களின் படங்கள் பட்டியலில் இருந்தாலும். இந்த ஐந்து படங்கள் வாழ்க்கை போராட்டத்தை உணர்த்துவதால், மன உறுதியை அதிகமாக்க உதவும்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R D Moorthy - bukit batok,சிங்கப்பூர்
29-மார்-202009:03:21 IST Report Abuse
R D Moorthy யாரு சட்டம் ஒழுங்கை, கடைபிடிகளையோ அவர்களுக்கு பூட்டிய அறையில் சுறா படத்தை இருமுறை போட்டு காண்பித்தால், வாழ்நாளில் சாவும் வரை மறக்கமாட்டார் சட்டத்தை,
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
29-மார்-202007:22:05 IST Report Abuse
Mirthika Sathiamoorthi திரௌபதியும் இடம்பெறாததை வன்மையாக கண்டிக்கிறேன்…. உலக மக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் இதற்க்கு ஆஸ்கர் பரிந்துரைக்க வேண்டும்…. உலக முழுவதும் உள்ள நாடக காதலின் மீதான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வாழ்வியல் படம்….
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
29-மார்-202004:54:26 IST Report Abuse
வெகுளி இந்த பட்டியலில் உதய்யண்ணாவின் நிமிர், விஜய்யண்ணாவின் சுறா, புலி படங்கள் இடம் பெறாததை வன்மையாக கண்டிக்கிறேன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X