பொது செய்தி

இந்தியா

நர்சை பாராட்டிய மோடி

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement

புனே : மஹாராஷ்டிர மாநிலம், புனே மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நர்சை, போனில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர், நரேந்திர மோடி, அவரது சேவைக்கு பாராட்டு தெரிவித்தார்.



latest tamil news




மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள நாயுடு அரசு மருத்துவமனையில், கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு, கொரோனா அறிகுறியுடன் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வார்டில் நர்சாக பணியாற்றி வருபவர் சாயா ஜக்தாப். இவர், சமீபத்தில் மருத்துவமனையில் இருந்தபோது, தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதை எடுத்து பேசியபோது, மறு முனையிலிருந்து பேசியவர், பிரதமர், நரேந்திர மோடி என்பதை அறிந்ததும், இன்ப அதிர்ச்சி அடைந்தார்.


தியாக மனப்பான்மை



மராத்தி மொழியில் பேச்சை துவக்கிய பிரதமர் மோடி, நர்ஸ் சாயாவின் குடும்பத்தினர் குறித்து விசாரித்தார். பின், 'நீங்கள் மருத்துவமனையில் பணியாற்றுவதால், உங்கள் குடும்பத்தினர் பீதி அடைந்துள்ளனரா. உங்களுக்கு மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு உள்ளதா' என கேட்டார். அதற்கு சாயா, 'என் குடும்பத்தினர் பயப்படுவது உண்மை தான். ஆனால், நர்சாக பணியாற்றுவதால், இது போன்ற நேரங்களில் பணியாற்ற வேண்டிய அவசியத்தை, அவர்களுக்கு தெரிவித்து சமாதானப்படுத்தியுள்ளேன். 'மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என்றார். இதையடுத்து, 'மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் மன நிலை எப்படி உள்ளது' என, பிரதமர் கேட்டார். இதற்கு பதில் அளித்த சாயா, 'அவர்களிடம் பயம் உள்ளது. ஆனால், தைரியமாக இருக்கும்படியும், பரிசோதனை முடிவுகள் நல்லபடியாக வரும் என்றும், அவர்களிடம் கூறி, தைரியப்படுத்துகிறோம். 'மேலும், கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளை குணப்படுத்தி அனுப்பியுள்ள தகவலையும், அவர்களுக்கு தெரிவிக்கிறோம்' என்றார்.


latest tamil news





சமூக வலைதளம்



இதைத் தொடர்ந்து, 'உங்களைப் போன்ற லட்சக்கணக்கான நர்சுகள், டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தியாக மனப்பான்மையுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேவை செய்து வருகிறீர்கள். 'உங்களைப் போன்றவர்களின் மன தைரியத்தை பாராட்டுகிறேன்' என, பிரதமர் மோடி, அந்த நர்சிடம் தெரிவித்தார். இதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அந்த நர்ஸ், 'நீங்கள் பிரதமராக இருப்பது, எங்களுக்கு கிடைத்த பாக்கியம். நாட்டு நலனுக்காக, 24 மணி நேரமும் சேவை செய்து வருகிறீர்கள்' என்றார். நர்ஸ் சாயாவுடன், பிரதமர் மோடி பேசிய இந்த உரையாடல் பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
30-மார்-202009:10:36 IST Report Abuse
Sampath Kumar அப்படியே மைண்டைன் பண்ணு
Rate this:
Cancel
29-மார்-202014:06:12 IST Report Abuse
ஹாஜா குத்புதீன் இனியும் இப்படி நடிப்பதை நிறுத்திட்டு உறுப்படியான வேலையில் பிரதமர் கவனம் செலுத்தட்டும்....டெல்லியில் சாவுறாங்க...அத பாருங்க
Rate this:
Cancel
balaji - ibri,ஓமன்
29-மார்-202011:59:44 IST Report Abuse
balaji நமது பிரதமர் திரு. மோடி அவர்களது செயல் வரவேற்கத்தக்கது, இருப்பினும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆவண செய்ய வேண்டும்,மேலும் நம் மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து விதிமுறைகளை கடைபுடிக்க வேண்டும், இந்த வைரஸ் மேலும் பரவா வண்ணம் முழு வீச்சில் செயல் பட வேண்டும், நமது சொந்தங்கள் உறவுகளின் உயிர் இழப்புகள் ஈடு செய்ய முடியாதது. எனவே அனைவரும் முழு ஒத்துழைப்பு தருவது அவசியம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X