பொது செய்தி

இந்தியா

ரத்தான ரயில் டிக்கெட் கட்டணம் 90 நாட்களில் திரும்ப பெறலாம்

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை: ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட் கட்டணத்தை திரும்பப் பெற, தெற்கு ரயில்வே, 90 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. 'கொரோனா வைரஸ்' பரவாமல் தடுக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை ஒட்டி, ஏப்., 14 வரை, அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.latest tamil newsமார்ச், 22ல் இருந்து, ஏப்., 14 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களில், டிக்கெட் முன்பதிவு செய்த பயணியர், கட்டணம் திரும்ப பெறுவதற்கு, ரத்தான நாளில் இருந்து, 90 நாட்கள் வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது; முழு கட்டணம் திரும்ப பெறலாம்.

ரயில் சேவை உதவி மைய போன் எண், 139 வழியாக, பயணத்தை ரத்து செய்தவர்களும், 90 நாட்கள் வரை, முழு கட்டணம் திரும்பபெறலாம்.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வழியாக, முன்பதிவு செய்த பயணியருக்கு, வழக்கமான பரிவர்த்தனை வழியாக, முழு டிக்கெட் கட்டணமும், அவர்களின் வங்கி கணக்கிற்கு சென்று விடும்.
இப்பயணியர், இணையதளம் வழியாக, டிக்கெட் ரத்து செய்ய தேவை இல்லை. நிலையங்களில் முன்பதிவு செய்தவர்கள், 'கவுன்டர்'கள் மூடப்பட்டுள்ளதால், நேரில் செல்ல வேண்டாம். ஏப்., 15ல் இருந்து, கவுன்டர்களில் கட்டணத்தை திரும்ப பெறலாம்.


latest tamil newsகவுன்டருக்கு வராமல், கட்டணத்தை திரும்ப பெறுவதற்கு, டிக்கெட் பரிசோதகர் அல்லது நிலைய அதிகாரியிடம், மூன்று மாதத்திற்குள் பயண டிக்கெட்டை சமர்ப்பித்து, டிக்கெட் டிபாசிட் ரசீது பெற வேண்டும்; அன்றில் இருந்து, 60 நாட்களுக்குள், தலைமை வர்த்தக மேலாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்து, கட்டணத்தை பெறலாம். கூரியர் தபால் வழியாகவும் சமர்ப்பித்து, வங்கி கணக்கு வழியாக, கட்டணத்தை திரும்பப் பெறலாம்.

வரும், ஏப்., 14க்கு பின், ரயிலில் பயணம் செய்வதற்கு, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வழியாக, முன்பதிவு செய்ய, கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை.இணையதளம் வழியாக, எப்போது வேண்டுமானாலும், முன்பதிவு செய்யலாம் என, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vasudevan Ramasamy - trichy,இந்தியா
29-மார்-202012:37:54 IST Report Abuse
Vasudevan Ramasamy But the railways will swallow the convenience fees of about Rs 25 for each ticket.
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
29-மார்-202009:27:34 IST Report Abuse
Pannadai Pandian என்னுடைய நண்பர் மதராஸை சேர்ந்தவர், நாகபூரில் லாக் டவுன் ஆனார். அவர் புக் செய்திருந்த ரயில் பயணம் கேன்சல் ஆனது. ஆனால் ஒரே வாரத்தில் பணம் திரும்ப பெற பட்டது. பாஜக ஆட்சியில் மந்திரிகள் சிறப்பாக செயல்படுகின்றனர். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
29-மார்-202008:26:02 IST Report Abuse
 Muruga Vel பணமாக தருவதற்கு பதில் அந்த பணத்திற்கான கூப்பனை கொடுக்கலாம் ..நிலைமை சீரானவுடன் பயணிக்க கூப்பனை உபயோகப்படுத்தலாம் ..கத்தார் ஏர்வேஸில் அமெரிக்க பயணத்திற்கு டிக்கட் வாங்கினதற்கு கூப்பன் தருகிறார்கள் ..அடுத்த ஒரு ஆண்டுக்குள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் ...பணமாக திருப்பி தருவதில்லை ..
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
29-மார்-202009:29:20 IST Report Abuse
Pannadai Pandianபணமாக தந்தால் நல்லது. இன்றைய சூழ்நிலையில் விமான பயண டிக்கெட்டுகள் விலை குறைந்து வருகிறது. அது பயணிகளுக்கு நல்லது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X