சுரேஷ் ரெய்னாவுக்கு பிரதமர் பாராட்டு

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (6) | |
Advertisement
பெங்களூரு: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு ரூ.52 லட்சம் நிதியுதவி வழங்கிய இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மோடி தனது டுவிட்டரில், ' அற்புதமான 50 சுரேஷ் ரெய்னா' என பாராட்டியுள்ளார்.சீனா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும்
brilliant fifty, PMNarendraModi, praise, SureshRaina, donate, COVID-19, relief, funds,  சுரேஷ்ரெய்னா, பிரதமர்மோடி

பெங்களூரு: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு ரூ.52 லட்சம் நிதியுதவி வழங்கிய இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மோடி தனது டுவிட்டரில், ' அற்புதமான 50 சுரேஷ் ரெய்னா' என பாராட்டியுள்ளார்.

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்த துவங்கியுள்ளது. இதனால், விளையாட்டு போட்டிகள் முடங்கின. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு கிரிக்கெட் வீரர் சச்சின் (50 லட்சம்) பாட்மின்டன் வீராங்கனை சிந்து(ரூ.10 லட்சம்) பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி (ரூ.5 லட்சம் மதிப்புள்ள அரிசி) முன்னாள் வீரர்கள் இர்பான், யுசுப் பதான்( 4 ஆயிரம் மாஸ்க்) மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா( 6 மாத சம்பளம்) தடகள வீராங்கனை ஹிமா தாஸ்(ஒரு மாத சம்பளம்) உள்ளிட்ட இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் நிவாரண நிதி வழங்கினர். தற்போது இந்த பட்டியலில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் இணைந்துள்ளார்.


latest tamil newsஇது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், கொரோனாவை தோற்கடிக்க நாம் உதவி செய்ய வேண்டிய நேரம் இது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு நிவாரண நிதியாக ரூ.52 லட்சம் வழங்குகிறேன்( பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.31 லட்சம், உ.பி., முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.21 லட்சம்) வழங்க உள்ளேன். நீங்களும் தயவு செய்து உதவுங்கள். இவ்வாறு அந்த பதிவில் ரெய்னா தெரிவித்துள்ளார்.இதற்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் அற்புதமான ஐம்பது சுரேஷ் ரெய்னா என பாராட்டியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SARAN - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29-மார்-202017:50:36 IST Report Abuse
SARAN உண்மையான ஹீரோஸ் வெளியில் வருவாங்க .....மக்களை ஏமாத்தறவன் ஒன்னும் பண்ணமாட்டான் ..இதுதான் உண்மையான உலகம் .....பாப்போம் யாரு நல்லவன் ..யாரு கேடுகெட்டவனு .....
Rate this:
Cancel
jysen - Madurai,இந்தியா
29-மார்-202013:24:22 IST Report Abuse
jysen BCCI/ICC must arrange for Benefit Matches for economically struggling former players like Tulkar and Dhoni. Only Akshay Kumar is the real super star. Tamilnadu has a fake super star.
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
29-மார்-202012:51:43 IST Report Abuse
s t rajan இப்பொழுது அவ்வளவு வாய்ப்பில்லாத ரெய்னா அவர்களே இவ்வளவு செய்கிறார் என்றால்...அஸ்வின், கோலி, ரோகித் போன்றோர் போட்டி போட்டுக் கொண்டு உதவுவார்கள் என்று நம்புகிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X