ரூ.2.5 லட்சம் மதிப்பு சானிடைசர்கள் பறிமுதல்: அதிக விலைக்கு விற்க முயன்ற கும்பல் கைது

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Mumbai, Handsanitizers, arrest, சானிடைசர், மும்பை, பதுக்கல், கைது

புதுடில்லி: மும்பையில், கைகளை கழுவ பயன்படும் சானிடைசர்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள சானிடைசர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் உள்ள சூழ்நிலையில், சானிடைசர்கள் மூலம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என டாக்டர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.இதனால், சானிடைசர்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சிலர் அதனை பதுக்கி வைத்தும், கடத்தி சென்றும் அதிக விலைக்கு விற்க சிலர் முயற்சி செய்கின்றனர். இவ்வாறு, மும்பையில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், சானிடைசர்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள சானிடைசர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களின் விவரம் விராஜ் கவுரங்(20), ஜெய்னம் ஹரேஷ் தாதியா(21) மற்றும் நீரஜ் ரஜ்னிகாந்த் வியாஸ்(49) என தெரியவந்துள்ளது.


latest tamil news



இது தொடர்பாக போலீசார் கூறுகையில், அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் சானிடைசர்களை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சோதனை நடத்தி 3 பேரை கைது செய்தோம். அவர்கள், சானிடைசர்களை அதிக விலைக்கு விற்க முயற்சி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. சானிடைசர்களை பறிமுதல் செய்ததுடன் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோல், கடந்த மார்ச் 20ம் தேதி பெங்களூருவில் போலி சானிடைசர்களை உற்பத்தி செய்து அதிக விலைக்கு விற்க முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்ததுடன், இரண்டு தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்து, ரூ.56 லட்சம் மதிப்புள்ள போலி சானிடைசர்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-மார்-202012:44:54 IST Report Abuse
ஸாயிப்ரியா என்ன ஜன்மங்கள். அடுத்தவன் கஷ்டத்தில் குளிர் காய்கிறார்கள். கால் வயிற்று கஞ்சியோடு உள்ளேயே கிடக்கட்டும்.
Rate this:
Cancel
Karthik - Doha,கத்தார்
29-மார்-202011:42:42 IST Report Abuse
Karthik இந்த நேரத்தில் சட்டத்துக்கு எதிராகவும் மக்களுக்கு எதிராகவும் செயல் படுபவர்கள், கண்டிப்பாக சாதாரண நாட்களில் மிக அதிகமாக தவறு செய்திருப்பார்கள். அதனால் தண்டனை 2 மடங்காக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
29-மார்-202010:19:14 IST Report Abuse
RADE உண்ணும் உணவில் கலப்படம் மற்றும் இப்படி பட்ட சூழ் நிலையில் அதிக விலை வைத்து பொருட்களை விற்பவர்களுக்கு பெயில் மற்றும் நன் நடத்தை போன்ற எந்த ஒரு காரணத்தினாலும் வெளி வர முடியாத படி ஆயுள் தண்டனை அளிக்கும் நாடு தழுவிய அளவில் அனைத்து கட்சியினரும் ஒரு மனதாக சட்டம் இயற்ற வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X