தனிமைப்படுத்தல் இப்படியும் சாத்தியமா?

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா வைரஸ் மொத்தமாக உலகையே முடக்கியுள்ளது. தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,42,238 ஆக உள்ளது. மேலும் பலியானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்க உள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,13,677 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.latest tamil news
கொரோனாவை எதிர்க்க அமெரிக்கா 2 டிரில்லியன் டாலர் நிவாரண நிதி ஒதுக்கியுள்ளது. பிரிட்டன் இளவரசர் சார்லஸ், பிரதமர் போரிஸ் ஜான்சன், சுகாதாரத்துறை அமைச்சர் என பலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, இதனால் 6 மாதம் தங்கள் எல்லையை மூடவும் பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. இப்படி உலகமே கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தனிமைப்படுத்துதல் கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ளது.


latest tamil news
இதனை மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் முன்னணி நிறுவனங்களான மெக்டொனால்ட்ஸ், கோகோ கோலா, ஆடி மற்றும் வோக்ஸ்வாகன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இருக்கும் தங்களது லோகோவை தனிமைப்படுத்தலைக் கூறும் வகையில் அதனை இரண்டாகப் பிரித்துள்ளது. மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் பிரேசில் நாட்டில் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, எம் எனும் எழுத்தை இரண்டாக பிரித்து அனைவரும் இதேபோல் தனித்திருக்க வேண்டும் என தெரிவிக்கின்றது.


latest tamil news


Advertisementகோகோ கோலா தனது லோகோவின் படத்தை நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் பதிவிட்டது. அதில் அனைத்து எழுத்துக்களும் தனித்தனியாக எழுதப்பட்டிருந்தது. தனித்திருப்பதே இணைந்து இருப்பதாகும் என்ற வாக்கியத்தையும் பதிவிட்டு மக்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாரு வேண்டியுள்ளது.


latest tamil news
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான ஆடி மற்றும் வோக்ஸ்வாகன் தங்களது லோகோவில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இணைந்து இருக்கும் நான்கு வட்டங்கள் தான் ஆடியின் லோகோ, தனிமைப்படுத்துதல் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நான்கு வட்டங்களையும் பிரித்துத் தனிமைப்படுத்தியுள்ளது.


latest tamil news
அதேபோல வோக்ஸ்வாகன் தங்களது லோகோவில் உள்ள ஆங்கில எழுத்துக்களான vw இவ்விரண்டையும் தனியாகப் பிரித்ததோடு, மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதற்கு நன்றி கூறியுள்ளது.


latest tamil newsதற்போது கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள தனிமைப்படுத்தல் மட்டுமே சரியான செயலாக இருக்கும் என்பதை மருத்துவர்கள், அரசாங்கம், கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் கூறுகின்றனர். அதேபோல நாம் வீட்டில் இருப்பதும், சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டோமானால் கொரோனாவை எளிதில் வெல்லலாம்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
31-மார்-202010:27:56 IST Report Abuse
skv srinivasankrishnaveni மக்களிடம் மீண்டும் விழுப்புணர்வுவரனும் அன்றுகாலைமாலை ரெண்டுவேளையும் வாசல்லே பசுஞ்சாணம்கறச்ச நீரில் வாசலை தெளிச்சு (வாஷ்) சுத்தம்பண்ணுவாங்க ,மெயின் காரணம் அந்தகாலத்துலே திண்ணைகள் இருக்கும் பலர் திண்ணையிலே படுப்பார்கள் காரருக்குவேண்டு பூச்சிகள் கடிக்காமலிருக்கும் என்று தான் தினம் வாசல் தெளிப்பது என்ராவழக்கம் இன்னிவரை பல குக்கிராமங்கள்லேயும் இருக்கே தெரியுமா ?சிட்டில்ஸ் லே தான் மேக்சிமம் அடுக்குமாடிகளா வந்தாச்சு மாடும் சாணியேபோடுறது இல்லே ()வீட்டுலே பசுமாடுகள்வளர்க்க இடமே இல்லியே ???????போறாதுக்குவாசல்லே ஒன்னு மாக்கோலம் போட்டுடுறா ஓர் ஸ்டிக்கர்ஸ் வாங்கிஓட்டிடுவா பலரும் தண்ணீக்கு அடிமையாயிட்டதால் அவரவர் தகுதிக்கேற்றபடி தீர்த்தம் வாங்கிவச்சதுண்டு அடிக்கிறாங்க . இவனை ராஜ்கபூர் பிள்ளை தாத்தாவும் மதுபிரியன் தான் என்று சொல்லுவாங்க கேக்கணுமாபாரம்பரையா வமிசாவளிய குடிக்கறவா . மாடெர்னா சொன்னா போதைக்கு அடிமை பச்சையா சொன்னாளபணக்காரக்குடிகாரன்
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
29-மார்-202013:21:07 IST Report Abuse
Visu Iyer 🔸கலாச்சாரம் மாறும் 🔸நம்பக தன்மை குறையும்
Rate this:
Cancel
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
29-மார்-202011:42:41 IST Report Abuse
TAMILAN இந்த நிறுவனங்கள் அனைத்தும் மக்களின் எதிப்பு சக்தியை வீழ்த்தி பணம் பண்ணியவர்கள். தமிழக மக்களே இவர்களிடமிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். சுய ஒழுக்கமே உங்களை காக்கும். இதை அனைத்தையும் தமிழ் நாட்டிற்குள் புகை விட்டு கமிஷன் வாங்கியவர் ஸ்டாலின். விழித்துருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X