வளர்ப்பு பிராணிகளுக்கும் பரவுகிறதா கொரோனா?

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
PetAnimals, CoronaVirus, COVID19, Animals, கொரோனா, வைரஸ், கோவிட்19, வளர்ப்பு பிராணிகள், தொற்று, பாதிப்பு

பெல்ஜியம்: ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் வளர்ப்பு பிராணியான பூனைக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


சீனாவில் இருந்து பரவ துவங்கிய கொடூர கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பரவி பல நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. குறிப்பாக பிரேசில், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளை முழுவதும் முடக்கி நிலைகுலைய வைத்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் உள்ள மீன் மார்க்கெட்டில் இருந்து தான் கொரோனா பரவியதெனவும், வவ்வால்களிடம் இருந்து பரவியதாகவும் செய்திகள் உலா வந்த நிலையில், சீன அரசு இந்த விஷயத்தில் தொடர்ந்து ரகசியம் காத்து வருகிறது.


latest tamil news



தற்போது வரை மனிதர்களிடம் இருந்து சக மனிதர்களுக்கு மட்டுமே கொரோனா தொற்று பரவி வந்த நிலையில், முதன்முறையாக ஹாங்காங்கில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களிடம் இருந்து 2 நாய்களுக்கு கொரோனா தொற்று பரவியது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் பெல்ஜியத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் இருந்து, அவரது வளர்ப்பு பிராணியான பூனைக்கு கொரோனா பரவியுள்ளது.

பூனைக்கு கொரோனா தொற்று இருப்பதை லீஜ் கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். பெல்ஜியம் அரசின் தொற்றுநோய் செய்தி தொடர்பாளரான டாக்டர் இம்மானுவேல் ஆண்ட்ரே கூறியதாவது, இது தனிமைப்படுத்தப்பட்ட வழக்கு ஆகும். "விலங்குகளுக்கும் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புக்கு பின்னர் கொரோனா ஏற்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
30-மார்-202013:40:23 IST Report Abuse
siriyaar மனிதனை நாய் கூட மதிக்காத காலம் வருகின்றது. மருந்து விற்க நோய்களை பரப்பும் மனிதர்களை விட நாய்கள் மேல்
Rate this:
Cancel
not true -  ( Posted via: Dinamalar Android App )
29-மார்-202016:27:57 IST Report Abuse
not true https://m.huffingtonpost.in/entry/cat-belgium-positive-coronavirus_n_5e7f79e4c5b6cb9dc1a145bc?ri18n=true
Rate this:
Cancel
29-மார்-202015:17:25 IST Report Abuse
ஆப்பு இந்தியாவில் மருத்துவ கழிவுகளுடன் இப்போது மாஸ்க்குகளும் கொட்டப்படுகின்றன. இவற்றை முகரும் தெரு நாய்கள் , மாடுகள் கொரோனாவுக்கு இரையாகும் ஆபத்து உண்டு. ஆனால், மனிதரிமிருந்து இவற்றுக்குப் பரவும் வாய்ப்பு உண்டா தெரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X