பொது செய்தி

இந்தியா

மதுபான கடைகளை திறக்க 'பாலிவுட்' நடிகர் கோரிக்கை

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
மதுபான_கடைகள், பாலிவுட்_நடிகர், ரிஷிகபூர்,  Rishi kapoor,

மும்பை : 'கொரோனா' வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மதுபான கடைகளை திறக்கக்கோரி, 'பாலிவுட்' மூத்த நடிகர் ரிஷி கபூர் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, கணிசமாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள், பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே மக்களுக்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


latest tamil newsஇந்நிலையில், மதுபான கடைகள் தொடர்பாக, மூத்த பாலிவுட் நடிகர், ரிஷி கபூர் வெளியிட்டுள்ள பதிவு, சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. அவர் 'டுவிட்டரில்' குறிப்பிட்டுள்ளதாவது:உரிமம் வைத்துள்ள அனைத்து மதுபான கடைகளும், மாலை வேலையில் இயங்க, அரசு அனுமதி வழங்கவேண்டும். இப்போது, மது பானங்கள், நாடு முழுவதும் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநில அரசுகளுக்கு, கலால் பணம் தேவைப்படும். இந்த கோரிக்கையை வைப்பதால், என்னை தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். இது என்னுடைய கருத்து. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ரிஷி கபூரின் கருத்துக்கு, பாலிவுட் டைரக்டர் குனால் கோலியும், ஆதரவு தெரிவித்துள்ளார். எனினும், கபூரின் இந்த பதிவுக்கு, டுவிட்டரில், நெடிசன்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
29-மார்-202017:45:40 IST Report Abuse
அம்பி ஐயர் கிடப்பதெல்லாம் கிடக்கட்டும்... கிழத்தியைத் தூக்கி மனையில் வை...ங்குற கதையால்ல இருக்கு.... இவுரு எத்தனை பார்களுக்கு உரிமையாளரோ.... அல்லது... தினமும் குடி என இருந்துவிட்டு இப்போது தனிமையில் இருக்கச் சொன்னால் போரடிக்கிறதோ என்னவோ....
Rate this:
Cancel
shoba -  ( Posted via: Dinamalar Android App )
29-மார்-202016:15:31 IST Report Abuse
shoba VERY CLEAVER IDEA...
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
29-மார்-202015:47:14 IST Report Abuse
 Sri,India Bar owner ??. TAASMAC s more than Korana viruses.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X