கொரோனா புகட்டும் பாடம் என்ன?

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement

டோக்கியோ: கொரோனா தொற்று நோய் சுமார் 195 நாடுகளை பாதித்துள்ளது. பல நாடுகள் மக்கள் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க உத்தரவிட்டுள்ளது. பொதுநிகழ்ச்சிகள், மால், திரையரங்கம், அலுவலகம் என பலவற்றுக்கு மக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் 6 மாதம் தங்கள் எல்லையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



இப்படியாக மக்கள் வெளியே வரக்கூடாது என பல உத்தரவுகளை உலக நாடுகள் பிறப்பித்துள்ள நிலையில், சுமார் 12 கோடிக்கும் மேலான மக்கள் வாழும் நாடாகவும், தொழில்துறையில் சிறந்து விளங்கும் நாடாகவும், அதிக முதியவர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் உள்ள ஜப்பான், மிக சாதாரணமாக இயங்குகிறது. மக்கள் அலுவலகம் செல்கின்றனர், குறிப்பிட்ட சில அலுவலகங்கள் மட்டுமே வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது. உணவகங்கள், பார், திரையரங்கம் என அனைத்தும் திறந்திருக்கிறது.


latest tamil news


சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், ஜப்பான் நாட்டிலும் பரவியது. அங்கும் 1500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரையிலும் 49 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் அங்குள்ள மக்களுக்கு எந்த தடையும் இல்லை. வாடகை கார் எடுத்து ஜப்பான் மத்தியில் இருந்து நாட்டு எல்லை வரை சென்று திரும்ப முடியுமாம். மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது, வாகனங்களை சோதனையிடப்படுகிறது, ஆனால் பயணம் செய்யத் தடை இல்லை. பாதுகாப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் கொரோனாவுள்ளதால் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


latest tamil news




ஜப்பான் சுலபமாகக் கையாண்டது எப்படி?


ஜப்பானில் முக கவசத்தின் பயன்பாடு அதிகம், சாதாரண காய்ச்சல், சளி இருந்தாலே அவர்கள் முக கவசத்தை பயன்படுத்துகின்றனர். மேலும் ஷாப்பிங் மால், ஹோட்டல் என மக்கள் கூடும் இடங்களில் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்று அதிகம் பரவாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், மக்கள் தங்களின் பாதுகாப்பையும், பிறரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் நடந்து கொள்வதாகவும், சுகாதாரத்தை பின்பற்றுவதாகவும் ஜப்பான் மக்கள் கூறுகின்றனர்.

உலக மக்கள் இனியாவது சுகாதாரமாக தங்களது சுற்றத்தை வைத்துக்கொள்வது, சாதாரண காய்ச்சல், சளி இருந்தாலே முக கவசம் பயன்படுத்துவது போன்ற செயலில் ஈடுபட்டால், பல பெரிய நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
29-மார்-202022:59:58 IST Report Abuse
Gnanam கொரோனா புகட்டும் பாடம்: " உன்னை போல் பிற உயிர்களையும் நேசி "
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
29-மார்-202018:31:29 IST Report Abuse
Endrum Indian Listen Obey. ஏதோ எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்காமல் அரசு சொன்னால் நம்பு அதை செய் என்று அர்த்தம்
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
29-மார்-202016:39:46 IST Report Abuse
chander காயமே இது பொய்யடா காற்று அடைத்த பொய்யடா கொரோனா ஊசி பட்டாலே பஞ்சர் ஆகும் மெய்யடா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X