இந்த கொரோனா இடையில் ஏவுகணை சோதனை செய்கிறது வட கொரியா

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

பியோங்யாங்: வடகொரியா, கிழக்கு கடற்கரையில் இரண்டு ஏவுகணைகளை இன்று(மார்ச்-29) சோதனை செய்தது.
உலகமே கொரோனா வைரஸை எதிர்த்து தீவிரமாக போராடி வரும் நிலையில், வடகொரியாவின் இந்த செயல், ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என அதன் அண்டை நாடுகளான ஜப்பான் மற்றும் தென்கொரியா கருத்து தெரிவித்துள்ளது.



latest tamil news



இதுகுறித்து தென்கொரியா இணை படைத்தளபதி கூறியதாவது: "வடகொரியாவின் வோன்சான் கடற்கரையில் இருந்து, குறுகிய தொலைவு சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டன. இந்த ஏவுகணை 230 கி.மீ தொலைவுக்கு 30கி.மீ உயரத்தில் சென்றது. உலக நாடுகள், கோவிட்-19 வைரஸால் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் சூழலில், வடகொரியாவின் இந்த நடவடிக்கை முற்றிலும் பொருத்தமற்றதாக உள்ளது" என தெரிவித்தார்.


latest tamil news



வட கொரிய ஏவுகணை, தங்கள் பகுதியில் விழவில்லை என தெரிவித்துள்ள ஜப்பான், அந்நாட்டின் செயல் சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தல் என தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
29-மார்-202022:29:42 IST Report Abuse
vbs manian ரோம் எரிந்த போது நீரோ வயலின் வாசித்தது போன்று உள்ளது.
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
29-மார்-202017:48:18 IST Report Abuse
அம்பி ஐயர் எல்லாமே திட்டமிட்டுத்தானே பண்றாங்க.... சீனாவின் அட்வைஸ்படி....
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
29-மார்-202016:31:54 IST Report Abuse
chander ஏவு கணை சோதனை செய்து செய்து திவால் ஆகி இவர் சோதனைக்குள்ளாக போகிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X