பொது செய்தி

இந்தியா

" வீட்டுக்குள் முடங்கியதால் ஏழைகளுக்கு கஷ்டம் தான் " - மோடி

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (76)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா வைரசை வெல்ல முழு ஊரடங்கே வழி. எனவே மக்கள் இதனை மீற வேண்டாம். ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி சிரமப்படும் ஏழை மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என பிரதமர் மோடி இன்றைய மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.



latest tamil news




பிரதமர் மோடி மேலும் உரையாற்றியதாவது ; கொரோனா இந்த உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பலர் மடிந்துள்ளனர். இந்த கொரோனாவை, நாம் அனைவரும் ஒன்று பட்டு நின்றால் தான் ஒழிக்க முடியும், கொரோனாவை வெல்ல முடியும். ஊரடங்கு என்பது கொரோனா போரில் வெற்றி பெறவே. நாம் போர்க்கால நடவடிக்கை எடுத்துள்ளோம். ஊரடங்கு முடிவால் மக்கள் சிலர் என்மீது கோபம் அடையலாம்.

ஊரடங்கு ஒன்றே கொரோனாவை ஒழிக்க சிறந்த வழி. கடினமான முடிவே மக்களை காப்பாற்றும். நான் எடுத்திருக்கும் ஊரடங்கு முடிவால் ஏழைகள், தொழிலாளர்கள் பலரும் சிரமப்படுவார்கள் என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் இந்த கடின முடிவை தவிர வேறு வழி இல்லை. ஏழைகள் படும் சிரமத்திற்கு நான் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். உடல் நலமே அனைவருக்கும் மகிழ்ச்சி தரும். கீழ்படியாவிட்டால் அனைவரும் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். ஊரடங்கை மீற வேண்டாம்.

வீட்டுக்குள் இருக்கும் குழந்தைகள் உள்பட பலரும் சமூகவலைதளம் மூலம் என்னுடன் பகிர்ந்து வருகின்றனர். மக்கள் இசை,தோட்டம், ஓவியம் வரைதல் என நல்லமுறையில் பொழுதை கழித்து வருவதாக அறிந்தேன். இது போல் அனைவரும் நல்ல முறையில் பொழுதை கழியுங்கள். சமூக விலகல் நமக்கு முக்கியம், மக்கள் நிற்பதில் இடைவெளியை பின்பற்ற வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சிலர் வெளியே வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம்.


latest tamil news



இந்த கொரோனாவை ஒழிக்க மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரதுறையினர் அனைவரும் நமது ஹீரோக்கள். அவர்கள் பணியை நாம் பாராட்டுவதுடன் முன்மாதிரியாக கொள்ள வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.


புனேயை சேர்ந்த டாக்டர் விளக்கம்


இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியிடம் புனேயை சேர்ந்த டாக்டர் கூறியதாவது: எங்கள் மருத்துவமனையில் 16 பேர் பாதிக்கப்பட்டதில் 9 பேர் நலம் பெற்று வீட்டுக்கு சென்று விட்டனர். 6 அடி தூரம் தள்ளி இருக்க வேண்டும். கைத்துணி வைத்து இரும வேண்டும். அடிக்கடி கைகளை கிருமி நாசினி மற்றும் சோப் கொண்டு கழுவ வேண்டும். இளைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இளைஞர்கள் மிக சாதாரணமாக எடுத்து கொள்கின்றனர். அலட்சியம் செய்வது நல்லது அல்ல. லேசான பாதிப்பு இருந்தால் அவர்கள் நலம் பெறுகின்றனர். கடுமையான பாதிப்பு இருந்தால் நலம் பெறுவதில் தாமதம் ஆகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இது போல் கொரோனாவால் பாதித்து நலம் பெற்ற ஆக்ராவை சேர்ந்த அசோக்கபூர் என்ற குடும்பத்திரிடமும் மோடி கலந்துரையாடினார். இதில் அசோக்கபூர் கூறியதாவது: கொரோனா பாதித்த நாங்கள் அனைவரும் நலம் பெற்று விட்டோம். மருத்துவமனையில் டாக்டர்கள், ஊழியர்கள் எங்களை நல்ல முறையில் கவனித்தனர். இவர்களின் பணி மிக சிறப்பாக, வேகமாக இருந்தது. இவர்களுக்குக நாங்கள் நன்றி கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ambika. K - bangalore,இந்தியா
30-மார்-202012:31:21 IST Report Abuse
Ambika. K இந்த ஊரடங்க சாக்க வெச்சு டிவி ல கொடுமையான படம் போடறாங்க உதயநிதி ஸ்டாலின் படமா போடறாங்க இது கொரோனாவைவிட கொடுமையா இருக்கு இதுக்கு ஒரு தடை போடுங்க
Rate this:
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
30-மார்-202011:27:04 IST Report Abuse
Ashanmugam ஏழைகளிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டால் ஏழை வயிற்றுக்கு சாப்பாடு, குடிநீர், இடம் வந்திடும்மா? மோடிஜி மீது இந்திய மக்கள் கொண்ட வெறுப்புணர்ச்சி, எப்போ பிஜேபி ஆட்சி ஒழியும் என வருடங்களை எண்ணுகின்றனர்.‌நோயை ஒழிக்க வக்கில்லாத மத்திய அரசு அடக்குமுறை மூலம் நோயுக்கு தீர்வு காணலாம் என்ற பிடிவாதம் மன்னிக்கமுடியாதது. 21 நாள் கழித்து மீண்டும் இந்த நோய் விஸ்வரூபம் எடுக்காது என்பதை ஆணித்தரமாக மோடிஜி அவர்கள் இந்திய நாட்டு மக்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்மா? (மன்கீபாத் மூலம்) நாம் கொசுவை ஒழிக்க 'ஹால்ஹவுட்', குட்நைட்' போன்றவற்றை உபயோகிக்கிறோம். மற்றப்படி கொசுவை விரட்ட அடியோடு வீட்டை யாரும் கொளுத்துவதில்லை. அதே போல் விஷ கிருமி நோய்கள் எந்த நேரத்தில் எந்த ரூபத்தில் உருவாகும் என்பதை இறைவன் தவிர யாராலும் கணிக்க முடியாது. அதனை எதிர்கொள்ள நோய் எதிர்ப்புசக்தியை உண்டாக்க எந்தெந்த மருந்துகள், வேதி பொருள்களை கண்டுபிடிக்க வேண்டுமோ, அந்தந்த பொருள்களை முன்கூட்டிய லேபாலட்ரி ஆய்வு மூலம் பரிசோதனை மேற்கொண்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் சமுதாயத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசு முன்நின்று காப்பாத்த முடியும்.
Rate this:
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
30-மார்-202011:10:02 IST Report Abuse
Ashanmugam கொரோனா வைரஸ் நோயால் 534 நாடாளுமன்ற எம்.பிக்கள், 28 மாநில 234 சட்டமன்ற உறுப்பினர்கள், கொழத்த பணக்காரர்கள், பெரும்புள்ளிகள் யாரும் பசியாலும், பட்டினியாலும் இறக்கப்போவதில்லை. ஆனால், நாடு முழுவதும் தேங்கி உள்ள உணவுப்பொருள்கள், வாகன போக்குவரத்து தடையால், அந்தந்த ஊர்களுக்கு விநியோகம் செய்ய முடியாமல் வீணாகப் போகிறது. இதன் விளைவு அடுத்த இரண்டு வாரங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏழை எளிய பாமர மக்கள் பசியாலும் பட்டினியாலும் இறக்கும் அபாயம் உள்ளது. மத்திய அரசின் அடாவடித்தனம், பிடிவாதம் பிடித்த மோடிஜியின், நோக்கம் "இந்திய மக்கள் பசியாலும், பட்டினியாலும், உண்ண உணவும், இருக்க இடம் இல்லாமல் செத்தால் கூட பரவாயில்லை. ஆனால் "கோரோனா" நோயினால் ஒரு உயிரும் சாகக் கூடாது. அப்படி பார்த்தால் இந்தியாவில் யாரேனும் ஒருவர் கொடூர கோரோனாவினால் இறந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆக, இன்றயை சூழ்நிலையில் திடீரென மனிதன் செத்தால், சாவை தூக்கி செல்ல ஊர்தி கிடையாது. பிணத்தை எரிக்க மின்எரிமேடை இயங்காது. கையிலே சுமந்து செல்கிற நிலமை. இந்திய மக்கள் படும் பிரச்சினைகளை அடம் பிடிக்கும் மோடிஜிக்கு எங்கே புரியப்போவது, தெரியப்போவது? மத்திய அரசின் திட்டம் "ஊரடங்கு சட்டத்தை" அடக்குமுறையோடு 21 நாள் வெற்றிகரமாக முடித்து காட்டுவது தான். அதில் மக்கள் படும் வேதனை பற்றி எள்ளளவும் மத்திய மோடிஜி அரசுக்கு கவலை இல்லை. இதுவரைக்கும், மோடிஜியும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பட்டினியால் வாடி இருப்பார்களா? சுக போக வாழ்க்கை வாழ்ந்து வரும் இந்திய அரசியல் வாதிகள் இந்திய மக்களின் " உயிர் கொல்லி" என வர்ணிக்கலாம். அதைவிட கேவலம் " இந்நாள் வரை கொரோனா" என்ற உயிர்க்கொல்லி நோயுக்கு மருந்து கண்டு பிடிக்காமல் தனிமையிலே நோயை விரட்டி விடலாம் என்கிற அசட்டு நம்பிக்கை. ஒருகாலும் வெற்றி காணமுடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X