கொரோனா: சிங்கப்பூரில் உயிரிழப்பு 3

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Singapore, third, death, COVID-19, சிங்கப்பூர், கொரோனா, உயிரிழப்பு,

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
இதனை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் வெளிநாடு சென்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 12.12 மணியளவில் முதியவர் உயிரிழந்தார். பிப்.,29ம் தேதி சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மார்ச் 2ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.


latest tamil news



இதன் பின்னர் அவர் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலையில் பல்வேறு பிரச்னைகள் இருந்த நிலையில், 27 நாள் சிகிச்சைக்கு பின் உயிரிழந்தார். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஹைபர்லிபிடமியா பிரச்னைகள் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
30-மார்-202004:17:01 IST Report Abuse
blocked user பலவித பிரச்சினை உள்ளவர்களை அவ்வளவு எளிதில் காப்பாற்றிவிட முடியாது.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
29-மார்-202019:26:23 IST Report Abuse
blocked user வயோதிகர்களை பராமரிப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X