பொது செய்தி

இந்தியா

நடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள்; மத்திய அரசு

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா பாதிப்பால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.



latest tamil news


கடந்த 25 ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தினால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும். ஆனால் மக்கள் பலர் வெளியே சுற்றுவதும், பொறுப்பற்ற முறையில் கூடுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் வெளியே சுற்றியதாக நாடு முழுவதும் போலீசார் வழக்கு பதிவு செய்து பின்னர் ஜாமினில் விடுவிக்கின்றனர். ஆங்காங்கே சாலைகளில் வருவோருக்கு லேசான தண்டனையும் போலீசார் வழங்குகின்றனர்.

இந்நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. இந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:நகரங்கள் மற்றும் கிராமங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை மாநில அரசு செய்ய வேண்டும். தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து செல்வதை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


latest tamil news




தனிமைப்படுத்தும் முகாம்


மேலும் ஊரடங்கை மீறி சாலைகளுக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதிலும் அவ்வாறு வெளியே வரும் நபர்களை பிடித்து தனிமைப்படுத்தும் முகாமில் வைக்க வேண்டும். சாலைகளில் உணவு மற்றும் சரக்கு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கவும். குறிப்பாக மாவட்ட எல்கைகள மூட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
29-மார்-202022:27:32 IST Report Abuse
vbs manian நடமாட்டத்தை எப்படி கட்டுப்படுத்துவது. டெல்லியிலிருந்து ஆயிரம் ஆயிரமாய் வெளிமாநிலத்தவர் பஸ்ஸில் முண்டியடித்து ஏறி பயணிக்கின்றனர். ஒருவருக்கு வைரஸ் தாக்கம் இருந்தால் கூட எல்லோருக்கும் பரவி விடும். இவர்கள் பலர் வெகு தூரம் உள்ள தங்கள் கிராமங்களுக்கு செலகின்றனர். அந்த கிராமம் முழுதும் வைரஸ் பரவ வாய்ப்பிருக்கிறது. இந்த கிராமங்களில் எந்த வித மருத்துவ வசதியும் கிடையாது அரசு இதற்கு உடனே எதாவது செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
Tamilan - kailasa,இந்தியா
29-மார்-202020:48:35 IST Report Abuse
Tamilan சரியானதே ......மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
29-மார்-202020:00:43 IST Report Abuse
Nathan உள்ளே கட என்பதை கட உள் , கடவுள் என குறிப்பிடு உள்ளம் கடந்து நின்றால் அப் பேரதிசயத்தை காணலாம். ஆஹா புதுச்சேரி சந்திரன் சூப்பர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X