வைரஸ் தொற்றை தவிர்ப்பது எப்படி?

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தவிர்ப்பது குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் உலக புகழ்பெற்ற மருத்துவமனை, விரிவான குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:


latest tamil news* வைரஸ் ஒரு உயிரினமல்ல. ஆனால் லிப்பிட் (கொழுப்பு) என்னும் ஒரு பாதுகாப்பு அடுக்கால் மூடப்பட்ட ஒரு புரத மூலக்கூறு (டி.என்.ஏ) ஆகும். இது கண், நாசி அல்லது சளிச்சுரப்பியின் உயிரணுக்களால் உறிஞ்சப்படும்போது மரபணு குறியீட்டை மாற்றுகிறது.

* வைரஸ் ஒரு புரத மூலக்கூறு என்பதால், அது தானாகவே சிதைகிறது. சிதைவு நேரம் என்பது வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் பொருளின் வகையைப் பொறுத்தது.

* வைரஸ் மிகவும் உடையக்கூடியது; அதைப் பாதுகாக்கும் ஒரே விஷயம் கொழுப்பின் மெல்லிய வெளிப்புற அடுக்கு ஆகும். அதனால் தான் எந்தவொரு சோப்பாக இருந்தாலும் அதுவே சிறந்த தீர்வாக அமைகிறது. ஏனெனில் சோப்பின் நுரை, கொழுப்பை நீக்குகிறது. (அதனால்தான் 20 விநாடிகளுக்கு மேலாக சோப்பினால் நுரைகள் வரும்வரையில் கைகளை தேய்க்க அறிவுறுத்தப்படுகிறது) கொழுப்பு அடுக்கைக் கரைப்பதன் மூலம், புரத மூலக்கூறு சிதறடிக்கப்பட்டு தானாகவே உடைகிறது.latest tamil news


* வெப்பமும் கொழுப்பை உருக்குகிறது; இதனால்தான் கைகள், உடைகள் மற்றும் எல்லாவற்றையும் கழுவுவதற்கு 25 டிகிரி செல்சியஸ்க்கு வெப்பநிலைக்கு மேல் தண்ணீரைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. மேலும் சூடான நீர், அதிக நுரையை உண்டாக்குவதால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

* ஆல்கஹால் அல்லது 65% க்கும் அதிகமான ஆல்கஹாலுடன் கலந்த எந்தவொரு கலவையானாலும் கொழுப்பை நீக்கவல்லது. குறிப்பாக வைரசின் வெளிப்புற லிப்பிட் லேயரை நீக்குகிறது.latest tamil news* சோப்பு, ஆல்கஹால், குளோரின் போன்றவற்றை கொண்டு சுத்தம் செய்தபின்னர் ஆக்ஸிஜனேற்றப்பட்ட நீர், அதிக நேரம் தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது. ஏனெனில், பெராக்சைடு, வைரசின் புரதத்தைக் கரைக்கிறது. ஆனால் அது சருமத்தை காயப்படுத்துவதால் தூய்மையாகப் பயன்படுத்த வேண்டும்.

* பாக்டீரியா போன்று வைரஸ் ஒரு உயிரினம் அல்ல; ஆனால் எல்லாவற்றையும் கொண்டு அதன் கட்டமைப்பை விரைவாக சிதைக்கலாம்.

* பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தப்படாத ஆடை, தாள்கள் அல்லது துணியை எப்போதும் உதற வேண்டாம். வைரஸ் ஒரு நுண்ணிய மேற்பரப்பில் 3 மணிநேரம் ஒட்டியிருக்கும். அதேபோல், இயற்கையாகவே கிருமி நாசினியாக இருக்கும் தாமிரம் மற்றும் மரத்தில் 4 மணிநேரம், அட்டையில் 24 மணி நேரம், உலோகத்தில் 42 மணிநேரம், பிளாஸ்டிக் பொருட்களில் 72 மணிநேரம் வைரஸ் நீடித்து இருக்கும். அதனை அசைத்தால், தட்டினால் அல்லது தூசிகளை துடைத்தால் காற்றில் 3 மணிநேரம் வரை மிதக்கும். எனவே, சுவாசிக்கும் பொழுது மூக்கில் தங்கலாம்.


latest tamil news* வைரஸ் மூலக்கூறுகள், கடும் குளிரில் நிலையானவையாக இருக்கும். மேலும், நிலையாக இருக்க வைரசிற்கு இருளும், ஈரப்பதமும் தேவைப்படுகிறது. இதனால், நீரில்லாமல் வறண்ட, சூடான மற்றும் பிரகாசமான சூழல்கள், வைரஸ் தாக்கத்தை விரைவாக குறைக்கும்.

* எந்தவொரு பொருளின் மீதும் வைரஸ் புரதத்தை, புற ஊதா ஒளி உடைக்கிறது. உதாரணமாக, கிருமி நீக்கம் செய்ய மாஸ்க் பயன்படுத்துவது சரியானது. அதேநேரத்தில் சருமத்தில் உள்ள கொலாஜனை (ஒருவகை புரதம்) உடைத்து, சுருக்கங்கள் மற்றும் தோல் புற்றுநோயை ஏற்படுத்தலாம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

* ஆரோக்கியமான தோல் வழியாக வைரஸ் செல்ல முடியாது.

* வினிகர் பயனுள்ளதாக இருக்காது. ஏனெனில், இது கொழுப்பின் பாதுகாப்பு அடுக்கை உடைக்காது.


latest tamil news* உணவு, பூட்டுகள், கைப்பிடிகள், சுவிட்சுகள், ரிமோட்டுகள், செல்போன், கைக்கடிகாரங்கள், கணினிகள், மேஜைகள், டிவி போன்றவற்றைத் தொடுவதற்கு முன்பும் பின்பும் உங்கள் கைகளைக் கழுவ வேண்டும்.

* வைரஸ் விரல்களில் தங்காமல் இருக்க, நகங்களை வெட்டி பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
29-மார்-202021:03:38 IST Report Abuse
Krishna Paste it in All Public Places-Streets-Shops
Rate this:
Cancel
skanda kumar - bangalore,இந்தியா
29-மார்-202020:27:03 IST Report Abuse
skanda kumar tasmac tamilanukku idhu puriyuma?
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
30-மார்-202016:22:46 IST Report Abuse
Pannadai Pandianபெங்களூரு என்ன வாழுதாம்......நீ சாராயம் குடிக்கிறவன்......நாங்க விஸ்கி சாப்பிடறவுங்க......வித்யாசம் இருக்கு....
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
29-மார்-202016:30:08 IST Report Abuse
வெகுளி சரியான நேரத்தில் தரமான செய்தி.... ரஜினி போன்ற சமூக அக்கறையுள்ள தலைவர்கள் இந்த செய்தி மக்களை உடனே சென்றடைய உதவ வேண்டும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X