இதிலும் அரசியலா? பா.ஜ., - ஆம் ஆத்மி கருத்து வேறுபாடு

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
Dirtypolitics,  migrants, Delhi, AAP, BJP,

புதுடில்லி: ஊரடங்கு உத்தரவு காரணமாக, டில்லியில் பணிபுரிந்து உத்தர பிரதேசம் மற்றும் பீஹாருக்கு தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பும் விவகாரத்தில் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலை யார் ஆரம்பித்தது என்பது தெளிவாகவில்லை. இருப்பினும், டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆலோசகர் மிருத்தஞ்ஜெய் குமார் இடையே மோதல் ஏற்பட்டது. பாஜ., தேசிய பொது செயலர் பிஎல் சந்தோசும் தனது பங்கிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.


latest tamil newsடில்லியில் உள்ள உத்தர பிரதேச மாநில தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக நகரை விட்டு வெளியேற்ற ஆம் ஆத்மி அரசு நிர்பந்தம் செய்கிறது. அவர்களின் வீடுகளில் உள்ள மின்சாரத்தை துண்டிக்கிறது என உ.பி., மாநில பா.ஜ., தலைவர்கள் சிலர் கூறியதற்கு கூறி டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கண்டனம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: கொரோனா தொற்று அச்சுறுத்தல் உள்ள நிலையில், பா.ஜ., தலைவர்கள் அரசியல் செய்வது வருத்தத்திற்குரியது. டில்லியில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக மாநிலத்தை விட்டு வெளியேற்றும் வகையில், அவர்களின் வீட்டு மின்சாரத்தை கெஜ்ரவிவால் அரசு துண்டிக்கிறது என யோகி அரசு குற்றம்சாட்டுகிறது. நாட்டை காக்க நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டுமே தவிர, கீழ்தர அரசியலில் ஈடுபடக்கூடாது என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள மிருதுயுன்ஜெய் தெரிவித்துள்ளதாவது: டில்லியில் இருந்து வெளிமாநில தொழிலாளர்களை மாநிலஅரசு வெளியேற்றியுள்ளது. மழை பெய்த போது, அவர்களுக்கு உணவும் வழங்கவில்லை. தங்க ஏற்பாடு செய்யவில்லை. ஆனால், யோகி அரசுதான் அவர்களுக்கு உணவு, தங்கும் இடம், பஸ் வசதியை ஏற்படுத்தியது. பொய் சொல்லி உங்களை காப்பாற்ற வேண்டாம் என தெரிவித்துள்ளார். தொற்று நோய் பரவலின் போது கூட ஆம் ஆத்மி கீழ்தர அரசியலில் ஈடுபடுகிறது. இவ்வளவு தூரம் அக்கட்சி கீழ் இறங்கி சென்றது ஏன்? இந்த விவகாரத்தில் உ.பி., அரசும், போலீசும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

பா.ஜ.,வின் பி.எல். சந்தோஷ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கொரோனாவுக்கு எதிராக இந்தியா போராடும் நிலையில், சிலர் நாடு தோல்வியடைய வேண்டும் என நினைக்கின்றனர். அவர்களை நாடு மன்னிக்காது என தெரிவித்துள்ள அவர், 50 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள், ஊரடங்கு உத்தரவை மீற எப்படி அனுமதிக்கப்பட்டனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
29-மார்-202021:24:35 IST Report Abuse
Krishna BJP has Shamefully Become “Just Another Cheap-Dirty Party” Besides Becoming AntiPeople & AntiNational Due to Idiotic Dictator’s Continous LIES, CHEATINGS, Widespread HARASSMENTS OF PEOPLE through Power Misusing Officials esp. Police& Courts (WORSE THAN INDIRA GANDHI'S Dictatorship, Without Freedom-Fundamental Rights of Congress & Vajpayee Govt.) Mass Exodus by "Move Adamant Idiots" Will Only Dangerously Spread Disease & Deaths incl. their Relatives. They Must be Forced to Stay Wherever they are (all had some shelter), Provided Food (all had some Money) & Medical Facilities (call all Regd Medical & Paramedical staff). All Dreaded Diseases are Coming-Killing World People. Due to Grave Injustices Being Committed on World & People By Biased & Vested-Judges, Vested & Dictator Rulers. Police, Officials & Other Anti-Social Vested Groupists (these People Must Abdicate & Be Punished for Better World).
Rate this:
Cancel
UKTamil - London,யுனைடெட் கிங்டம்
29-மார்-202019:53:18 IST Report Abuse
UKTamil Who controlled the police department in Delhi, if you know that then you know who is responsible for this
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
30-மார்-202005:22:16 IST Report Abuse
uthappaமாநில முதன் மந்திரி அங்குள்ள மக்கள் அனைவருக்கும் தாங்கும் வசதி, உணவு கிடைக்குமாறு செய்ய வேண்டியது முக்கியமான கடமை.அதை விடுத்தது அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு மக்களை வெளியேற்றுவது அநாகரீகம்.இதில் காவல்துறை என்ன செய்ய முடியும், அப்படி ஈவு இரக்கம் இன்றி வெளியேற்றப்பட்டவர்களுக்கு உதவ மட்டுமே முடியும்.அரசியல் காழ்ப்பு மக்களை பலிகடா ஆக்கி இருப்பது கெஜ்ரிவால் அரசு.மோடி வேண்டாம் என்று தேர்தல் மூலம் சொல்லுங்கள், வெறுப்பில் மனதில் தோன்றியதை விதைய்க்காதீர்கள்....
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
29-மார்-202018:24:02 IST Report Abuse
Endrum Indian கடைசி வரை இந்த மணிஷ் சிசோடிய "மின்சாரம் துண்டிக்கப்படவில்லை" என்று சொல்லவேயில்லை அந்த உளறல் வரிகளில் வெறும் பி ஜெ பி அரசியல், இதையெல்லாம் பார்க்கின்றபோது ரசிச்சு அசலாக நமது திராவிட கட்சி சுடலை மாயாண்டி இல்லே முஸ்லிம்கள் இன்றும் அல்லாஹ் ஓலம் அவர்கள் மசூதிகளில் இருந்து வந்து கொண்டேயிருக்கின்றது வீட்டிலே உட்காருங்க என்று சொன்ன பிறகும். அதாவது நான் என்ன நினைக்கின்றேனோ அதை செய்வேன் அதை யாரும் குறை கூறக்கூடாது இது ஒன்றே அவர்கள் சித்தாந்தம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X