உலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
பீஜிங்: அட்லாண்டிஸ் வெளியிட்ட அறிக்கை: சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் 500 நிறுவனங்கள் பட்டியலை பார்ச்சூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவை சேர்ந்த பெரும்பாலான நிறுவனங்கள் இடம்பெறவில்லை. இதில் ஒரு நாடு முந்தி சென்றுவிட்டது. அது எந்த நாடு என நீங்கள் யூகிக்கலாம். அது சீனா தான்.உலகின் சிறந்த 500 நிறுவனங்கள் பட்டியலில் 129 நிறுவனங்கள் சீனாவை சேர்ந்தவை.

பீஜிங்: அட்லாண்டிஸ் வெளியிட்ட அறிக்கை: சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் 500 நிறுவனங்கள் பட்டியலை பார்ச்சூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவை சேர்ந்த பெரும்பாலான நிறுவனங்கள் இடம்பெறவில்லை. இதில் ஒரு நாடு முந்தி சென்றுவிட்டது. அது எந்த நாடு என நீங்கள் யூகிக்கலாம். அது சீனா தான்.latest tamil newsஉலகின் சிறந்த 500 நிறுவனங்கள் பட்டியலில் 129 நிறுவனங்கள் சீனாவை சேர்ந்தவை. அமெரிக்காவை சேர்ந்த 121 நிறுவனங்கள் தான் அதில் இடம்பெற்றுள்ளன. ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு, 1999ல் பார்ச்சூன் இதழ் வெளியிட்ட பட்டியலில் சீனாவை சேர்ந்த 8 நிறுவனங்கள் தான் இடம்பெற்றன. தற்போது எவ்வளவு பெரிய முன்னேற்றம்.அமெரிக்க அதிபரும், அரசியல்வாதிகளும், மீடியாக்களும், தொடர்ச்சியாக, வங்கித்துறை உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் நாம் எப்படி முதலிடத்தில் இருக்கிறோம் என சொல்லி வருகின்றன.

தற்போது, உலகின் 10 மிகப்பெரிய வங்கிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.அந்த பட்டியல் வருமாறு:

1. சீனா தொழில் மற்றும் வர்த்தக வங்கி(ஐ.சி.பி.சி.,)
2. சீனா கன்ஸ்ட்ரக்சன் வங்கி கார்பரேசன்
3. விவசாய வங்கி
4. பேங்க் ஆப் சீன லிமிடெட்
5. பிரிட்டனை சேர்ந்த எச்.எஸ்.பி.சி. ஹோல்டிங் வங்கி
6. அமெரிக்காவின் ஜேபிமோர்கன் கேஸ்
7. பிரான்சின் பிஎன்பி பரிபாஸ் வங்கி
8. ஜப்பானின் மிட்சுபிஷி வங்கி
9. பேங்க் ஆப் அமெரிக்கா
10. பிரான்சின் கிரெடிட் அக்ரிகோல் வங்கி


latest tamil news


கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் , இந்த பட்டியலில் முதல் 8 இடத்தில் அமெரிக்க வங்கிகள் தான் இருந்தது. ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. இதன்மூலம், பொருளாதார அளவில், உலகம் எப்படி மாறியுள்ளது என்பதை வெளிகாட்டுகிறது. இருப்பினும், முக்கிய மீடியாக்கள் இது குறித்து பேச விரும்புவதில்லை. இன்று, உலகளவில் மிகப் பெரிய 10 வங்கிகளில் அமெரிக்காவை சேர்ந்த 2 வங்கிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் சீனா ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
டிரம்ப்பின், எப்போதும் சிறந்த பொருளாதாரம் கருத்து, இனியும் சிறந்ததாக இல்லை. உண்மையை மக்களிடம் சொல்ல வேண்டியுள்ளது. நிச்சயம், சிறந்த பொருளாதாரமாக மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்கால அமெரிக்கர்கள், பழைய அமெரிக்காவை நினைத்து பெருமை கொள்ளலாம்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
31-மார்-202009:43:44 IST Report Abuse
Sampath Kumar நடப்பது பொருளாதார யுத்தம் அதுக்கு துணை பயோ அணுகுண்டு அதுதான் கொரோனா மூன்றாம் உலகப்போர் மறைமுகமாக இல்லை நேரடியாக ஆரம்பம் நாம் புரிந்து கொண்டால் நல்லது நமது அரசியில் வியாதிகள் கேதுக்களுக்கு கொலை அடிக்க மட்டும் தான் தெரியும் அருகில் நடை பெற்று வரும் அரசியல் புரியாது என்ன செய்ய நமது சிஸ்டம் அப்படி
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
30-மார்-202020:18:16 IST Report Abuse
Rajesh காத்திருங்க ஆப்பு வரும் கட்டாயமாக.. சீனர்களை எல்லோரும் சேர்ந்து அவரவர் நாட்டில் இருந்து விரட்டியடித்து விட்டால், அவர்களின் பொருட்களை வாங்கவில்லையென்றால் அவர்கள் உள்நாட்டில் பிச்சை எடுத்து கூட சாப்பிடமுடியாது...இதுவும் ஒரு நாள் நடக்கும், நடந்தே தீரும்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
30-மார்-202008:45:12 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Here our communists are behind China. They have been assigned for this when they are in debate they never support india's actions but praise for Keraka, WB and China.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X