ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ஆதித்யநாத்

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

லக்னோ: கொரோனா வைரஸ் பரவுதல் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலானதை அடுத்து, உத்தரபிரதேசத்தில் தொழில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கவேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.latest tamil newsஇந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அமலானது. இதனையடுத்து, தொழில் நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் ஊழியர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உதவி செய்ய வேண்டிய கடமை தொழிலதிபர்களுக்கும் உண்டு.


latest tamil newsயாரும் பணியாற்ற முடியாத சூழல் நிலவும் நிலையில் இதற்காக ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது. ஊழியர்கள் சமூகத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் முதுகெலும்பு. எனவே தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நாட்களுக்கும் ஊழியர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வலதுசாரி மனிதன் முதலாளியே தொழில் நடத்த முடியாம கெடக்கான், கடவுளே கட்ட வண்டிய போராரு, பூசாரிக்கு புல்லட் கேக்குதோ?
Rate this:
Cancel
Sundar - Madurai,இந்தியா
29-மார்-202022:09:03 IST Report Abuse
Sundar How closed companies generate money without manufactured products or serving etc.,? There are bank loan, no sales no generation of money, no employees are available. How companies will pay salary? Central government announced relief measures and work at home. Hence government employees save money towards transport, fuel etc., Atleast 10% salary deduction for three months for government employees. Government should arrange salary for the employees of closed companies and other industries. The statement by CM is not maintainable.
Rate this:
Cancel
29-மார்-202020:33:22 IST Report Abuse
ஆப்பு அப்பாடா... கொரோனாவே நீ இன்னும் ஒரு ஆறுமாசம் வெச்சு செய்யணும். எங்களுக்கும் வூட்டுல இருந்த படியே சம்பளம் வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X