பொது செய்தி

இந்தியா

தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

புதுடில்லி: செய்திதாள்களை விநியோகிக்க அனுமதிக்க வேண்டும் என அனைத்து மாநில தலைமைசெயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.



latest tamil news



இது குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தற்போது நாடு முழுவதும் கொரோனா பதற்றம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தடை செய்ய கூடாது. செஞ்சிலுவை சங்கத்தினர் அவர்களின் சேவையை செய்வதற்கும், மளிகை பொருட்கள் மற்றும் சோப்புகள் , கிருமி நாசினிகள் உட்பட்ட பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.


latest tamil news




மேலும் பால் விநியோகம் மற்றும் செய்தி தாள் விநியோகம் உள்ளிட்டவைகளை அனுமதிக்க வேண்டும். புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்ளுக்கு தேவையான மறுவாழ்வு முகாம், உணவு, மருத்துவசதி போன்றை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
30-மார்-202008:30:09 IST Report Abuse
அசோக்ராஜ் மோடியின் வலது கரம் மாறிடுச்சோ? அமித்பாயை தேட வேண்டியிருக்கே? கட்டம் கட்டியாச்சா? அதிகாரிங்க அறிவிக்கக் தொடங்கிட்டாங்களே? அரசியல் ... உஷ் ....
Rate this:
Cancel
30-மார்-202008:13:11 IST Report Abuse
ஆப்பு நல்லா ரவுண்டு கட்டுங்க. தாப்பாயிருச்சுன்னா உடனே மன்னிப்பு கேட்டுரலாம். உங்களை காக்கவே ரவுண்ட் கட்டுனோம். வேற வழி தெரியலைன்னு சொல்லிரலாம்.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
29-மார்-202023:43:38 IST Report Abuse
Rajas இந்த உள்துறை அமைச்சரகம் டில்லியில் மற்ற மாநில மக்கள் தங்கள் ஊருக்கு சொல்ல கிளம்பிய விவகாரத்தில் என்ன செய்தது. பத்திரிக்கை பிரிண்ட் செய்ய பேப்பர், மற்ற பொருட்கள், ஆட்கள் வேண்டும், பத்திரிகை கொண்டு போக வண்டிகள் மற்றும் டிரைவர்கள் வேண்டும், முக்கியமாக விற்பதற்கு கடைகள் வேண்டும். இதில் மதியத்திற்கு மேல் பெட்ரோல் பங்குகள் வேறு இயங்காது. எங்கோ AC ல் உட்கார்ந்து கொண்டு ஆர்டர் போடும் அதிகார கும்பலை ஒரு நாள் இழுத்து வந்து களத்தில் இறக்கினால் வேலையை விட்டே ஓடி விடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X