பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : மார் 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
இதே நாளில் அன்று

மார்ச், 30, 1709
சென்னை, பெரம்பூரில் பிறந்தவர், ஆனந்தரங்கம் பிள்ளை. புதுச்சேரிக்கு சென்று, பிரெஞ்சு அரசுப் பணியில், உதவியாளராக பணியாற்றி, படிப்படியாக உயர்ந்தார். டியூப்ளெக்ஸ் என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். 'ஆனந்தப் புரவி' எனும் பெயரில், சொந்தமாக பாய்மரக் கப்பல் மூலம் வணிகமும் செய்தார்.
முசபர்சஸ் மன்னர், இவருக்கு, 'மன்சுபேதார்' என்ற கவுரவ பட்டம் அளித்து, செங்கல்பட்டு கோட்டைக்கு தளபதியாக்கினார். அவருக்கென, 3,000 குதிரைகளையும் வழங்கினார்.தன், 27 வயது முதல், 1761ம் ஆண்டு வரை, 25 ஆண்டுகள், 'டைரி' எனும், நாட்குறிப்பு எழுதியுள்ளார். முதன்முதலாக, 'டைரி' எழுத ஆரம்பித்தது இவர் தான். இவரது டைரி, அக்காலத்தில் நடந்த சமூக மாற்றம், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது. அவருடைய டைரிகள், 85 ஆண்டுகள் கழித்தே, நாட்டுக்கு கிடைத்தன. கடந்த, 1761 ஜன., 16ம் தேதி காலமானார். 'நாட்குறிப்பு வேந்தர்' ஆனந்தரங்கம் பிள்ளை பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆல்வின், பெங்களூர் தகவலுக்கு நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X